ஜாக்கிரதை! இத்தனை 2000 ரூபாய் நோட்டுக்கு மேல் மாற்றினால் வருமான வரி நோட்டீஸ்!

ரூ.2,000 நோட்டுகளை டெபாசிட் செய்யவோ அல்லது மாற்றவோ நீங்கள் திட்டமிட்டால், நிதி பரிவர்த்தனை அறிக்கையின் (எஸ்எஃப்டி) விதிகளை முதலில் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.    

Written by - RK Spark | Last Updated : May 27, 2023, 12:16 PM IST
  • வங்கிகளில் ரொக்க வைப்புத்தொகைக்கான வருடாந்திர அதிகபட்ச வரம்பு சேமிப்புக் கணக்கிற்கு ரூ.10 லட்சம்.
  • ஒருவர் தனது கணக்கில் ஒரு நிதியாண்டில் ரூ.50 லட்சம் வரை டெபாசிட் செய்து கொள்ளலாம்.
  • வங்கியில் ரூ.50,000க்கு மேல் டெபாசிட் செய்யும் போதெல்லாம் பான் கார்டு அவசியம்.
ஜாக்கிரதை! இத்தனை 2000 ரூபாய் நோட்டுக்கு மேல் மாற்றினால் வருமான வரி நோட்டீஸ்! title=

இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) இதுவரை புழக்கத்தில் இருந்து வந்த ரூ.2000 நோட்டுக்களை திரும்பப்பெறுவதாக அறிவித்த பிறகு ரூ.2000 நோட்டுக்களை வைத்திருக்கும் பலரும் வங்கிகளில் டெபாசிட் செய்து, வங்கிகளில் பரிமாற்றியும் வருகின்றனர்.  ரூ.2000 நோட்டுக்களை மாற்றிக்கொள்ள செப்டம்பர் மாதத்தின் இறுதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டு இருப்பதால் மக்கள் அவசரப்பட வேண்டாம் என்றும் ரிசர்வ் வங்கி கேட்டுக் கொண்டுள்ளது.  இருப்பினும் உங்களிடம் இருக்கும் ரூ.2,000 நோட்டுகளை டெபாசிட் செய்யவோ அல்லது மாற்றவோ நீங்கள் திட்டமிட்டால், நிதி பரிவர்த்தனை அறிக்கையின் (எஸ்எஃப்டி) விதிகளை முதலில் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.  நீங்கள் சில முக்கியமான விதிகளை தெரிந்துகொள்ளாமல் இருந்தீர்கள் என்றால் வருமான வரித் துறையின் நோட்டீஸ் உங்கள் வீட்டு கதவை தட்டும்.

வருமான வரிச்சட்டம், வரி செலுத்துவோரால் மேற்கொள்ளப்படும் அதிக மதிப்புள்ள பரிவர்த்தனைகளைக் கண்காணிக்க நிதி பரிவர்த்தனை அறிக்கை அல்லது அறிக்கையிடக்கூடிய கணக்கு என்ற கருத்தை வரையறுத்துள்ளது.  ஒரு நபர் ஒரு நிதியாண்டில் மேற்கொள்ளும் உயர் மதிப்பு பரிவர்த்தனைகளின் குறிப்பிட்ட தொகுப்பின் தரவை சேகரிக்க வரி அதிகாரிகளால் அறிக்கை பயன்படுத்தப்படும்.  எஸ்எஃப்டி விதியின்படி, ஏதேனும் குறிப்பிடத்தக்க பணப் பரிவர்த்தனைகள் நடந்தால் வங்கிகள், வருமான வரித் துறையை எச்சரிக்க வேண்டும்.  இந்த தகவலை டெபாசிட்டரின் வருடாந்திர தகவல் அறிக்கை (ஏஐஎஸ்) மற்றும் படிவம் 26ASல் காணலாம்.  வங்கிகளில் ரொக்க வைப்புத்தொகைக்கான வருடாந்திர அதிகபட்ச வரம்பு சேமிப்புக் கணக்கிற்கு ரூ. 10 லட்சம் ஆகும்.  நடப்புக் கணக்கைப் பொறுத்தவரை, ஒருவர் தனது கணக்கில் ஒரு நிதியாண்டில் ரூ.50 லட்சம் வரை டெபாசிட் செய்து கொள்ளலாம்.

மேலும் படிக்க | ஊழியர்களுக்கு மாஸ் செய்தி, Old Pension Scheme நன்மைகள் கிடைக்கும்: இதை செய்தால் போதும்

வங்கி சேமிப்பு கணக்கில் ஒரு குறிப்பிட்ட தொகையை டெபாசிட் செய்வதற்கு முன் நீங்கள் சில ஆவணங்களை வங்கியில் சமர்ப்பிக்க வேண்டியது அவசியம்.  இதற்கு முதலில் நீங்கள் வங்கிக்குச் சென்று பண டெபாசிட் சீட்டைப் பூர்த்தி செய்ய வேண்டும்.  அந்த படிவத்தில் கணக்கு எண், பெயர் மற்றும் பிற விவரங்கள் உட்பட உங்கள் வங்கித் தகவலை நிரப்ப வேண்டும்.  வருமான வரி விதிமுறைகளைப் பின்பற்றி, நீங்கள் வங்கியில் ரூ.50,000க்கு மேல் டெபாசிட் செய்யும் போதெல்லாம் பான் கார்டை அவசியம் கொடுக்க வேண்டும்.  எனவே, நீங்கள் அதிகளவில் ரூ.2,000 நோட்டுகளை டெபாசிட் செய்ய போகிறீர்கள் என்றால் கண்டிப்பாக அதனுடன் பான் கார்டையும் கொண்டு செல்லுங்கள்.  டெபாசிட் செய்யப்பட்ட பணத்திற்கான வருமான ஆதாரம் குறித்து வங்கிகள் அடிக்கடி கேட்பதால், நீங்கள் அதை டெபாசிட் சீட்டில் குறிப்பிடலாம்.

மேலும் இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ, அதன் கிளைகளுக்கு அதிகாரப்பூர்வ குறிப்பில் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றும் போது அல்லது டெபாசிட் செய்யும் போது எந்த படிவமும் அல்லது சீட்டும் தேவையில்லை என்று தெளிவுபடுத்தியுள்ளது. முக்கிய வங்கிகள் அடையாளச் சான்று மற்றும் படிவங்கள் குறித்து தனித்தனி வழிகாட்டுதல்களை வைத்திருப்பது தற்போது உறுதியாகியுள்ளது. ஒவ்வொரு வங்கியும், அதில் வெவ்வேறு நடைமுறையை பின்பற்றி வருவது தெரிகிறது. வங்கியில் 2000 ரூபாயை மாற்ற வரும்போது, அவருக்கு தங்கள் வங்கியில் கணக்கு இல்லை என்றால் படிவம்/அடையாளச் சான்று கேட்கிறோம் என்று கோட்டக் வங்கி தெரிவித்துள்ளது. ஆக்சிஸ் வங்கி, ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட், யெஸ் பேங்க் மற்றும் பேங்க் ஆஃப் இந்தியா உள்ளிட்டவை படிவம் அல்லது அடையாளச் சான்று எதையும் கட்டாயப்படுத்தவில்லை என்று கூறியுள்ளன. 

மேலும் படிக்க | 7th Pay Commission: மே 31 டிஏ ஹைக் பற்றிய முக்கிய அறிவிப்பு... விரைவில் சம்பள உயர்வு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News