இந்தியாவின் முன்னணி தொழிலதிபரான அதானி இப்போது சிக்கலில் இருக்கிறார். அமெரிக்கா பொருளாதார ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பெர்க் அதானியின் பங்குகள் மற்றும் முதலீடுகள் குறித்த முறைகேடுகளை ஆய்வு செய்து அறிக்கையை வெளியிட்டனர். ஜனவரி 24 ஆம் தேதி வெளியான இந்த அறிக்கைக்குப் பிறகு அதானியின் பங்குகள் மற்றும் தொழில் முதலீடுகள் கடும் சரிவை சந்தித்தன. பங்குச் சந்தையில் அவர் மீது முதலீட்டாளர்கள் நம்பிக்கை இழந்ததால், அதானி குழுமத்துக்கு சொந்தமான அனைத்து நிறுவன பங்குகளும் கிடுகிடுவென அதளபாதாளத்துக்கு செல்லத் தொடங்கியது.
மேலும் படிக்க | இனி சர்வமும் AI மட்டுமே - எலான் மஸ்க் வைத்திருக்கும் மாஸ் பிளான்..!
இதனை சரிகட்ட அவர் எடுத்த முயற்சிகள் இதுவரை பலனளித்ததாக தெரியவில்லை. இருப்பினும் தன்னுடைய அனைத்து அஸ்திரங்களையும் இப்போது வீசி வருகிறார். அதன் விளைவாக வங்கிகள் சில கடன் கொடுக்க தயாராக இருப்பதாக அறிவித்திருப்பதுடன், பெரிய தொழிலபதிர்கள் முதலீடு செய்ய முன் வந்துள்ளது. அதன் ஒருபகுதியாக தொழிலதிபர் ராஜீவ் ஜெயினுக்கு சொந்தமான GQG Partners நிறுவனம் அதானியின் பங்குகளில் முதலீடு செய்துள்ளது. தொகுதி ஒப்பந்தத்தின் மூலம் அதானி குழுமத்துக்கு சொந்தமான 15,446 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை அவர் வாங்கியிருக்கிறார். இந்த தகவல் உடனடியாக பங்குச்சந்தை வட்டாரத்தில் பறக்கத் தொடங்கியது.
உடனே அதானியின் பங்குகள் மீண்டும் ஏறுமுகத்தை நோக்கி திரும்பின. இதன் பலன் முழுமையாக அதானிக்கு கிடைத்ததோ இல்லையோ.... ராஜீவ் ஜெயினுக்கு கிடைத்துள்ளது. ஏனென்றால் அவர் அதானி குழுமத்தில் முதலீடு செய்த 2 நாட்களில் அவரது பங்கு தொகை 3,100 கோடி ரூபாய் அதிகரித்துள்ளது. அதாவது ராஜீவ் ஜெயின் பங்குகள் இப்போது ரூ .18,548 கோடி மதிப்பை எட்டியுள்ளன. இது வெறும் 2 நாட்களில் மட்டும். ராஜீவ் ஜெயின் GQG Partners நிறுவனம் அதானி குழுமத்தின் 4 நிறுவனங்களின் பங்குகளை வாங்கியிருக்கிறது. அதாவது, அதானி துறைமுகங்கள் மற்றும் சிறப்பு பொருளாதார மண்டலம், அதானி கிரீன் எனர்ஜி உள்ளிட்ட நிறுவனங்களில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிறுவனங்கள் நீண்ட காலத்திற்கு மகத்தான வளர்ச்சி திறனைக் கொண்டுள்ளன என்று GQG பார்ட்னர்ஸ் தெரிவித்துள்ளது.
GQG பார்ட்னர்ஸ் ஜூன் 2016-ல் ராஜீவ் ஜெயின் என்பவரால் நிறுவப்பட்டது. GQG பார்ட்னர்ஸ் உலகின் முன்னணி உலகளாவிய மற்றும் வளர்ந்து வரும் சந்தைகள் முதலீட்டாளர்கள் நிறுவனமாகும். 31 ஜனவரி 2023 அன்று தரவுகளின்படி, நிறுவனம் 92 பில்லியன் டாலருக்கும் அதிகமான கிளையன்ட் சொத்துக்களை நிர்வகிக்கிறது. இந்நிறுவனம் அமெரிக்காவின் புளோரிடாவில் தலைமையிடமாக உள்ளது. அதன் அலுவலகங்கள் நியூயார்க், லண்டன், சியாட்டில் மற்றும் சிட்னியில் உள்ளன. இந்த நிறுவனம் ஆஸ்திரேலியாவின் பத்திர பரிமாற்றத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது. 2021 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவில் மிகப்பெரிய ஐபிஓவை கொண்டு வந்தது. அதன் மூலம் 1.187 பில்லியன் டாலர்களை திரட்டியது.
மேலும் படிக்க | Adani: ஏறு முகத்தில் கௌதம் அதானியின் சொத்து மதிப்பு..!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ