Bharat Atta: ரூ.27.50 மானிய விலையில் கோதுமை மாவு! மத்திய அரசின் தீபாவளி கிஃப்ட்

Centre launches sale of Bharat Atta: மானிய விலையில் கோதுமை மாவு விற்பனையை மத்திய அரசு திங்கள்கிழமை முறையாக அறிமுகப்படுத்தியது.

Written by - Malathi Tamilselvan | Last Updated : Nov 7, 2023, 08:44 AM IST
  • மானியத்தில் கோதுமை மாவு வழங்கும் மத்திய அரசு
  • 8,000 மெட்ரிக் டன் அளவிலான கோதுமை மாவுகள் விநியோகிக்கப்படும்
  • மத்திய அரசின் தீபாவளிப் பரிசு
Bharat Atta: ரூ.27.50 மானிய விலையில் கோதுமை மாவு! மத்திய அரசின் தீபாவளி கிஃப்ட் title=

புதுடெல்லி: பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தவும், அத்தியாவசியப் பொருட்களை சாமானியர்களுக்குக் கட்டுப்படியாகக் கூடியதாகவும் மாற்றுவதற்கான அரசின் முயற்சிகளின் ஒரு பகுதியாக 'பாரத் ஆட்டா' திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் சுமார் 80 கோடி பேர் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிகரிக்கும் விலைவாசியில் இருந்து நுகர்வோருக்கு நிவாரணம் அளிக்கும் வகையில், நாடு முழுவதும் ‘பாரத் ஆட்டா’ என்ற பெயரில் ஒரு கிலோவுக்கு ரூ.27.50 என்ற மானிய விலையில் கோதுமை மாவு விற்பனையை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது.

கோதுமை மாவு தற்போது ரூ. 36 முதல் 70 வரையில் நாட்டின் பல்வேறு இடங்களிலும் விற்கப்படுகிறது. மக்களுக்கு நிம்மதி அளிக்கும் விலையில், சந்தை விலையில் இருந்து மிகவும் குறைந்த விலையில் மானியத்தில் கோதுமை மாவு விநியோகிக்கப்படுகிறது. மானிய விலையில் கோதுமை மாவு விற்பனையை மத்திய அரசு திங்கள்கிழமை முறையாக அறிமுகப்படுத்தியது. தீபாவளிக்கு முன்னதாக இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது மக்களுக்கு பண்டிகை காலத் தேவைகளை பூர்த்தி செய்யும்.

மானியத்தில் கோதுமை மாவு வழங்கும் திட்டம்  
பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தவும், அத்தியாவசியப் பொருட்களை சாமானியர்களுக்குக் கட்டுப்படியாகக் கூடியதாகவும் மாற்றுவதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளின் ஒரு பகுதியாக தொடங்கப்பட்டிருக்கும் ‘பாரத் ஆட்டா’  திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் சுமார் 80 கோடி பேர் பயனடைவார்கள் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

‘பாரத் ஆட்டா’ NAFED, NCCF மற்றும் Kendriya Bhandar ஆகிய கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் 800 மொபைல் வேன்கள் மற்றும் 2,000-க்கும் மேற்பட்ட விற்பனை நிலையங்கள் மூலம் நாடு முழுவதும் விற்பனை செய்யப்படும்.

மேலும் படிக்க | ரயில்வே ஊழியர்களுக்கு டபுள் ஜாக்பாட்: தீபாவளி போனஸை தொடர்ந்து அதிரடி டிஏ ஹைக்

விலை நிலைப்படுத்துதல் நிதித் திட்டத்தின் ஒரு பகுதியாக, கடந்த பிப்ரவரியில், ஒரு சில விற்பனை நிலையங்களில், ‘பாரத் ஆட்டா’வை கிலோவுக்கு ரூ.29.50 என்ற விலையில் விற்பனை செய்ய தொடங்கியது மத்திய அரசு. அதில், 18,000 மெட்ரிக் டன் அளவிலான கோதுமை மாவுகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

‘பாரத் அட்டா’வின் 100 மொபைல் வேன்கள் 
டெல்லி கர்தவ்யா பாதையில், மத்திய உணவு மற்றும் நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் 'பாரத் ஆட்டா'வின் 100 மொபைல் வேன்களை கொடியசைத்து துவக்கி வைத்தார். அப்போது பேசிய அவர், "இந்தத் திட்டம் முதலில் சோதனை அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வெற்றி பெற்றுள்ளது. எனவே, நாட்டில் எல்லா இடங்களிலும் ஒரு முறையான அறிமுகம் செய்ய முடிவு செய்துள்ளோம். ஒரு கிலோ கோதுமை மாவு 27.50 ரூபாய்க்கு கிடைக்கும். சோதனை ஓட்டத்தின் போது கோதுமை மாவு ஒரு சில கடைகளில் மட்டுமே சில்லறை விற்பனை செய்யப்பட்டதால் விற்பனை குறைவாக இருந்தது. தற்போது, நாடு முழுவதும் உள்ள NAFED, NCCF மற்றும் கேந்திரிய பண்டார் என மூன்று ஏஜென்சிகளின் 800 மொபைல் வேன்கள் மற்றும் 2,000 விற்பனை நிலையங்கள் வழியாக பாரத் ஆட்டா விற்பனை செய்யப்படும்’ என்று தெரிவித்தார்.  

இந்திய உணவுக் கழகம்

இந்திய உணவுக் கழகத்திடமிருந்து (FCI) சுமார் 2.5 லட்சம் மெட்ரிக் டன் கோதுமை கிலோ ஒன்றுக்கு 21.50 ரூபாய்க்கு Nafed, NCCF மற்றும் கேந்திரிய பண்டார் ஆகியவற்றிற்கு ஒதுக்கப்படும் என்று கோயல் கூறினார். இந்த கோதுமை மாவாக அரைக்கப்பட்டு, ‘பாரத் ஆட்டா’ என்ற பெயரில் கிலோ ஒன்றுக்கு ரூ.27.50க்கு விற்பனை செய்யப்படும்.

மேலும் படிக்க | சீனியர் சிட்டிசன்களுக்கு NO சொன்ன ரயில்வே! மூத்த குடிமக்களுக்கே இந்த நிலைமையா?

கோதுமை மாவின் விலையை கட்டுப்படுத்தவும், கிடைப்பதை அதிகரிக்கவும் உதவும் என்று கூறிய மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்,  தக்காளி, வெங்காயம், கடலைப் பருப்பு போன்ற அத்தியாவசியப் பொருட்களில் சிலவற்றை மானிய விலையில் விற்பனை செய்யும் மத்திய அரசாங்கத்தின் தலையீடு, விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்துவதில் நல்ல பலனைத் தருவதாக கூறினார்.

மொத்தமுள்ள 2.5 லட்சம் டன் கோதுமையில், நாஃபெட் மற்றும் என்சிசிஎஃப் நிறுவனங்களுக்கு தலா ஒரு லட்சம் டன்களும், கேந்திரிய பண்டாருக்கு 50,000 டன்களும் வழங்கப்படும் என நுகர்வோர் விவகாரச் செயலாளர் ரோஹித் குமார் தெரிவித்தார். இந்த மூன்று ஏஜென்சிகளின் மொபைல் வேன்கள் மற்றும் விற்பனை நிலையங்களில் கோதுமை மாவு கிலோ ரூ.27.50க்கும், கடலைப் பருப்பு கிலோ ரூ.60க்கும், வெங்காயம் கிலோ ரூ.25க்கும் விற்கப்படும்.

இந்நிகழ்ச்சியில் உணவு மற்றும் நுகர்வோர் விவகாரங்களுக்கான இணை அமைச்சர்கள் அஷ்வினி குமார் சௌபே மற்றும் சாத்வி நிரஞ்சன் ஜோதி, உணவுத்துறை செயலாளர் சஞ்சீவ் சோப்ரா மற்றும் நாஃபெட், என்சிசிஎஃப் மற்றும் கேந்திரிய பண்டார் ஆகியவற்றின் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க | விவசாயிகளுக்கு பம்பர் பரிசு! ரூ.15 லட்சம் தரும் திட்டத்திற்கு விண்ணப்பிக்கவில்லையா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News