சாட்ஜிபிடி வருகைக்குப் பின்னர் ஏஐ தொழில்நுட்பத்தின் வீரியத்தை மக்கள் உணர்ந்திருக்கிறார்கள். நொடியில் மனிதர்கள் கற்பனை செய்து பார்க்க முடியாத வேலைகளை செய்வதுடன், அதனால் முடியாத ஒன்று இல்லை என்ற நிலையை நோக்கி உலகம் நகர்ந்து கொண்டிருக்கிறது. செயலி உருவாக்கம் முதல் உளவு வரை அனைத்து வேலைகளையும் தானாகவே செய்து முடிக்கும் வல்லமை ஏஐ தொழில்நுட்பங்கள் உருவாக்கிவிட்டன. உலகின் எந்த மூலையில் இருக்கும் ஒருவரைப் பற்றிய தகவலையும், தொழில்நுட்பங்களையும் ஏஐ தொழில்நுட்பங்களால் உருவாக்க முடியும், கண்டுபிடிக்க முடியும். இதுமட்டுமல்லாமல் இன்னும் பல ஆச்சரியங்களையும் தன்னகத்தே கொண்டிருக்கிறது இந்த ஏஐ தொழில்நுட்பங்கள். அதனுடைய ஒரு விதைதான் இந்த சாட்ஜிபிடி. இதனுடைய பரிணாம வளர்ச்சி வரும் காலங்களில் கற்பனை செய்து பார்க்க முடியாத எல்லையை எட்ட இருக்கிறது.
மேலும் படிக்க | 500 ரூபாய் நோட்டு குறித்து மிகப்பெரிய தகவல வெளியிட்ட RBI
இதனை சாதாரண டெக் நிபுணர்கள் எல்லாம் சொல்லவில்லை. தொழில்நுட்ப உலகின் நம்பர் ஒன் இடத்தில் இடத்தில் இருக்கும் எலான் மஸ்க் தெரிவித்திருக்கிறார். இதில் வேடிக்கையான விஷயம் என்னவென்றால் ஏஐ தொழில்நுட்ப உருவாக்கத்தில் இவருடைய பங்கும் அளப்பரியது. அதனால் அதனைப் பற்றிய வீரியத்தையும், பின்னணியையும் தெரிந்துவைத்திருப்பவர்கள் அவரைவிட வேறொருவர் இருக்க முடியாது. ஆனால் அவரே ஏஐ தொழில்நுட்பங்களுக்கான கட்டுப்பாடுகள் அல்லது கண்காணிப்புகளை உருவாக்க வேண்டும் என அமெரிக்க அரசை வலியுறுத்தியிருக்கிறார்.
மேலும், இது குறித்த நடைமுறைகளில் தான் கவனம் செலுத்த இருப்பதாகவும் தெரிவித்திருக்கும் எலான் மஸ்க், ஓபன் ஏஐ சாட்ஜிபிடி மற்றும் கூகுள் பார்டு தொழில்நுட்பங்களுக்கு போட்டியாக தானும் ஒரு ஏஐ தொழில்நுட்பத்தை கட்டமைக்கும் பணியை தொடங்கிவிட்டதாகவும் அறிவித்துள்ளார். 2015 ஆம் ஆண்டு ஓபன் ஏஐ நிறுவனத்தை தொடங்கியவர்களில் ஒருவரான அவர், 2018 ஆம் ஆண்டு அந்த நிறுவனத்தில் இருந்து வெளியேறினார். இப்போது மீண்டும் தனியாக ஏஐ வடிவமைப்பில் இறங்க இருப்பதாகவும், அதற்காக தொழில்நுட்ப வல்லுநர்களை ஏற்கனவே சந்தித்துவிட்டதாகவும் எலான் மஸ்க் கூறியிருக்கிறார். அவரின் இந்த அறிவிப்பு டெக் உலகில் அடுத்த பரபரப்பை உருவாக்கியுள்ளது.
மேலும் படிக்க | இனி சர்வமும் AI மட்டுமே - எலான் மஸ்க் வைத்திருக்கும் மாஸ் பிளான்..!
மேலும் படிக்க | Adani: அதானியை வைத்து 2 நாளில் ரூ.3,100 கோடி லாபம் பார்த்த ராஜீவ் ஜெயின்..!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ