Budget 2024: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் (Nirmala Sitharaman) இன்று தனது ஏழாவது பட்ஜெட்டை தாக்கல் செய்தார். பாஜக தலைமையிலான எண்டிஏ அரசாங்கத்தின் மூன்றாவது ஆட்சிக்காலத்தின் முதல் பட்ஜெட் இது. இந்த பட்ஜெட் குறித்த எதிர்பார்ப்புகள் அதிகமாக இருந்த நிலையில், அரசு மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றியுள்ளதா? நடுத்தர மக்களுக்கு இது சாதகமான பட்ஜெட்டாக இருக்கிறதா? தினசரி உபயோக பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு ஆகும் செலவுகள் குறையுமா அல்லது கூடுமா? இவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Union Budget 2024: முக்கிய கவனம் செலுத்தப்பட்ட துறைகள்:
பட்ஜெட்டில் வேலைவாய்ப்பு, திறன் மேம்பாடு, விவசாயம் மற்றும் உற்பத்தி ஆகிய துறைகளுக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது. பொருளாதார வளர்ச்சியுடன் நிதி விவேகத்தை சமநிலைப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு இந்த பட்ஜெட் அமைந்துள்ளது.
ஆனால், பொது மக்களுக்கு என்ன தேவை? பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், சாமானியர்களின் வாழ்வில் இதனால் என்னென்ன தாக்கம் ஏற்படும்? எந்த பொருட்களின் விலை அதிகரிக்கும்? எவற்றின் விலை கூடும்? இந்த பட்டியலை இங்கே காணலாம்.
Union Budget 2024: பட்ஜெட்டுக்கு பின் விலை குறைந்துள்ள பொருட்கள்:
- மொபைல் போன்கள் மற்றும் மொபைல் சார்ஜர்கள் மீதான அடிப்படை சுங்க வரியை (BCD) 15 சதவீதமாக குறைப்பதாக நிதியமைச்சர் அறிவித்தார்.
- தங்கம் மற்றும் வெள்ளி மீதான சுங்க வரி 6 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
- பிளாட்டினம் மீதான வரி 6.4 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
- புற்றுநோய் சிகிச்சைக்கான மூன்று மருந்துகளுக்கு அடிப்படை சுங்க வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
- சோலார் பேனல்கள் தயாரிப்பதில் பயன்படுத்தப்படும் விலக்கு அளிக்கப்பட்ட மூலதனப் பொருட்களின் பட்டியல் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
- இ-காமர்ஸ் மீதான மூலத்தில் கழிக்கப்படும் வரி (Tax Deducted at Source) அதாவது TDS 1 சதவீதத்தில் இருந்து 0.1 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
Union Budget 2024: பட்ஜெட்டுக்கு பின் விலை அதிகமாகியுள்ள பொருட்கள்:
- அமோனியம் நைட்ரேட் மீதான சுங்க வரி 10 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
- மக்காத பிளாஸ்டிக் பொருட்கள் மீதான வரி 25 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | Budget 2024: பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் என்னென்ன...? யார் யாருக்கு குட் நியூஸ்?
2023 ஆம் ஆண்டு பட்ஜெட்
- 2023 ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில், இந்தியாவில் மொபைல் போன் உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில், கேமரா லென்ஸ்கள் உட்பட பல்வேறு பாகங்கள் மீதான இறக்குமதி வரிகளை குறைப்பதாக நிதியமைச்சர் அறிவித்திருந்தார்.
- மேலும், நாட்டில் மலிவான உற்பத்தியை எளிதாக்கும் வகையில், தொலைபேசிகள் மற்றும் மின்சார வாகனங்களுக்கு அத்தியாவசியமான மூலப்பொருளாக உள்ள லித்தியம்-அயன் பேட்டரிகள் மீதான வரி விகிதமும் குறைக்கப்பட்டது.
- 2023 ஆம் ஆண்டு பட்ஜெட்டில், டிவிக்கள், ஸ்மார்ட்போன்கள், கம்ப்ரெஸ்ட் கேஸ், இறால் தீவனம் போன்ற பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டன.
- ஆய்வகத்தில் உருவாக்கப்பட்ட வைரங்களுக்கான விலை குறைக்கப்பட்டது.
- சிகரெட், விமானப் பயணம் மற்றும் ஜவுளிக்கான செலவுகள் அதிகரிக்கப்பட்டன.
மேலும் படிக்க | சொத்து வாங்கும் பெண்களுக்கு பத்திரப்பதிவில் வரிச்சலுகை! பட்ஜெட் அறிவிப்பின் பின்னணி!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ