EPFO Employees: தீபாவளிக்கு முன்னதாக, ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (EPFO) ஊழியர்களுக்கு ஒரு நல்ல செய்தி கிடைத்துள்ளது. EPFO தனது ஊழியர்களுக்கு போனஸ் வழங்குவதாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு EPFO ஊழியர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த போனஸ் 2 மாத சம்பளத்திற்கு சமமாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
PLB: யாருக்கு இந்த போனஸ் கிடைக்கும்?
பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் பணிபுரியும் குரூப் சி மற்றும் குரூப் பி ஊழியர்களுக்கு உற்பத்தித்திறன் இணைக்கப்பட்ட போனஸாக (Productivity Linked Bonus) முன்பணமாக ரூ.13,816 வழங்கப்படும் என்று அந்த அமைப்பு ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. செப்டம்பர் மாதத்தில், ரயில்வே ஊழியர்களுக்கு உற்பத்தித்திறன் இணைக்கப்பட்ட போனஸ் (பிஎல்பி) வழங்க மத்திய அமைச்சரவை (Central Cabinet) ஒப்புதல் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Diwali Bonus: இந்த ஊழியர்களுக்கு போனஸின் பலன் கிடைக்காது
பொது வருங்கால வைப்பு நிதி அமைப்பில் (EPFO) இருந்து ஏற்கனவே ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு உற்பத்தித்திறன் இணைக்கப்பட்ட போனஸ் (PLB) வழங்கப்படாது. கூடுதலாக, கேசுவல்/ஒப்பந்தம்/கூடுதல் துறை ஊழியர்கள் போனஸுக்குத் தகுதியற்றவர்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
இவர்களுக்கு போனஸ் கிடைக்கும்
இந்த போனஸ் தொடர்பாக EPFO ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் உள்ளவற்றை இங்கே காணலாம்:
"பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் ஊழியர்களுக்கு 2023-24 ஆம் ஆண்டிற்கான உற்பத்தித்திறன் இணைக்கப்பட்ட போனஸின் முன்பணத்திற்கான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்:
1. குரூப் சி மற்றும் குரூப் பி (நான்-கெசடட்) -இன் அனைத்து வழக்கமான ஊழியர்களும் இந்த போனஸின் பலனைப் பெறுவார்கள். அந்த ஊழியர்கள் விகிதாசார அடிப்படையில் சேவையில் இருக்க வேண்டும். மேலும் 2023-24 நிதியாண்டின் மார்ச் மாதத்தின் கடைசி நாளிலும் பணிபுரிந்திருக்க வேண்டும்.
2 ஒரு வருடத்திற்கும் குறைவான கால அளவிற்கு பணிபுரிந்துள்ள ஊழியர்களுக்கும் போனஸ் கிடைக்கும். இருப்பினும், அவர்கள் 2023-24 நிதியாண்டில் குறைந்தது 6 மாதங்கள் பணியாற்றியிருக்க வேண்டும்.
3. ஏழாயிரம் ரூபாய்க்கு மேல் மாதச் சம்பளம் பெறும் ஊழியர்களுக்கும் போனஸ் பெற உரிமை உண்டு.
4. 2023-24 நிதியாண்டில், மார்ச் மாதத்தில் அசாதாரண அல்லது அரை ஊதிய விடுப்பில் இருக்கும் ஊழியர்களுக்கு சம்பளம் மற்றும் படிகளின் அடிப்படையில் PLB வழங்கப்படும்.
இந்த அட்வான்ஸ் தொகையை பெறும் ஊழியர்கள் அனைவரும் கையொப்பமிடப்பட்ட உறுதிமொழியை சமர்ப்பிக்க வேண்டும் என்று ஓய்வூதிய நிதி அமைப்பு உத்தரவில் தெரிவித்துள்ளது. இந்த அட்வான்ஸ் தொகை இந்த ஆண்டுக்கான அவர்களின் PLB தொகையில் சரிசெய்யப்படும் என்றும், அதிகப்படியான தொகை உடனடியாக திருப்பித் தரப்படும் என்றும் ஊழியர்கள் உறுதியளிக்க வேண்டும்.
இந்த முன்பணம் சரியான நேரத்தில் ஊழியர்களுக்கு நிதி உதவி வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த தொகை 60 நாள் ஊதியத்திற்கு சமமானது என்பது குறிப்பிடத்தக்கது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ