மகிழ்ச்சியில் மத்திய அரசு ஊழியர்கள்: அகவிலைப்படியை தொடர்ந்து இந்த அலவன்சுகளில் 25% ஏற்றம்

7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி சமீபத்தில் 4 சதவிகிதம் அதிகரிக்கப்பட்டு மொத்த அகவிலைப்படி 50 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. இது ஜனவரி 2024 முதல் அமலில் இருக்கும். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : May 3, 2024, 04:09 PM IST
  • கொடுப்பனவுகள் அதிகரிப்பு குறித்து பல்வேறு பிரிவுகளிடமிருந்து பல சந்தேகங்களும் கேள்விகளும் எழுப்பப்பட்டன.
  • இதற்கான விளக்கம் அரசு சார்பில் அளிக்கப்பட்டுள்ளது.
  • எந்த கொடுப்பனவுகளில் அதிகரிப்பு இருக்கும்?
மகிழ்ச்சியில் மத்திய அரசு ஊழியர்கள்: அகவிலைப்படியை தொடர்ந்து இந்த அலவன்சுகளில் 25% ஏற்றம் title=

7th Pay Commission: நீங்கள் ஒரு மத்திய அரசு ஊழியரா? உங்கள் வீட்டில் யாரேனும் மத்திய பணிகளில் வேலை செய்கிறார்களா? அப்படியென்ரால் இந்த செய்தி உங்களுக்கு மிக உதவியாக இருக்கும். மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி (Dearness Allowance) சமீபத்தில் 4 சதவிகிதம் அதிகரிக்கப்பட்டு மொத்த அகவிலைப்படி 50 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. இது ஜனவரி 2024 முதல் அமலில் இருக்கும். இதைத் தொடர்ந்து குழந்தைகள் கல்வி உதவித்தொகை (CEA) மற்றும் விடுதி மானியம் போன்ற சில கொடுப்பனவுகளும் 25% வரை திருத்தப்பட்டுள்ளன. இதை பற்றி இந்த பதிவில் விரிவாக காணலாம். 

கொடுப்பனவுகள் அதிகரிப்பு குறித்து பல்வேறு பிரிவுகளிடமிருந்து பல சந்தேகங்களும் கேள்விகளும் எழுப்பப்பட்டன. இதைத் தொடர்ந்து, பணியாளர்கள், பொதுக் குறைகள் மற்றும் ஓய்வூதியத் துறை அமைச்சக பணியாளர் மற்றும் பயிற்சித் துறை இது தொடர்பான அனைத்து சந்தேகங்களையும் நிவர்த்தி செய்யும் வகையில் விளக்கம் அளித்துள்ளது.

ஜனவரி 1, 2024 முதல் மத்திய அரசு ஊழியர்களுக்கு (Central Government Employees) வழங்கப்படும் அகவிலைப்படி 50% ஆக உயர்த்தப்பட்டதன் விளைவாக குழந்தைகளின் கல்வி உதவித்தொகை மற்றும் விடுதி மானியத்தின் அளவு குறித்து பல்வேறு தரப்பிலிருந்து குறிப்புகள் பெறப்பட்டு வருவதாக அந்த அறிவிப்பில் பொது குறைகள் துறை தெரிவித்துள்ளது. 

விதியை தெளிவுபடுத்தும் வகையில் பொது குறைகள் துறை, "ஒவ்வொரு முறையும் திருத்தப்பட்ட ஊதியக் கட்டமைப்பின் மீதான அகவிலைப்படி 50% ஆக அதிகரிக்கும் போது  குழந்தைகள் கல்வி உதவித்தொகை மற்றும் விடுதி மானியத்தின் வரம்புகள் தானாகவே 25% உயர்த்தப்படும்." என்று கூறியுள்ளது.

மேலும் படிக்க | SCSS Vs மூத்த குடிமக்களுக்கான வங்கி FD... வட்டி வருமானத்தை அள்ளிக் கொடுப்பது எது..!!

குழந்தைகள் கல்வி உதவித்தொகை (Children Education Allowance)

குழந்தைகளுக்கான கல்வி உதவித்தொகைக்கான ரீயெம்பர்ஸ்மண்ட் தொகை மாதம் ரூ. 2,812.50 (நிலைப்படுத்தப்பட்டது) என்று திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும், விடுதி மானியத்திற்கான (Hostel Subsidy) தொகை மாதம் ரூ. 8,437.50 (நிலைப்படுத்தப்பட்டது) ஆக இருக்கும். அரசு ஊழியர் செய்யும் நிஜ செலவினங்களைப் பொருட்படுத்தாமல், இந்தத் தொகைகள் வரம்பிடப்பட்டுள்ளன என்று திணைக்களம் மேலும் கூறியது.

குழந்தை பராமரிப்புக்கான சிறப்பு கொடுப்பனவு (Special Allowance For Childcare)

இந்த திணைக்களத்தின் அலுவலக குறிப்பாணையில் குறிப்பிடப்பட்டுள்ள இதர நிபந்தனைகளுக்கு உட்பட்டு மாற்றுத்திறனாளி பெண்களுக்கான குழந்தை பராமரிப்புக்கான சிறப்பு கொடுப்பனவு மாதத்திற்கு 3,750 ரூபாயாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

நிலுவைத் தொகை

இந்த திருத்தங்கள் ஜனவரி 1, 2024 முதல் நடைமுறைக்கு வரும்  என்றும் அந்தத் துறை அறிவிப்பில் தெரிவித்துள்ளது. அதாவது ஊழியர்களுக்கு ஜனவரி முதல் இதற்கான அரியர் தொகையும் வழங்கப்படும்.

இதற்கிடையில், விரைவில் அடுத்த ஊதியக்குழு குறித்த அறிவிப்பும் வரலாம் என கூறப்படுகின்றது. 8வது ஊதியக் குழு அமைப்பது குறித்து, இந்திய ரயில்வே தொழில்நுட்ப மேற்பார்வையாளர்கள் சங்கம் (IRTSA) பணியாளர் மற்றும் பயிற்சித் துறையின்  (DoPT) கீழ் உள்ள பணியாளர், பொதுக் குறைகள் மற்றும் ஓய்வூதிய அமைச்சகத்திற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளது. பல வித கோரிக்கைகளுடன், எதிர்கால முரண்பாடுகளுக்கு இடமளிக்காமல் தற்போதைய அனைத்து முரண்பாடுகளையும் நிவர்த்தி செய்ய வேண்டியதன் அவசியத்தையும் கடிதம் எடுத்துக்காட்டியுள்ளது. 

மேலும் படிக்க | ஆதார் கார்ட் தொடர்பாக முக்கிய அறிவிப்பை வெளியிட்ட UIDAI!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News