Bank Accounts : வங்கிக்கணக்கு இருக்கா? செயல்படாத, உரிமை கோரப்படாத வைப்பு கணக்குகளுக்கு ரிசர்வ் வங்கியின் புதிய வழிகாட்டுதல்கள்

RBI New Guidelines to Bank Accounts : இந்திய ரிசர்வ் பேங்க் (Reserve Bank of India) வங்கிகளில் உள்ள செயல்படாத கணக்குகள் மற்றும் உரிமை கோரப்படாத வைப்புகளை வகைப்படுத்தி நிர்வகிப்பதற்கான திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jan 2, 2024, 12:41 PM IST
  • ஆர்பிஐ புதிய வழிகாட்டுதல்கள்.
  • இந்த வழிகாட்டுதல்கள் ஏப்ரல் 1, 2024 முதல் நடைமுறைக்கு வரும்.
  • ஆர்பிஐ புதிய வழிகாட்டுதலின் முக்கிய அம்சங்களை இங்கே காணலாம்.
Bank Accounts : வங்கிக்கணக்கு இருக்கா? செயல்படாத, உரிமை கோரப்படாத வைப்பு கணக்குகளுக்கு ரிசர்வ் வங்கியின் புதிய வழிகாட்டுதல்கள் title=

RBI New Guidelines to Inactive Accounts & Unclaimed Deposits in Bank: இந்தியாவின் மத்திய வங்கியான ஆர்பிஐ, வங்கிச் செயல்முறைகளை எளிதாக்கவும், வாடிக்கையாளர்களின் வசதிகளை அதிகரிக்கவும், அவ்வப்போது பல புதிய விதிகளை அறிமுகம் செய்கிறது, பழைய விதிகளில் மாற்றங்களை செய்கிறது. அந்த வகையில், இந்திய ரிசர்வ் வங்கி (RBI) வங்கிகளில் உள்ள செயல்படாத கணக்குகள் மற்றும் உரிமை கோரப்படாத வைப்புகளை வகைப்படுத்தி நிர்வகிப்பதற்கான திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. இந்த வழிகாட்டுதல்கள் ஏப்ரல் 1, 2024 முதல் நடைமுறைக்கு வரும்.

ஆர்பிஐ புதிய வழிகாட்டுதலின் முக்கிய அம்சங்கள் (RBI Guidelines):

- வாடிக்கையாளர் ஓராண்டு அல்லது அதற்கு மேல் எந்தப் பரிவர்த்தனையும் செய்யாத கணக்குகளை வங்கிகள் ஆண்டுதோறும் மதிப்பாய்வு செய்ய வேண்டும்.
- இப்படிப்பட்ட சூழ்நிலைகளில், வங்கிகள் கணக்கு (Bank Account) வைத்திருப்பவர்களுக்கு இது குறித்து எழுத்துப்பூர்வமாக தெரிவிக்க வேண்டும்.
- செயலற்ற தன்மைக்கான காரணத்தை விளக்கி வாடிக்கையாளர்கள் பதிலைத் தாக்கல் செய்தால், வங்கிகள் கணக்கை இன்னும் ஒரு வருடத்திற்கு செயலில் உள்ள பிரிவில் வைத்திருக்க வேண்டும்.
- சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர் எழுத்துப்பூர்வ தகவல்தொடர்புக்கு பதிலளிக்கவில்லை என்றால், வங்கி உடனடியாக கணக்கு வைத்திருப்பவரின் அல்லது நாமினியின் முகவரி/இருப்பிடத்தை ஆய்வு செய்ய வேண்டும்.
- மீண்டும் செயல்படுத்தப்பட்ட கணக்குகளின் பரிவர்த்தனைகள் குறைந்தது 6 மாதங்களுக்கு தொடர்ந்து கண்காணிக்கப்பட வேண்டும்.

மேலும் படிக்க | MNREGA திட்டம்... இனி சம்பளம் பெற ஆதார் அவசியம்... மத்திய அரசு உத்தரவு

- வீடியோ KYC உட்பட அனைத்து கிளைகளிலும் செயலற்ற கணக்குகளை செயல்படுத்த வங்கிகள் தங்கள் KYC ஐ புதுப்பிக்கும் வசதியை வழங்க வேண்டும்.
- ED, நீதிமன்றம், தீர்ப்பாயங்கள் மற்றும் பிற சட்ட நிறுவனங்களின் உத்தரவின் பேரில் முடக்கப்பட்ட கணக்குகள் KYC செயல்முறைக்குப் பிறகுதான் மீண்டும் செயல்படுத்தப்படும்.
- KYC ஆவணங்களைச் சமர்ப்பித்த பிறகு, வங்கி கணக்கு வைத்திருப்பவர்களுக்கு அவர்களின் கணக்கின் நிலையைப் பற்றி தெரிவிக்க வேண்டும்.
- எந்தவொரு செயலற்ற கணக்கிலும் குறைந்தபட்ச இருப்புத் தொகையை பராமரிக்காததற்காக வங்கிகள் அபராதம் விதிக்க முடியாது.
- மோசடியில் இருந்து பாதுகாக்க, வாடிக்கையாளர் அனுமதி இல்லாமல், எந்த ஒரு செயல்படாத கணக்கிலும் டெபிட் பரிவர்த்தனைகளை வங்கிகள் அனுமதிக்கக் கூடாது.
- பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை மற்றும் அளவு மீதான கட்டுப்பாடுகளுடன் மீண்டும் செயல்படும் போது கூலிங்க்-ஆஃப் காலத்தை விதிக்க வங்கிகள் பரிசீலிக்கலாம்.
- அரசாங்க திட்டங்களின் கீழ் DBT (Direct Benefit Transfer) -க்கு பயன்படுத்தப்படும் செயல்படாத கணக்குகளை தனியாக வைத்திருக்க வேண்டும். மேலும் இதற்கான வரம்பு 1 வருடமாக இல்லாமல் 2 வருடங்களாக இருக்கும்.

இந்திய ரிசர்வ் வங்கியின் (Reserve Bank of India) புதிய வழிகாட்டுதல்கள் (RBI Guidelines) செயல்படாத கணக்குகள் (Inactive Accounts) மற்றும் உரிமை கோரப்படாத டெபாசிட்களின் (Unclaimed Deposits) நிர்வாகத்தை மேம்படுத்துவதற்கான ஒரு முக்கியமான படியாகும். இந்த வழிகாட்டுதல்கள் வாடிக்கையாளர்களின் கணக்குகளின் நிலையைப் பற்றி அறிந்துகொள்ளவும் மோசடிகளைத் தடுக்கவும் உதவும்.

2023 ஆம் ஆண்டில் மத்திய வங்கியான இந்திய ரிசர்வ் வங்கி பல முக்கிய முடிவுகளை எடுத்தது. இதன் தாக்கம் சாமானியர்களின் மீதும் இருந்துள்ளது. அவ்வப்போது ஆர்பிஐ (RBI) ஏற்கனவே உள்ள திட்டங்களிலும் பல மாற்றங்களை செய்கிறது. புதிய ஆண்டில் நாம் அடி எடுத்து வைத்துள்ள நிலையில் 2023 ஆம் ஆண்டு முழுவதும் வங்கித் துறையில் இந்திய ரிசர்வ் வங்கி செய்துள்ள குறிப்பிடத்தக்க மாற்றங்களை பற்றி தெரிந்துகொள்வது மிகவும் முக்கியமானது. 

மேலும் படிக்க | Budget 2024: வீட்டுக்கடன் வாங்கியவர்களுக்கு காத்திருக்கும் குட் நியூஸ், வட்டியில் ₹ 5 லட்சம் வரை வரிவிலக்கு!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News