Budget 2021: நிதி அமைச்சரின் பெரிய அறிவிப்பை எதிர்பார்த்திருக்கும் Middle Class

பொருளாதார நிவாரணம் பெற எதிர்பார்க்கும் ஒரு சாமானிய மனிதனுக்கு வருமான வரி வரம்பு என்பது ஒரு மிக முக்கியமான அம்சமாகும். 2021 ஆம் ஆண்டின் பட்ஜெட் முன்பு எப்போதும் இல்லாத அளவு வித்தியாசமாக இருக்கும் என நிதி அமைச்சர் கூறியுள்ளார். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Feb 1, 2021, 11:03 AM IST
  • பட்ஜெட் நடுத்தர வர்க்கத்திற்கு நிவாரணம் அளிக்குமா?
  • வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கான செலவினங்களை அதிகரிக்குமா?
  • அரசாங்கம் இந்த ஆண்டு வருமான வரி வரம்புகளை மாற்றாமல் அப்படியே வைத்திருக்க வாய்ப்புள்ளது.
Budget 2021: நிதி அமைச்சரின் பெரிய அறிவிப்பை எதிர்பார்த்திருக்கும் Middle Class title=

Union Budget 2021: 2021-22 நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படவுள்ளது. நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது மூன்றாவது பட்ஜெட்டை இன்று (பிப்ரவரி 1, 2021) வழங்கவுள்ளார். கொரோனா வைரஸ் தொற்றுநோயால் பாதிப்புக்குள்ளான பொருளாதாரத்திற்கு அவரது இந்த பட்ஜெட்டின் மீது அதிக நம்பிக்கைகள் இருக்கின்றன.

மோடி அரசாங்கத்தின் ஒன்பதாவது வரவுசெலவுத் திட்டம் நடுத்தர வர்க்கத்திற்கு நிவாரணம் அளிப்பதோடு, வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கான செலவினங்களையும் அதிகரிக்கும் என நம்பப்படுகின்றது. அத்துடன் அதிக வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க விதிகளும் தளர்த்தப்படக்கூடும்.

குறிப்பிடத்தக்க வகையில், அரசாங்கம் இந்த ஆண்டு வருமான வரி வரம்புகளை மாற்றாமல் அப்படியே வைத்திருக்க வாய்ப்புள்ளது. பொருளாதார நிவாரணம் பெற எதிர்பார்க்கும் ஒரு சாமானிய மனிதனுக்கு வருமான வரி வரம்பு என்பது ஒரு மிக முக்கியமான அம்சமாகும். 2021 ஆம் ஆண்டின் பட்ஜெட் முன்பு எப்போதும் இல்லாத அளவு வித்தியாசமாக இருக்கும் என நிதி அமைச்சர் கூறியுள்ளார்.

இதனால், மக்களுக்கு மிகவும் தேவையான வரி தளர்வு குறித்த நம்பிக்கை மக்களிடம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக COVID-19 தொற்றுநோய்களுக்கு மத்தியில் ஏற்பட்ட கஷ்டங்களுக்குப் பிறகு இந்த நிவாரணம் மிகவும் தேவையான ஒன்றாக இருக்கும்.

2020 வரவுசெலவுத் திட்டத்தில் ஏழு வெவ்வேறு பிரிவுகளின் கீழ் உள்ள தனிநபர்களுக்கான பல்வேறு வருமான வரி வரம்புகளையும் வரி விகிதங்களையும் நிர்மலா சீதாராமன் (Nirmala Sitharaman) அறிமுகப்படுத்தியிருந்தார்.

ALSO READ: Budget 2021-22 LIVE: முதல் முறையாக காகிதமில்லா பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல்

2020 ஆம் ஆண்டில் திருத்தப்பட்ட தற்போதைய வரி முறை, ஆண்டு வருமானம் ரூ .2.5 லட்சம் வரை உள்ள நபர்களுக்கு விலக்கு அளித்தது. அடுத்த அடுக்கு 2.5 லட்சம் ரூபாய் முதல் 5 லட்சம் ரூபாய் வரை சம்பாதிக்கும் நபர்களுக்கானது; அவர்கள் 5 சதவீத வரி செலுத்த வேண்டும். அடுத்து, ரூ .5 முதல் ரூ .7.5 லட்சம் வரை சம்பாதிக்கும் நபர்களுக்கு 10 சதவீதம் வருமான வரி (Income Tax) விதிக்கப்படுகிறது. ரூ .7.5 முதல் ரூ .10 லட்சம் வரை வருமானம் ஈட்டுபவர்களுக்கு 15 சதவீத வீதத்தில் வரி விதிக்கப்படுகிறது.

ரூ .10 முதல் ரூ .12.5 லட்சம் வரை வருமானம் ஈட்டும் நபர்களுக்கு வரி விகிதம் 20 சதவீதமாகவும், ரூ .12.5 முதல் ரூ .15 லட்சம் வருமானம் உள்ளவர்களுக்கு விகிதம் 25 சதவீதமாகவும் உள்ளது. ரூ .15 லட்சத்திற்கு மேல் சம்பாதிக்கும் நபர்களுக்கு 30 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது.

இருப்பினும், வரி செலுத்துவோர் வீட்டுக் கடன், காப்பீடு அல்லது நிலையான விலக்குகள் போன்ற விலக்குகளில் இருந்து அகற்றப்பட்டனர். மேலும் வரி வகைகளின் நன்மை தீமைகளின் அடிப்படையில் தங்களுக்கு எது பொருத்தமானது என்பதைத் தேர்வுசெய்வதற்கான வசதி அவர்களுக்கு வழங்கப்பட்டது.

இன்று தாக்கல் செய்யப்படப்போகும் பட்ஜெட்டில் (Budget) நிர்மலா சீதாராமன் அவர்கள் வருமான வரி வரம்பு மற்றும் வரி விலக்குகளில் சாதகமான அறிவிப்புகளை செய்து, நடுத்தர வர்க்கத்திற்கு நிவாரணம் அளிப்பார் என்ற மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது!!

ALSO READ: Budget 2021: Budget Mobile App மூலம் நிர்மலா சீதாராமன் வழங்கும் பட்ஜெட்டை நேரலையில் காணலாம்

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News