PPF மூலம் அதிக லாபம் காண வேண்டுமா? இதை கண்டிப்பாக செய்யுங்கள்

PPF: நீங்கள் உங்கள் பணத்தை பொது வருங்கால வைப்பு நிதியில் முதலீடு செய்திருந்தால், அரசாங்கத்தின் இந்த பெரிய முடிவைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்வது அவசியம் ஆகும்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jul 22, 2023, 11:27 PM IST
  • ஒரு வருடத்தில் பிபிஎப் -இல் ரூ.1.5 லட்சத்தை டெபாசிட் செய்யலாம்.
  • இந்த தேதியில் பணத்தை டெபாசிட் செய்வது அவசியம்
  • 5 ஆம் தேதி முதலீடு செய்வதால் என்ன பலன்?
PPF மூலம் அதிக லாபம் காண வேண்டுமா? இதை கண்டிப்பாக செய்யுங்கள் title=

பிபிஎஃப் கணக்கு: மக்கள் முதலீடு செய்து அதிக லாபத்தை ஈட்டக்கூடிய பல திட்டங்கள் இந்திய அரசால் நடத்தப்பட்டு வருகின்றன. இதில் முதலீட்டாளர்கள் முதலீடு செய்வதன் மூலம் நல்ல லாபத்தைப் பெறுகிறார்கள். பொது வருங்கால வைப்பு நிதி கணக்கும் இதில் ஒன்றாகும். இப்போது பிபிஎஃப் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது. நீங்கள் உங்கள் பணத்தை பொது வருங்கால வைப்பு நிதியில் முதலீடு செய்திருந்தால், அரசாங்கத்தின் இந்த பெரிய முடிவைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்வது அவசியம் ஆகும்.

அதிக பலன்கள்

நீங்கள் ஒவ்வொரு மாதமும் 5 ஆம் தேதி உங்கள் பிபிஎஃப் கணக்கில் முதலீடு செய்தால், அதிலிருந்து அதிக பலன்களைப் பெறலாம். இந்தத் தேதியில் முதலீடு செய்வதன் மூலம் நீங்கள் எப்படி அதிக வருமானத்தைப் பெற முடியும் என்பதை இந்த பதிவில் விரிவாக காணலாம். 

இந்த தேதியில் பணத்தை டெபாசிட் செய்வது அவசியம்

இந்தத் திட்டத்தில், முதலீட்டாளர்கள் ஒவ்வொரு மாதமும் 15 ஆம் தேதியன்று கணக்கில் பணத்தை டெபாசிட் செய்ய வேண்டும். பிபிஎஃப் கணக்கு வைத்திருப்பவர்கள் இதைச் செய்யவில்லை என்றால், அந்த மாதத்திற்கான வட்டி அவர்களுக்கு வழங்கப்படாது.

5 ஆம் தேதி முதலீடு செய்வதால் என்ன பலன்?

முதலீட்டாளர்கள் ஒவ்வொரு மாதமும் 5 ஆம் தேதி பிபிஎஃப் கணக்கில் முதலீடு செய்தால், அதன் மூலம் அவர்களுக்கு அதிக பலன் கிடைக்கும். ஒரு வருடத்தில் பிபிஎப் -இல் ரூ.1.5 லட்சத்தை டெபாசிட் செய்யலாம். எளிமையாக கூற வேண்டுமானால், ஏப்ரல் 20 ஆம் தேதி இந்தத் தொகையை உங்கள் பிபிஎஃப் கணக்கில் டெபாசிட் செய்தால், அந்த ஆண்டில் உங்களுக்கு 11 மாதங்களுக்கு மட்டுமே வட்டி கிடைக்கும்.  மறுபுறம், இந்த தொகையை ஏப்ரல் 5 ஆம் தேதி கணக்கில் போட்டால், உங்களுக்கு ரூ.10,650 லாபம் கிடைக்கும்.

மேலும் படிக்க | 7th Pay Commission:ஊழியர்களுக்கு அடிச்சது லாட்டரி.. அரியர் தொகையும் வரி விலக்கும் கிடைக்கும்

இதுதான் PPF -இல் கிடைக்கும் வட்டி விகிதம்

இந்த திட்டத்தின் கீழ், 7.1 சதவீத வட்டி விகிதம் அரசால் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதமும் 5 ஆம் தேதி முதல் கடைசித் தேதி வரை குறைந்தபட்ச இருப்புத் தொகை எதுவாக இருந்தாலும், அதே மாதத்தில் வட்டி வரத் தொடங்கும். இதுபோன்ற சூழ்நிலையில், முதலீட்டாளர்கள் 5 ஆம் தேதிக்குப் பிறகு எந்தப் பணத்தை டெபாசிட் செய்தாலும், அடுத்த மாதத்திலிருந்து அவர்களுக்கு வட்டி பலன் கிடைக்கும்.

கணக்கை ஒரு முறை மட்டுமே திறக்க முடியும்

பிபிஎஃப் -இல் ஒரு நபர் ஒரு கணக்கை மட்டுமே வைத்திருக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. தகவலின்படி, டிசம்பர் 12, 2019 -க்குப் பிறகு, ஒரே நபரின் பெயரில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றுக்கும் மேற்பட்ட கணக்குகள் மூடப்படும். இவற்றுக்கு வட்டி எதுவும் செலுத்தப்படாது. அதே நேரத்தில், பல பிபிஎஃப் கணக்குகளை இணைப்பதும் தடைசெய்யப்பட்டுள்ளது.

கூடுதல் தகவல்

சிறுசேமிப்பு திட்டங்களின் விதிகளில் மாற்றம்: சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்துள்ளவர்களுக்கு ஒரு முக்கிய செய்தி உள்ளது. பொது வருங்கால வைப்பு நிதி (PPF), மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் (SCSS), சுகன்யா சம்ரித்தி யோஜனா / செல்வமகள் சேமிப்பு திட்டம் (SSY), மகிளா சம்மான் யோஜனா மற்றும் தபால் அலுவலக திட்டம் ஆகியவற்றில் முதலீடு செய்பவர்களுக்கான விதிகளை அரசாங்கம் மாற்றியுள்ளது.

இப்போது இந்தத் திட்டங்களில் முதலீடு செய்பவர்கள் பான் மற்றும் ஆதார் அட்டை வைத்திருக்க வேண்டும். இந்த மாற்றம் ஏப்ரல் 1, 2023 முதல் அமலுக்கு வந்துள்ளது. நீங்கள் இந்த அரசு சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்திருந்து, உங்களிடம் பான் அல்லது ஆதார் அட்டை இல்லை என்றால், அவற்றை உடனடியாக பெறுவது நல்லது. 

மேலும் படிக்க | Income tax return: ஐடிஆரில் அதிகபட்ச பணத்தைத் திரும்பப் பெற 5 வழிகள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

 

Trending News