ஊழியர்களுக்கு நல்ல செய்தி!! புதிய NPS Portal துவக்கம்... இனி இந்த வசதிகள் கிடைக்கும்

NPS New Portal: PFRDA தேசிய ஓய்வூதிய அமைப்பு அறக்கட்டளையின் இணையதளத்தை புதிய மேம்பாடுகளுடன் மீண்டும் தொடங்கியுள்ளது. இதில் சில புதிய வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Aug 19, 2023, 01:50 PM IST
  • இணையதளத்தில் புதிய கால்குலேட்டர் கொடுக்கப்பட்டுள்ளது.
  • அதன் உதவியுடன், உறுப்பினர்கள், எதிர்பார்க்கப்பட்ட ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியத்தின் மொத்தத் தொகையை எளிதாகக் கணக்கிட முடியும்.
  • மேலும், NPS இன் வருமானம் மற்றும் நன்மைகள் பற்றிய தகவலைப் பெறலாம்.
ஊழியர்களுக்கு நல்ல செய்தி!! புதிய NPS Portal துவக்கம்... இனி இந்த வசதிகள் கிடைக்கும் title=

ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (PFRDA) தேசிய ஓய்வூதிய அமைப்பு அறக்கட்டளையின் இணையதளத்தை புதிய மேம்பாடுகளுடன் மீண்டும் தொடங்கியுள்ளது. இதில் சில புதிய வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. இது தேசிய ஓய்வூதியத் திட்டத்துடன் தொடர்புடைய உறுப்பினர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இந்த இணையதளத்தை PFRDA தலைவர் டாக்டர் தீபக் மொஹந்தி தொடங்கி வைத்தார்.

PFRDA படி, ஓய்வூதிய முறையை மேலும் வலுப்படுத்த இணையதளத்தில் தேவையான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதன் நோக்கம் தேசிய ஓய்வூதிய அமைப்பு (NPS) மற்றும் அடல் பென்ஷன் யோஜனா (APY) தொடர்பான தகவல்களை அனைத்து உறுப்பினர்களுக்கும் தடையின்றி வழங்குவதாகும். புதிய இணையதளத்தை டெஸ்க்டாப் மற்றும் மொபைலில் இருந்து இயக்கலாம். மக்களின் தேவைகளை சிறப்பாக பூர்த்தி செய்ய பல புதிய அம்சங்கள் மற்றும் மேம்பாடுகள் இதில் சேர்க்கப்பட்டுள்ளன. இணையதளம் இந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் கிடைக்கிறது.

அதன் முகப்புப்பக்கத்திலேயே மூன்று முக்கியமான டேப்கள் சேர்க்கப்பட்டுள்ளன. அவை ஓப்பன் என்பிஎஸ் கணக்கு (Open NPS Account), திட்ட ஓய்வு (Pension Calculator) மற்றும் என்பிஎஸ் ஹோல்டிங்ஸைப் பார்க்கவும் (View NPS Holdings) ஆகியவை ஆகும். அவற்றின் உதவியுடன், உறுப்பினர்கள் ஒரே கிளிக்கில் தேவையான தகவல்களைப் பெறலாம். இது தவிர, முகப்புப்பக்கத்திலேயே எளிய கிராபிக்ஸ் மூலம், ஆண்டுதோறும் பெறப்படும் NPS -இன் மொத்தப் பலனைக் காணலாம். இந்த திருத்தப்பட்ட இணையதளம் https://npstrust.org.in இணைய முகவரியில் கிடைக்கிறது.

மேலும் படிக்க | பழைய ஓய்வூதிய திட்டம்.... முக்கிய அப்டேட்: மாநில அரசுகளுக்கு ரிசர்வ் வங்கி அளித்த எச்சரிக்கை

இந்த வசதிகள் இருக்கும்

புதிய இணையதளத்தில் NPS மற்றும் அடல் பென்ஷன் யோஜனா ஆகிய இரண்டிற்கும் விருப்பப் பட்டியல் ஆறு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இதில் வசதிகள் மற்றும் பலன்கள், ஆன்லைன் சேவைகள், வருமானம் மற்றும் விளக்கப்படங்கள், NPS கால்குலேட்டர் மற்றும் புகார்கள் மற்றும் தீர்வுகள் ஆகியவை அடங்கும். ஆன்லைன் சேவை விருப்பத்தின் கீழ் சந்தாதாரர்கள் தங்கள் PRAN, பிறந்த தேதி மற்றும் OTP ஆகியவற்றை அங்கீகரித்து தங்கள் NPS கணக்கின் முழு விவரங்களையும் பெறலாம்.

ஓய்வூதியத்தை கணக்கிடுவதற்கான புதிய கால்குலேட்டர்

இணையதளத்தில் புதிய கால்குலேட்டர் கொடுக்கப்பட்டுள்ளது. அதன் உதவியுடன், திட்டத்தின் உறுப்பினர்கள், எதிர்பார்க்கப்பட்ட ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியத்தின் மொத்தத் தொகையை எளிதாகக் கணக்கிட முடியும். மேலும், நீங்கள் NPS இன் வருமானம் மற்றும் நன்மைகள் பற்றிய தகவலைப் பெறலாம். இந்த இணையதளத்திற்கு சென்று, பணி ஓய்விற்குப் பிறகு நல்ல ஓய்வூதியத்தைப் பெற இப்போது எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும் என்பதையும் உறுப்பினர்கள் அறிந்து கொள்ளலாம். கால்குலேட்டரில், பிறந்த தேதி, மாதத்தின் மொத்த முதலீடு மற்றும் எத்தனை ஆண்டுகளுக்கு முதலீடு செய்யப்படும் என்ற விவரங்களை உள்ளிட வேண்டும். இதில், 57 மற்றும் 75 ஆண்டுகள் வரை முதலீட்டு விருப்பங்கள் வழங்கப்பட்டுள்ளன.

NPS இன் கீழ் ஓய்வூதியம்

75 வயது வரை என்.பி.எஸ்-ல் இருக்க விருப்பம் உள்ளது. 60 வயதில் ஓய்வு பெற்ற பிறகு, மொத்த தொகையில் 60% தொகையை மட்டுமே NPS இலிருந்து திரும்பப் பெற முடியும். இதற்கு வரிவிலக்கு உள்ளது. மீதமுள்ள 40 சதவீதத் தொகையை வருடாந்திர/ஓய்வூதியத் திட்டத்தில் முதலீடு செய்ய வேண்டும், அதில் இருந்து ஓய்வூதியம் பெறப்படுகிறது.

நிதி அமைச்சரின் அறிவிப்பு

அரசு ஊழியர்களுக்காக நிதியமைச்சர் வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பு மிகவும் நம்பிக்கை அளிக்கிறது. இப்போது தேசிய ஓய்வூதியத் திட்டத்திலேயே (என்பிஎஸ்) புதிய ஓய்வூதியத் திட்டத்தின் பலன் கிடைக்கும் என கூறப்படுகின்றது. பழைய ஓய்வூதியத் திட்டத்துக்கு மாற்றுத் திட்டத்தைத் தயாரிக்க அரசு ஒரு குழுவை அமைத்துள்ளது. பழைய ஓய்வூதியத் திட்டத்தைப் போலவே புதிய ஓய்வூதியத் திட்டத்தையும் பிரபலமாக்க இந்தக் குழு இப்போது செயல்படும்.

மேலும் படிக்க | சந்தோஷத்தில் திளைக்கும் ஊழியர்கள்... ஊதியத்தை அதிகரித்த மாநில அரசு!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News