ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஜாக்பாட் செய்தி: இலவச ரேஷனுடன் பம்பர் நன்மைகள் கிடைக்கும்

Ration Card: ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு இலவச ரேஷன் பொருட்கள் மற்றும் பல்வேறு அரசின் திட்டங்களின் பலன்கள் தவிர இன்னும் பல பெரிய பலன்களும் கிடைக்கின்றன

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Apr 19, 2023, 05:06 PM IST
  • ரேஷன் கார்டை முகவரிச் சான்றாகப் பயன்படுத்தலாம்.
  • வங்கி தொடர்பான வேலை அல்லது சமையல் எரிவாயு இணைப்பு பெற விரும்பினாலும், ரேஷன் கார்டை எளிதாகப் பயன்படுத்தலாம்.
  • வாக்காளர் அடையாள அட்டை உருவாக்கும் போது ரேஷன் கார்ட் அடையாள அட்டையாக செல்லுபடியாகும்.
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஜாக்பாட் செய்தி: இலவச ரேஷனுடன் பம்பர் நன்மைகள் கிடைக்கும் title=

ரேஷன் கார்டு சமீபத்திய புதுப்பிப்பு: நீங்களும் ரேஷன் கார்டு வைத்திருப்பவராக இருந்து, அரசிடமிருந்து மாதந்தோறும் இலவச ரேஷன் பெறுகிறீர்கள் என்றால், இந்த செய்தி உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். மத்திய மற்றும் பல்வேறு மாநில அரசுகளால் உணவு தானியங்கள் ஏழைகளுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் வழங்கப்படுகின்றன. ஆனால் இந்த ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு இலவச ரேஷன் பொருட்கள் மற்றும் பல்வேறு அரசின் திட்டங்களின் பலன்கள் தவிர இன்னும் பல பெரிய பலன்களும் கிடைக்கின்றன என்பது பலருக்கு தெரியாது. இவற்றை பற்றி இந்த பதிவில் விரிவாக காணலாம். 

மக்களுக்கு பல வசதிகள் கிடைக்கும்

- ரேஷன் கார்டு மூலம் இலவச மற்றும் மலிவான ரேஷன் மட்டுமின்றி, மக்கள் இன்னும் பல வசதிகளையும் பெறுகின்றனர். 

- ரேஷன் கார்டை முகவரிச் சான்றாகப் பயன்படுத்தலாம். 

- வங்கி தொடர்பான வேலை அல்லது சமையல் எரிவாயு இணைப்பு பெற விரும்பினாலும், ரேஷன் கார்டை எளிதாகப் பயன்படுத்தலாம். 

- வாக்காளர் அடையாள அட்டை உருவாக்கும் போது, உங்களுக்கு அடையாள அட்டை தேவைப்படுகின்றது. அப்போதும் ரேஷன் கார்ட் அடையாள அட்டையாக செல்லுபடியாகும். 

ரேஷன் கார்டு யாருக்கெல்லாம் கிடைக்கும்?

உங்கள் குடும்ப வருமானம் 27 ஆயிரம் ரூபாய்க்கு குறைவாக இருந்தால், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம். தகுதியின்படி, வறுமைக் கோட்டிற்கு மேல் (ஏபிஎல்), வறுமைக் கோட்டுக்குக் கீழே (பிபிஎல்) அட்டைகள் மற்றும் அந்த்யோதயா ரேஷன் கார்டு (ஏஏஒய்) ஆகியவை அரசாங்கத்தால் அளிக்கப்படும்.

மேலும் படிக்க | அட்சய திருதியைக்கு தங்கம் வாங்க போறீங்களா... இங்க இலவச தங்கம் தராங்க!

பல்வேறு மாநில மக்கள் அந்தந்த மாநில போர்டல்கள் மூலம் ஆன்லைனில் ரேஷன் கார்டுகளுக்கு விண்ணப்பிக்கலாம். உதாரணமாக, உத்தர பிரதேசத்தில் வசிக்கும் மக்கள், https://fcs.up.gov.in/FoodPortal.aspx மூலம் ஆன்லைனில் ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம். இங்கு விண்ணப்பித்த சில நாட்களுக்குப் பிறகு, ரேஷன் கார்டு உங்கள் முகவரிக்கு வந்து சேரும். ரேஷன் கார்டை உருவாக்கிக்கொள்ள, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட் மற்றும் அரசால் வழங்கப்பட்ட ஏதேனும் ஐ கார்டு, ஹெல்த் கார்டு, ஓட்டுநர் உரிமம் ஆகியவற்றை அடையாளச் சான்றாக அளிக்கலாம்.

தமிழ்நாட்டு மக்கள் ரேஷன் கார்டுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க tnpds.gov.in என்ற பொது விநியோக திட்ட போர்டலில் சென்று விண்ணப்பிக்கலாம். 

 

மேலும் படிக்க | ATM Cash Withdrawal Rules: வங்கியில் காசு குறைவாக இருக்கிறதா... ATM பக்கம் போகாதீங்க - அப்புறம் அபராதம் தான்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News