மூத்த குடிமக்களுக்கு இலவச பயண வசதி: நாடு முழுவதும் மத்திய மற்றும் மாநில அரசுகளால் பெண்கள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு தற்போது பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் நீங்களும் பயணம் செய்பவராக இருந்தால், உங்களுக்காக ஒரு பெரிய அறிவிப்பு ஒன்று மாநில அரசால் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இனி பெண்கள் மற்றும் மூத்த குடிமக்கள் பாதி விலையில் டிக்கெட் கட்டணத்தை செலுத்தினால் போதும். ஏனெனில் தற்போது டிக்கெட் கட்டணத்தை மாநில அரசு (State Government) குறைத்துள்ளது. எனவே இப்போது பயணத்தின் போது மக்கள் 50 சதவிகிதம் அதாவது பாதி கட்டணத்தை (Ticket Price) மட்டும் எங்கே செலுத்த வேண்டும் என்பதை தெரிந்துக்கொள்வோம்.
பாதி கட்டணம் மட்டுமே செலுத்த வேண்டும்
இந்த நிலையில் இந்த சிறப்பு வசதியை மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா மாநில அரசாங்கத்தால் ஏப்ரல் மாதத்தில் தொடங்கப்பட்டது. மகாராஷ்டிராவில் மகிளா சம்மன் யோஜனா திட்டத்தின் கீழ் பெண்களுக்கான பேருந்து டிக்கெட் கட்டணம் 50 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், மூத்த குடிமக்களுக்கும் இந்த வசதி அளிக்கப்படுகிறது. இதில், 65 முதல் 75 வயதுக்குட்பட்ட மூத்த குடிமக்கள் பயன் பெறுகின்றனர். அதே நேரத்தில், 75 வயதுக்கு மேற்பட்ட குடிமக்களுக்கு மாநிலத்தில் பேருந்து சேவை இலவசம்.
மேலும் படிக்க | பெட்ரோல் - டீசல் விலை ரூ. 4-5 வரை குறைய வாய்ப்பு! எப்போது இருந்து தெரியுமா?
பஸ் கட்டணத்தில் தள்ளுபடி
இந்தச் சலுகையானது மாநில அரசால் பேருந்துக் கட்டணத்தில் தரப்படுகிறது. இந்த வசதியை அரசு போக்குவரத்து கழகம் செய்து வருகிறது. முன்னதாக பட்ஜெட் கூட்டத்தொடரின் போது மகாராஷ்டிர துணை முதல் அமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் இந்த சிறப்பு வசதியை அறிவித்து இருந்தார். இதனுடன், மூத்த குடிமக்களுக்கான டிக்கெட் கட்டணத்தையும் ஹரியானா அரசு குறைத்துள்ளது.
இந்த வசதி ஏப்ரல் மாதம் முதல் மட்டுமே அமலுக்கு வரும்
மூத்த குடிமக்களுக்கான கட்டணம் 50 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. ஹரியானா மாநிலத்தில் வசிக்கும் மக்களுக்கு மட்டுமே இந்த சலுகை கிடைக்கும். இந்த வசதியைப் பயன்படுத்திக் கொள்ள, பேருந்தில் பயணம் செய்யும் போது டிக்கெட் முன்பதிவு செய்யும் போது ஹரியானாவின் குடியிருப்புச் சான்றிதழைக் காட்ட வேண்டும். மேலும் இந்த சிறப்பு வசதியானது ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.
பல மாநிலங்களிலும் இந்த வசதி உள்ளது
முன்னதாக ஹரியானா மாநிலத்தில் 60 வயது பெண்கள் மட்டுமே இந்த வசதியைப் பெற்று வந்தனர், ஆனால் இனி 65 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் அனைவருக்கும் மட்டுமே இந்த சலுகை கிடைக்கும். இதனிடையே டெல்லி மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் பெண்களுக்கு பேருந்து பயணம் இலவசம். இது தவிர, மூத்த குடிமக்களுக்கும் கர்நாடகா மற்றும் ஆந்திராவில் பேருந்து கட்டணத்தில் சலுகை வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில் தமிழ்நாட்டிலும் இதுபோன்ற சலுகை சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. ஆனால் அது மூத்த குடிமக்களுக்கானது மட்டுமல்ல; அனைவருக்கும் பொருந்தும். ஒரு மாதத்தில் 5 முறைக்கு மேல் SETC பேருந்துகளில் டிக்கெட் புக்கிங் செய்து பயணித்தால் 50 சதவீத கட்டணத் தள்ளுபடி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | PPF விதிகளில் பெரிய மாற்றம்! நிதியமைச்சர் புதிய உத்தரவு! முழு விவரம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ