அசத்தல்.. நாடு முழுவதும் இன்று முதல் புதிய ரேஷன் விதி அமல், அரசு ஜாக்பாட் உத்தரவு

Ration Card Rules Update: நீங்களும் இலவச ரேஷனை பயன்படுத்திக் கொண்டு வந்தால் , மத்திய அரசிடம் மிகப்பெரிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி இன்று முதல் ரேஷன் விதிகளில் பெரிய மாற்றம் அமலுக்கு வரும் என்று கூறப்பட்டுள்ளது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Apr 20, 2023, 06:08 AM IST
  • மார்ச் 2024க்குள் நாடு முழுவதும் செறிவூட்டப்பட்ட அரிசி.
  • பல இடங்களில் இன்று முதல் ரேஷன் கடையில் தரமான அரிசி.
  • ரேஷன் பொருள் தொடர்பாக புதிய விதி இன்று முதல் அமல்.
அசத்தல்.. நாடு முழுவதும் இன்று முதல் புதிய ரேஷன் விதி அமல், அரசு ஜாக்பாட் உத்தரவு title=

ரேஷன் கார்டு புதிய விதிகள் 2023: ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு (Ration Cardholders) ஒரு மகிழ்ச்சியான செய்தி. நீங்களும் இலவச ரேஷனைப் (Free Ration) பயன்படுத்திக் கொண்டு வந்தால், தற்போது அரசிடம் இருந்து மிகப்பெரிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி தற்போது ரேஷன் விதிமுறைகளில் பெரிய மாற்றம் செய்யப் பட்டு இன்று முதல், புதிய ரேஷன் விதி அமலுக்கு வருகிறது. நீங்களும் ரேஷன் கார்டு வைத்திருப்பவராக இருந்து, இலவச ரேஷன் திட்டத்தைப் (Free Ration Scheme) பயன்படுத்திக் கொள்கிறீர்கள் என்றால், புதிய விதியை உடனடியாக அறிந்து கொள்ள வேண்டும். இந்த புதிய விதி 269 மாவட்டங்கள் உட்பட பல இடங்களில் பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

மார்ச் 2024க்குள் நாடு முழுவதும் செயல்படுத்தப்படும்
பொது விநியோகத் திட்டத்தின் மூலம் செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகிக்கப்படுவதாக அரசு தெரிவித்துள்ளது. நாட்டின் பல மாவட்டங்களில் இந்த வசதி தொடங்கப்பட்டுள்ளது. இத்துடன் அனைத்து மாவட்டங்களிலும் மார்ச் 2024க்குள் அமல்படுத்தப்படும்.

மேலும் படிக்க | வங்கி கணக்கில் ரூ.436 எடுக்கப்பட்டுள்ளதா? ஏன் என்று தெரிந்து கொள்ளுங்கள்! 

மத்திய உணவுத்துறை அமைச்சர் தகவல் ஒன்றை அளித்துள்ளார்
மத்திய உணவுத்துறை செயலாளர் சஞ்சீவ் சோப்ரா அளித்த தகவலின்படி, ராஜஸ்தானின் பல மாவட்டங்களில் இன்று முதல் செறிவூட்டப்பட்ட அரசி வழங்க அமல்படுத்தப்படுகிறது. இதுகுறித்து பிரதமர் மோடி கூறியதாவது., அரசு திட்டங்கள் மூலம் சத்துணவு பொருட்கள் வழங்கப்படும். இதன்காரணமாக, செறிவூட்டப்பட்ட அரிசியை விநியோகிக்க அரசு முடிவு செய்துள்ளது.

பெண்களுக்கு ரத்தசோகை நீங்கும்
இந்த நிலையில் தற்போது மத்திய அரசின் இந்த உத்தரவால் இனி குழந்தைகள், பெண்களின் ரத்தசோகை பிரச்னைக்கு முடிவுக்கு வரும். முன்னதாக ரேஷன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசியை படிப்படியாக விநியோகிக்கும் திட்டம் 2021 அக்டோபரில் தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில் மத்திய உணவுத் துறை செயலர் சஞ்சீவ் சோப்ராவிடம் இருந்து பெறப்பட்ட தகவலின்படி, மாநில அரசு கடந்த இரண்டு கட்டங்களாக செறிவூட்டப்பட்ட அரிசியை வெற்றிகரமாக விநியோகித்து வருகிறது. இது மத்திய அரசின் நல்ல முயற்சி. இது பெரிதும் பாராட்டப்பட்டு வருகிறது. மேலும் இந்த முயற்ச்சியால் கடந்த 2 ஆண்டுகளில் நல்ல முடிவுகள் காணப்பட்டு வருகின்றது.

நாட்டில் செறிவூட்டப்பட்ட அரிசி உற்பத்தி 17 லட்சம் டன்னாக உள்ளது.
செறிவூட்டப்பட்ட அரிசி உற்பத்தி குறித்து உணவுத் துறை செயலர் கூறியதாவது, ​​'இதுவரை 269 மாவட்டங்களில் ரேஷன் கடையில் பிடிஎஸ் மூலம் செறிவூட்டப்பட்ட அரிசியை விநியோகம் செய்யத் தொடங்கியுள்ளோம். மேலும் நாட்டில் சுமார் 735 மாவட்டங்கள் உள்ளன, அவற்றில் 80 சதவீதத்திற்கும் அதிகமான அரிசி உண்ணும் மக்கள் உள்ளனர். தற்போது இந்த அரிசியின் உற்பத்தி திறன் சுமார் 17 லட்சம் டன்களாக உள்ளதால், நாட்டில் போதுமான செறிவூட்டப்பட்ட அரிசி உள்ளது' என்றார்.

மேலும் படிக்க | EPFO Alert! PF பணத்தை இந்த சமயத்தில் மட்டும் எடுக்க வேண்டாம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News