PF Account: வேலை மாறினால் இதை கண்டிப்பாக செய்து விடுங்கள், இதுதான் வழிமுறை

PF Account: வேலை மாறிய பிறகு பிஎஃப் கணக்கை இணைப்பது மிக முக்கியமான நடவடிக்கையாகும். இதைப் பற்றி இந்த பதிவில் விரிவாக காணலாம். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : May 17, 2023, 06:02 PM IST
  • வருங்கால வைப்பு நிதி என்பது அரசாங்கத்தின் மூலம் நடத்தப்படும் ஒரு கட்டாய ஓய்வூதிய சேமிப்பு திட்டமாகும்.
  • பல நாடுகளில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
  • ஓய்வுபெறும் வயதை எட்டியதும், பணியாளருக்கு நிதி உதவி வழங்கும் நோக்கத்துடன், பணியாளர் மற்றும் முதலாளி / நிறுவனம் இரு தரப்பின் பங்களிப்பும் இதில் இருக்கிறது.
PF Account: வேலை மாறினால் இதை கண்டிப்பாக செய்து விடுங்கள், இதுதான் வழிமுறை title=

PF Login: அதிகப்படியான மாத சம்பளம் மற்றும் சிறந்த வாய்ப்புகளுக்காக ஒவ்வொரு 2-3 வருடங்களுக்கும் ஒரு முறை தங்கள் வேலையை மாற்றும் பலரை நாம் பார்க்கிறோம். ஆனால் ஊதியம் அதிகரிக்கும் மகிழ்ச்சியில், மக்கள் பெரும்பாலும் ஒரு முக்கியமான பணியை புறக்கணித்து விடுகிறார்கள். இதன் காரணமாக இவர்களுக்கு அதிக வரி விதிக்கப்படலாம். வருங்கால வைப்பு நிதி (பிஎஃப்) கணக்குகளை இணைக்கும் பணிதான் அது. வேலை மாறிய பிறகு பிஎஃப் கணக்கை இணைப்பது மிக முக்கியமான நடவடிக்கையாகும். இதைப் பற்றி இந்த பதிவில் விரிவாக காணலாம். 

வருங்கால வைப்பு நிதி

வருங்கால வைப்பு நிதி என்பது அரசாங்கத்தின் மூலம் நடத்தப்படும் ஒரு கட்டாய ஓய்வூதிய சேமிப்பு திட்டமாகும். இதனுடன், பல நாடுகளில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஓய்வுபெறும் வயதை எட்டியதும், பணியாளருக்கு நிதி உதவி வழங்கும் நோக்கத்துடன், பணியாளர் மற்றும் முதலாளி / நிறுவனம் இரு தரப்பின் பங்களிப்பும் இதில் இருக்கிறது. இந்த நிதியின் முதன்மை நோக்கம் தனிநபர்கள் தங்கள் ஓய்வு பெறும் ஆண்டுகளில் நிலையான வருமானத்தை பெற வேண்டும் என்பதாகும்.

பிஎஃப் கணக்கு

ஒரு நபர், ஒரு வேலையைத் தொடங்கும்போது, ​​EPFO ​​இலிருந்து யுனிவர்சல் கணக்கு எண்ணைப் (UAN) பெறுவார். உங்கள் முதலாளி / நிறுவனம் மூலம் இந்த UAN இன் கீழ் ஒரு பிஎஃப் கணக்கு திறக்கப்படும். இந்த கணக்கில் பணியாளரும் அவரது நிறுவனமும் / முதலாளியும் ஒவ்வொரு மாதமும் அதற்குப் பங்களிப்பார்கள். பணியாளர் வேலைகளை மாற்றும்போது, ​​அவரது UAN-ஐ புதிய வேலை வழங்குபனருக்குக் கொடுக்க வேண்டும். புதிய நிறுவனம் / முதலாளி மூலம் அதே UAN இன் கீழ் மற்றொரு பிஎஃப் கணக்கு திறக்கப்படும். இதன் பிறகு பணியாளரின் புதிய முதலாளி / நிறுவனத்தின் பிஎஃப் பங்களிப்பு இந்தப் புதிய கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. இதுபோன்ற சூழ்நிலையில், பழைய பிஎஃப் கணக்கை புதிய பணியிடத்துடன் புதிய பிஎஃப் கணக்குடன் இணைப்பது மிகவும் முக்கியமாகும்.

மேலும் படிக்க | EPFO Higher Pension: அதிக ஓய்வூதியம் குறித்து அரசு அளித்த மிகப்பெரிய அப்டேட்

பிஎஃப் -இல் இருந்து பணம் எடுப்பது: இந்த சூழ்நிலையில் வரி விலக்கு 

சில காரணங்களால் பிஎஃப் கணக்கில் டெபாசிட் செய்யப்பட்ட தொகையை எடுக்க நேரிடலாம். அத்தகைய சூழ்நிலையில், அரசாங்க விதிகளின்படி, ஒரு நிறுவனத்தில் உங்கள் பணி காலம் ஐந்து ஆண்டுகளுக்கு குறைவாகவும், உங்கள் பிஎஃப் கணக்கில் டெபாசிட் செய்யப்பட்ட மொத்தத் தொகை 50,000 ரூபாய்க்கு குறைவாக இருந்தாலும், தொகையை திரும்பப் பெறுவதற்கு வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுவீர்கள். 

இருப்பினும், பிஎஃப் கணக்கில் டெபாசிட் செய்யப்பட்ட மொத்தத் தொகை 50,000 ரூபாய்க்கு மேல் இருந்தால், 10 சதவீதம் டிடிஎஸ் கழிக்கப்படும். மாறாக, நீங்கள் ஐந்து வருட சேவையை முடித்திருந்தால், உங்கள் பிஎஃப் நிதியை திரும்பப் பெறுவதற்கு வரி ஏதும் இருக்காது.

பிஎஃப் கணக்குகளின் இணைப்பு

பிஎஃப் கணக்குகள் இணைக்கப்பட்டால் UAN உங்கள் அனைத்து பணி அனுபவத்தையும் சேர்க்கும். மறுபுறம், பிஎஃப் கணக்குகள் ஒன்றிணைக்கப்படாவிட்டால், ஒவ்வொரு நிறுவனத்தின் அனுபவமும் தனித்தனியாக சேர்க்கப்படும். இதன் காரணமாக பணத்தை எடுக்கும்போது டிடிஎஸ் கழிக்கப்படும்.

ஊழியர்கள் வேலை மாறும்போது தங்களின்  EPF கணக்கை மாற்றிக் கொள்ள வேண்டும். இதனை இப்போது எளிமையாக செய்யும் வகையில் அனைத்து நடைமுறைகளும் ஆன்லைன் செய்யப்பட்டிருக்கின்றன. 

மேலும் படிக்க | EPF account: வேலை மாறும்போது PF கணக்கை மாற்றாவிட்டால் என்ன நடக்கும்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News