தங்கம் வெள்ளி விலை குறைந்தன, தீபாவளிக்கு தங்கம் வாங்க இதுதான் சரியான நேரமா…

தற்போது உலகளவில் பல குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டுக்கொண்டிருக்கும் வேளையில் தங்கத்தின் விலையிலும் அதிக மாற்றங்கள் காணப்படும் என்றே கணிக்கப்பட்டுள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 10, 2020, 11:14 AM IST
  • சென்னையில் இன்று 22 கேரட் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 4,766 ரூபாயாக உள்ளது.
  • வெள்ளி விலை கிராம் ஒன்றுக்கு 66.90 ரூபாயாக உள்ளது.
  • MCX டிசம்பர் ஒப்பந்தத்திற்கான தங்க டெலிவரி 10 கிராமுக்கு ரூ .2,500 குறைந்து.
தங்கம் வெள்ளி விலை குறைந்தன, தீபாவளிக்கு தங்கம் வாங்க இதுதான் சரியான நேரமா… title=

புதுடெல்லி: தீபாவளிக்கு முன்னதாக நாட்டில் தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் செவ்வாய்க்கிழமை, கடுமையாக சரிவைக் கண்டன.

பங்குச் சந்தையில், ஆரம்ப வர்த்தகத்தில், மல்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ்சில் (MCX) டிசம்பர் ஒப்பந்தத்திற்கான தங்க டெலிவரி 10 கிராமுக்கு ரூ .2,500 குறைந்து ரூ .49,665 ஆக இருந்தது. இதற்கிடையில், டிசம்பர் டெலிவரிக்கான வெள்ளி (Silver) ஃபூச்சர்ஸ் ஒரு கிலோவுக்கு ரூ .4,600 குறைந்து ரூ .60,725 ஆக இருந்தது.

இருப்பினும், MCX-ல் காலை 10.20 மணியளவில் டிசம்பர் ஒப்பந்தத்திற்கான தங்க (Gold) டெலிவரி விலை 1.28 சதவீதம் அதாவது ரூ .677 உயர்ந்து 10 கிராமுக்கு ரூ .50446 ஆக இருந்தது. இதற்கிடையில், டிசம்பர் டெலிவரிக்கான வெள்ளி ஃப்யூச்சர்ஸ் ஒரு கிலோவுக்கு 2.34 சதவீதம் அதாவது ரூ .1422 உயர்ந்து 62365 ரூபாயாக உள்ளது.

தேசிய தலைநகரில், தங்கத்தின் விலை (Gold Prices) திங்களன்று தொடர்ந்து நான்காவது நாளாக உயர்ந்து. தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ .277 அதிகரித்து ரூ .52,183 ஆக இருந்தது. முந்தைய வர்த்தகத்தில், தங்கம் 10 கிராமுக்கு ரூ .51,906 என்ற விலையில் வர்த்தகம்  முடிந்தது.

முந்தைய வர்த்தகத்தில் வெள்ளி விலைகள் ஒரு கிலோவுக்கு ரூ .66,005 ஆக இருந்து ஒரு கிலோவுக்கு ரூ .694 உயர்ந்து ரூ .65,699 ஆக இருந்தன.

ALSO READ: Cheapest rate-ல் தீபாவளியில் தங்கம் வாங்க வேண்டுமா? இப்படி வாங்கலாம்….

சென்னையில்https://zeenews.india.com/tamil/topics/சென்னை இன்று 22 கேரட் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 4,766 ரூபாயாக உள்ளது. வெள்ளி விலை கிராம் ஒன்றுக்கு 66.90 ரூபாயாக உள்ளது.

தற்போது உலகளவில் பல குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டுக்கொண்டிருக்கும் வேளையில் தங்கத்தின் விலையிலும் அதிக மாற்றங்கள் காணப்படும் என்றே கணிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபருக்கான தேர்தல்கள் தற்போதுதான் நடந்து முடிந்துள்ளன. COVID-19 தொற்றின் தடுப்பு மருந்து உருவாக்கத்திலும் பல நாடுகள் இறுதி கட்டத்தை நோக்கி பயணித்துக்கொண்டிருக்கின்றன. இவை அனைத்தும் தங்கத்தின் விலையில் மாற்றங்கள் ஏற்பட காரணங்களாக இருக்கலாம்.

எப்படியும் தீபாவளிக்கு முன்னர் தங்கம் விலை குறைந்து வருவதால், இப்போது தங்கம் வாங்க திட்டமிட்டிருக்கும் மக்களுக்கு இது நல்ல செய்தியாகவே உள்ளது.

ALSO READ: தீபாவளிக்கு 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அரசு அனுமதி..!

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News