FD Interest: நிலையான வைப்புத்தொகை திட்டத்தில் பணம் போடுபவர்கள் இந்த நேரத்தில் மகிழ்ச்சியாகிவிட்டனர் என கூறலாம். பொதுத்துறை வங்கியோ அல்லது தனியார் வங்கியோ, அனைத்து வங்கிகளும் நிலையான வைப்புத்தொகைக்கான வட்டி விகிதங்களை அதிகரித்து வருகின்றன.
இப்போது மற்றொரு பொதுத்துறை வங்கியும் நிலையான மீதான விகிதத்தை அதிகரித்துள்ளது. பாங்க் ஆஃப் இந்தியா ஒரு வருட கால அவகாசத்துடன் நிலையான திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை அதிகரித்துள்ளது. இந்த நிலையான வைப்புத்தொகை திட்டத்துக்கான வட்டி விகிதத்தை வங்கி 7 சதவீதமாக உயர்த்தியுள்ளது. 2 கோடி ரூபாய்க்கும் குறைவான டெபாசிட் உள்ள வாடிக்கையாளர்களுக்கு இந்த கட்டண உயர்வு செய்யப்பட்டுள்ளது.
வட்டி எவ்வளவு?
7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான வைப்புத்தொகை திட்டங்களில், வங்கி பொது வாடிக்கையாளர்களுக்கு 3 முதல் 7 சதவீதம் வரை வட்டி விகிதங்களை வழங்குகிறது. வங்கி ஒரு வருட நிலையான வைப்புத்தொகை திட்டங்களில் மூத்த குடிமக்களுக்கு 7.50 சதவீதமும், சூப்பர் மூத்த குடிமக்களுக்கு 7.65 சதவீதமும் வட்டி விகிதத்தை வழங்குகிறது. மேம்படுத்தப்பட்ட வட்டி விகிதங்கள் உள்நாட்டு, NRO மற்றும் NRE வைப்புகளுக்கு பொருந்தும்.
மேலும் படிக்க | 7th Pay Commission: மே 31 டிஏ ஹைக் பற்றிய முக்கிய அறிவிப்பு... விரைவில் சம்பள உயர்வு
Fincare வங்கி
சிறு நிதி வங்கிகளும் நிலையான வைப்புத்தொகை திட்டங்களில் மிகவும் கவர்ச்சிகரமான வட்டி விகிதங்களை வழங்குகின்றன. ஃபின்கேர் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி ரூ.2 கோடிக்கும் குறைவான டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதங்களை மாற்றியுள்ளது. புதிய நிலையான வைப்புத்தொகை திட்டத்தின் விகிதங்கள் மே 25ஆம் தேதி முதல் அமலுக்கு வருகின்றன. இப்போது சாதாரண குடிமக்கள் 1000 நாட்கள் நிலையான வைப்புத்தொகை திட்டத்துக்கு 8.51 சதவீதம் வட்டி விகிதத்தைப் பெறலாம்.
மூத்த குடிமக்களுக்கு...
1000 நாட்கள் நிலையான வைப்புத்தொகை திட்டத்துக்கு, வங்கி மூத்த குடிமக்களுக்கு 9.11 சதவீதம் வரை வட்டி விகிதத்தை வழங்குகிறது. FD இல் இந்த வட்டி விகிதத்தைப் பெறுவதற்கான குறைந்தபட்ச வைப்பு வரம்பு ரூ. 5,000 ஆகும். Fincare Small Finance வங்கி மூத்த குடிமக்களுக்கு 7 நாட்கள் முதல் 84 மாதங்கள் வரையிலான FD களில் 3.60 சதவீதம் முதல் 9.11 சதவீதம் வரை வட்டி விகிதத்தை வழங்குகிறது.
மேலும் படிக்க | அடேங்கப்பா...இந்தியாவிலேயே இந்த ஊரில் தான் சம்பளம் அதிகம் - முழு விவரம்