8th Pay Commission: 8வது மத்திய சம்பள கமிஷன் உருவாக்கம் குறித்த தகவலுக்காக நீண்ட நாட்களாக மத்திய அரசு ஊழியர்களும் (Central Government Employees) ஓய்வூதியதாரர்களும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். இவர்களுக்கு இது தொடர்பான ஒரு பெரிய அப்டேட் வந்துள்ளது. 8-வது ஊதியக் குழு அமைப்பது தொடர்பாக மத்திய அரசிடம் பரிந்துரை வந்துள்ளது என்பதை ஊழியர்கள் அறிய வேண்டும். இது குறித்த தகவல்களை இந்த பதிவில் காணலாம்.
8வது ஊதியக் குழு அமைப்பது குறித்து, இந்திய ரயில்வே தொழில்நுட்ப மேற்பார்வையாளர்கள் சங்கம் (IRTSA) பணியாளர் மற்றும் பயிற்சித் துறையின் (DoPT) கீழ் உள்ள பணியாளர், பொதுக் குறைகள் மற்றும் ஓய்வூதிய அமைச்சகத்திற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளது. பல வித கோரிக்கைகளுடன், எதிர்கால முரண்பாடுகளுக்கு இடமளிக்காமல் தற்போதைய அனைத்து முரண்பாடுகளையும் நிவர்த்தி செய்ய வேண்டியதன் அவசியத்தையும் கடிதம் எடுத்துக்காட்டியுள்ளது.
8வது ஊதியக் குழுவின் உருவாக்கம்
பொதுவாக, ஊதியம், கொடுப்பனவுகள் மற்றும் இதர வசதிகள்/பயன்கள்/ உள்ளிட்ட ஊதியங்களின் கட்டமைப்பை நிர்வகிக்க வேண்டிய கொள்கைகள் தொடர்பான மாற்றங்களை ஆய்வு செய்யவும், மதிப்பாய்வு செய்யவும், மேம்படுத்தவும், அடுத்த கட்ட நடவடிக்கைகளை பரிந்துரைப்பதற்காகவும் பத்து வருட இடைவெளியில் மத்திய ஊதியக் குழு அமைக்கப்படுகிறது. 3வது, 4வது மற்றும் 5வது ஊதியக் குழுக்கள் மத்திய அரசு ஊழியர்களின் ஊதியம், அலவன்ஸ்கள் மற்றும் சேவை நிபந்தனைகளை அவ்வப்போது மறுஆய்வு செய்ய நிரந்தர செயல்முறைகளை அமைக்க பரிந்துரைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
8வது சம்பள கமிஷன்: IRTSA விடுத்துள்ள முக்கிய கோரிக்கைகள் என்ன?
IRTSA இன் கடிதம் பல முக்கிய கோரிக்கைகளை முன்வைத்துள்ளது.
- முதல் கோரிக்கையில் புதிய மத்திய ஊதியக் குழுவை அமைத்து பல்வேறு குழுக்களின் ஊழியர்களின் சம்பளத்தில் உள்ள வேறுபாடுகள் மற்றும் முரண்பாடுகளை சரிசெய்யுமாறு சங்கம் அரசாங்கத்தை கோருகிறது.
- சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள், பணி நிலைமைகள், பதவி உயர்வுக்கான செயல்முறைகள் மற்றும் பிந்தைய வகைப்பாடுகள் தொடர்பான அனைத்து முரண்பாடுகளையும் அகற்றும் முயற்சியில் ஊதியக் குழுவிற்கு போதுமான நேரம் ஒதுக்கப்பட வேண்டும் என சங்கம் விரும்புகிறது.
DA Hike: 8வது சம்பள கமிஷனின் தாக்கம் டிஏ உயர்வு, சம்பள திருத்தம் போன்றவற்றில் இருக்குமா?
மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி (Dearness Allowance) உயர்வு மற்றும் சம்பள திருத்தத்திற்கு 8வது ஊதியக் குழுவின் உருவாக்கம் நிச்சயமாக உதவும்.
8வது ஊதியக் குழுவை அமைக்க வேண்டிய அவசியம் என்ன?
பல்வேறு குழுக்களுக்கிடையில் உள்ள ஊதிய முரண்பாடுகள்/ முரண்பாடுகளை களையவும், மேலே விவரிக்கப்பட்ட காரணங்களுக்காகவும் புதிய ஊதியக் குழுவை அமைப்பது அவசியமாகிறது என பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறையின் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், ஊதியம் & கொடுப்பனவு, பணி நிலைமைகள், பதவி உயர்வுக்கான செயல்முறைகள், பதவிகளின் வகைப்பாடு தொடர்பான அனைத்துக் கொள்கைகளையும் ஆய்வு செய்ய ஊதியக் குழுவுக்கு கூடுதல் கால அவகாசம் வழங்கப்பட வேண்டும் என்றும் அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
தற்போதுள்ள அனைத்து முரண்பாடுகளையும் களைய விரிவான பரிந்துரைகளை வழங்குவதற்கு போதுமான கால அவகாசம் வழங்கவும், எதிர்கால முரண்பாடுகளுக்கு இடமளிக்காமல் 8 வது மத்திய ஊதியக் குழுவை உடனடியாக அமைக்குமாறும் அந்த கடிதத்தில் கோரப்பட்டுள்ளது.
ஜூன் 4 மக்களவைத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டவுடன் அமையும் புதிய அரசு செய்யப்போகும் முதல் கட்ட பணிகளில் 8வது ஊதியக்குழுவின் உருவாகமும் கண்டிப்பாக இருக்கும் என பொருளாதார நிபுணர்கள் கருதுகிறார்கள்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ