New Pension Rules: அரசு ஊழியர்களுக்கு மிகப்பெரிய செய்தி.... முக்கிய விதிகளில் மாற்றம்

Government Employees New Pension Rules: திருமண தகராறு ஏற்பட்டால், அரசுப் பணிகளில் பணிபுரியும் பெண்கள் மற்றும் ஓய்வூதியம் பெறும் பெண்கள், குடும்ப ஓய்வூதியத்திற்காக கணவருக்கு பதிலாக இனி தங்கள் குழந்தைகளை பரிந்துரைக்கலாம்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jan 3, 2024, 12:59 PM IST
  • ஓய்வூதியம் தொடர்பான விதிகளில் முக்கிய மாற்றம்.
  • இப்போது உள்ள விதிகள் என்ன?
  • எந்த சூழ்நிலையில் நிவாரணம் வழங்கப்படும்?
New Pension Rules: அரசு ஊழியர்களுக்கு மிகப்பெரிய செய்தி.... முக்கிய விதிகளில் மாற்றம் title=

Government Employees New Pension Rules: புத்தாண்டு தொடங்கிய உடனேயே மத்திய அரசு ஓய்வூதியம் தொடர்பான விதிகளில் முக்கிய மாற்றத்தை அறிவித்துள்ளது. திருமண தகராறு ஏற்பட்டால், அரசுப் பணிகளில் பணிபுரியும் பெண்கள் மற்றும் ஓய்வூதியம் பெறும் பெண்கள், குடும்ப ஓய்வூதியத்திற்காக கணவருக்கு பதிலாக தங்கள் குழந்தைகளை பரிந்துரைக்கலாம் என்று பணியாளர், பொதுமக்கள் குறைகள் மற்றும் ஓய்வூதிய அமைச்சகம் (Ministry of Personnel, Public Grievances and Pensions) செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது. தற்போது, ஒரு அரசு ஊழியர் (Government Employee) இறந்தால், முதலில் அவரது வாழ்க்கைத் துணைக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. அரசின் புதிய விதி கணவருடன் ஒத்து வாழ முடியாத பெண் ஊழியர்களுக்கு நிவாரணம் அளிக்கும். அத்தகைய பெண்கள் தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை இதன் மூலம் பாதுகாக்க முடியும்.

இப்போது உள்ள விதிகள் என்ன? 

CCS (ஓய்வூதியம்) விதிகள், 2021 இன் விதி 50 இன் துணை விதிகள் (8) மற்றும் (9) இன் விதிகளின்படி, இறந்த அரசு ஊழியர் அல்லது ஓய்வூதியம் (Pension) பெறுபவருக்கு குடும்பத்தில் அவரது வாழ்க்கைத்துணை இருந்தால், குடும்ப ஓய்வூதியம் முதலில் வாழ்க்கைத் துணைக்கு வழங்கப்படுகிறது. இதற்குப் பிறகுதான் குழந்தைகள் மற்றும் பிற குடும்ப உறுப்பினர்கள் குடும்ப ஓய்வூதியம் பெற தகுதியுடையவர்களாவார்கள். இறந்த அரசு ஊழியர்/ஓய்வூதியம் பெறுபவரின் (Pensioners) வாழ்க்கைத் துணை குடும்ப ஓய்வூதியம் பெற தகுதியற்றவராக இருந்தால் அல்லது அவர் இறந்தால் மட்டுமே இது பொருந்தும்.

எந்த சூழ்நிலையில் நிவாரணம் வழங்கப்படும்?

விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள பெண் அரசு ஊழியர் / ஓய்வூதியம் பெறும் பெண், அல்லது,  கணவர் மீது குடும்ப வன்முறை வழக்கு பதிவு செய்துள்ள பெண் அரசு ஊழியர்/பெண் ஓய்வூதியம் பெறும் பெணாக உள்ள அரசுப் பெண் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறும் பெண்கள் தங்கள் இறப்புக்கு பின்னர் கணவருக்கு பதிலாக குழந்தைகளுக்குத் தனது குடும்ப ஓய்வூதியம் வழங்கப்படுவதற்கு பரிந்துரைக்கலாம். இருப்பினும், இதற்கும் சில நிபந்தனைகள் உள்ளன.

மேலும் படிக்க | மூடப்பட்ட வங்கிக் கணக்குகளைத் திறப்பது எளிதானது: விதிகளைத் தளர்த்தியது ரிசர்வ் வங்கி

- இறந்த பெண் அரசு ஊழியர்/ஓய்வூதியம் பெறும் பெண்ணின் குடும்பத்தில் கணவர் இருந்து, அவரது குழந்தைகள் தகுதியுடையவர்களாக இருந்தால், அத்தகைய குழந்தைகளுக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்கப்படும். அதே சமயம், இறந்த அரசுப் பெண் ஊழியர்/ஓய்வூதியம் பெறும் பெண்ணின் கணவர் இருந்து, குழந்தைகள் இல்லையென்றால், குடும்ப ஓய்வூதியம் அந்த பெண்ணின் கணவருக்கு வழங்கப்படும். 

- இறந்த அரசு பெண் ஊழியர்/ஓய்வூதியம் பெறும் பெண்ணின் குடும்பத்தில், கணவர், மைனர் குழந்தை/குழந்தைகள் அல்லது மனநலக் கோளாறு அல்லது ஊனத்தால் பாதிக்கப்பட்ட குழந்தை/குழந்தைகள் இருந்தால், அத்தகைய சூழ்நிலையில், குடும்ப ஓய்வூதியம் கணவருக்கு வழங்கப்படும். ஆனால், அதற்கு, அவர் அத்தகைய குழந்தை/குழந்தைகளின் பாதுகாவலராக இருக்க வேண்டும்.

- இறந்த பென்ணின் கணவர் அத்தகைய குழந்தை/குழந்தைகளின் பாதுகாவலராக இருப்பதை நிறுத்தினால், அத்தகைய சந்தர்ப்பங்களில் குடும்ப ஓய்வூதியம் (Family Pension) அத்தகைய குழந்தை/குழந்தைகளின் உண்மையான பாதுகாவலராக இருக்கும் நபர் மூலம் குழந்தைக்கு வழங்கப்படும். ஒரு மைனர் குழந்தை, மேஜர் ஆனவுடன், குடும்ப ஓய்வூதியத்திற்கு தகுதியுடையவராக இருந்தால், அத்தகைய குழந்தைக்கு அவர் மேஜர் ஆன தேதியிலிருந்து குடும்ப ஓய்வூதியம் வழங்கப்படும்.

மேலும் படிக்க | Adani Hindenburg Case:அதானி குழுமத்திற்கு சாதகமான உச்ச நீதிமன்ற தீர்ப்பு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News