Indian Railways: மூத்த குடிமக்களுக்கான ஜாக்பாட் செய்தி, புதிய விதியை தெரிந்துகொள்ளுங்கள்

Indian Railways: மூத்த குடிமக்களுக்கான பயண விதிகளில் ரயில்வே மாற்றம் செய்துள்ளது. மூத்த குடிமக்களுக்கு ரயில்வே சார்பில் பெரிய பரிசு வழங்கப்பட்டுள்ளது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Apr 27, 2023, 05:08 PM IST
  • மூத்த குடிமக்களுக்காக ரயில்வே புதிய விதிகளை உருவாக்கியுள்ளது.
  • இதன் கீழ் டிக்கெட் முன்பதிவு செய்யலாம்.
  • ரயில்வேயின் புதிய விதி பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
Indian Railways: மூத்த குடிமக்களுக்கான ஜாக்பாட் செய்தி, புதிய விதியை தெரிந்துகொள்ளுங்கள் title=

இந்திய ரயில்வேயின் சமீபத்திய செய்திகள்: ரயிலில் அவ்வப்போது பயணம் செய்யும் நபரா நீங்கள்? அப்படியென்றால் இந்த செய்தி உங்களுக்கு உபயோகமாக இருக்கும். இந்திய ரயில்வே பயணிகளின் வசதிக்காக அவ்வப்போது பல மாற்றங்களை செய்கிறது. ரயில் பயணிகளுக்கு உயர் பாதுகாப்பு மற்றும் வசதிகளை வழங்க பல வித புதுப்பிப்புகளை இந்திய ரயில்வே அவ்வப்போது வழங்குகிறது.

மூத்த குடிமக்களுக்கான பயண விதிகளில் ரயில்வே மாற்றம் செய்துள்ளது. மூத்த குடிமக்களுக்கு ரயில்வே சார்பில் பெரிய பரிசு வழங்கப்பட்டுள்ளது. மூத்த குடிமக்களுக்காக ரயில்வே புதிய விதிகளை உருவாக்கியுள்ளது. இதன் கீழ் டிக்கெட் முன்பதிவு செய்யலாம். ரயில்வேயின் புதிய விதி பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். 

கீழ் பெர்த் ஒதுக்கீடு பற்றிய தகவல் 

பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு ரயில்வே தனது சேவையை மேம்படுத்தி வருகிறது. இந்த மேம்படுத்தல்களால் பயணிகள் எளிதான மற்றும் வசதியான பயணத்தை அனுபவிக்கலாம். மூத்த குடிமக்களுக்கு லோயர் பெர்த்களை எளிதாக ஒதுக்குவது பற்றிய தகவலை IRCTC வழங்கியுள்ளது. 

சமீபத்தில், பயணி ஒருவர், ‘எனது மாமாவுக்கு ரயில் டிக்கெட் புக் செய்துதிருந்தேன். இதில் அவருக்கு காலில் பிரச்னை இருந்ததால் லோயர் பெர்த்துக்கு முன்னுரிமை கொடுத்திருந்தேன். இருந்த போதிலும், ரயில்வே அவருக்கு மேல் பெர்த்தை ஒதுக்கியது.' என ட்வீட் செய்திருந்தார். 

மேலும் படிக்க | ரயில் பயணிகளே இதையெல்லாம் கொண்டு போகாதீங்க... அப்புறம் போலீஸ் கேஸ் தான்!

இப்படி புக்கிங் செய்யவும் 

பயணியின் ட்வீட்டுக்கு பதிலளித்த ரயில்வே, பொது ஒதுக்கீட்டின் கீழ் டிக்கெட் முன்பதிவு செய்தால், இருப்பு அடிப்படையில் இருக்கை ஒதுக்கீடு செய்யப்படுகிறது என்று தெரிவித்துள்ளது. ஆனால் ‘கீழ் பெர்த் ஒதுக்கப்பட்டால் மட்டுமே முன்பதிவு தேர்வு’ (Reservation Choice Book only if lower berth is allotted )-ன் கீழ் முன்பதிவு செய்தால், உங்களுக்கு லோயர் பெர்த் கிடைக்கும் என்று ரயில்வே தெரிவித்தது.

பொது ஒதுக்கீட்டின் கீழ் முன்பதிவு செய்பவர்களுக்கு இருப்பின் அடிப்படையில் மட்டுமே ஒதுக்கீடு வழங்கப்படும் என்று ரயில்வே தெரிவித்துள்ளது. முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை பாலிசியில் இது வேலை செய்கிறது. பொது ஒதுக்கீட்டில் எந்த வகையிலும் மனித தலையீடு இருப்பதில்லை. இது தவிர, அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் டிடிஇ -ஐ தொடர்பு கொண்டு லோயர் பெர்த்திற்காக அவரிடம் பேசலாம். 

முன்னதாக பயணிகளின் பயணத்தை எளிதாக்க ரயில்வே ஒரு சிறப்பு முடிவை எடுத்துள்ளது. மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் உடல் ஊனமுற்றோருக்கு லோயர் பெர்த் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக ரயில்வேயில் இருந்து கிடைத்த தகவலில் தெரிவிக்கப்பட்டது. இதனுடன், உடல் ஊனமுற்றோருடன் பயணிக்கும் நபர்களுக்கு லோயர் பர்த் வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

வயதானவர்களுக்கும் வசதி கிடைக்கும்

இதனுடன், முதியோர் மற்றும் பெண்களுக்கான கீழ் பெர்த் வசதியையும் ரயில்வே தொடங்கியுள்ளது. இது தொடர்பான உத்தரவு ரயில்வே வாரியம் மூலம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ரயில்வே மார்ச் 31-ஆம் தேதி அன்று பல்வேறு மண்டலங்களுக்கு உத்தரவை வெளியிட்டுள்ளது. 

ரயில்வே உத்தரவு பிறப்பித்தது

ஸ்லீப்பர் வகுப்பில் நான்கு இருக்கைகள் (இரண்டு லோயர் மற்றும் இரண்டு மிடிள் பர்துகள்), ஏசி3 பெட்டியில் இரண்டு இருக்கைகள் (ஒரு லோயர் மற்றும் ஒரு மிடிள் பர்த்), ஏசி3 (எகானமி) பெட்டியில் இரண்டு இருக்கைகள் (ஒரு லோயர் மற்றும் ஒரு மிடிள் பர்த்)  உடல் ஊனமுற்ற நபர்கள் மற்றும் அவர்களது உதவியாளர்களுக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் என ரயில்வே வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | ரயில் பெட்டிகளில் உள்ள ஐந்து இலக்க எண்ணின் ரகசியம்..கட்டாயம் தெரிஞ்சிகோங்க

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News