Air Bubbles: மேலும் 13 நாடுகளுடன் இந்திய விமான போக்குவரத்து அமைச்சகம் பேச்சு வார்த்தை..!!!

அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கத்தார் மற்றும் மாலத்தீவு ஆகிய நாடுகளுடன் ஏற்கனவே விமான பயண ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

Last Updated : Aug 18, 2020, 06:30 PM IST
  • அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கத்தார் மற்றும் மாலத்தீவு ஆகிய நாடுகளுடன் ஏற்கனவே விமான பயண ஒப்பந்தங்கள் அமலில் உள்ளன.
  • ஆகஸ்ட் 1 ஆம் தேதி தொடங்கிய வந்தே பாரத் திட்டத்தின் 5 ஆம் கட்டம் ஆகஸ்ட் 31 ஆம் தேதியுடன் முடிவடைகிறது.
  • இத்திட்டத்தின் 6 ஆம் கட்டம் செப்டம்பர் 1 முதல் தொடங்குகிறது
Air Bubbles: மேலும் 13 நாடுகளுடன் இந்திய விமான போக்குவரத்து அமைச்சகம் பேச்சு வார்த்தை..!!! title=

இரு நாடுகளுக்கு இடையிலான பாதுகாப்பான சர்வதேச விமான போக்குவரத்து தொடர்பாக 13 நாடுகளுடன் இந்தியா பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக விமான போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்

அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கத்தார் மற்றும் மாலத்தீவு ஆகிய நாடுகளுடன் ஏற்கனவே விமான பயண ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அண்டை நாடுகளான இலங்கை, பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான், நேபாளம் மற்றும் நாடுகளுடன் Air bubbles எனப்படும் இரு தரப்பு விமான போக்குவரத்து ஒப்பந்த திட்டம் முன்மொழியப்பட்டுள்ளன என்று சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்தார்.

மத்திய அரசின் வந்தே பாரத் மிஷனின் ஒரு பகுதியாக, இந்தியா, வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை தாயகம் அழைத்து வரும் முயற்சியில், 13 நாடுகளுடன் இருதரப்பு  ஏர் பப்பிள்ஸ் எனப்படும் விமான போக்குவரத்து திட்டத்தை செயல்படுத்த பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது.

ஆஸ்திரேலியா, இத்தாலி, ஜப்பான், நியூசிலாந்து, நைஜீரியா, பஹ்ரைன், இஸ்ரேல், கென்யா, பிலிப்பைன்ஸ், ரஷ்யா, சிங்கப்பூர், தென் கொரியா மற்றும் தாய்லாந்து ஆகியவை இதில் அடங்கும் என்று பூரி தொடர் ட்வீட்டுகளில் தெரிவித்துள்ளார்.

இருதரப்பு விமான போக்குவரத்து ஒப்பந்தத்தின் கீழ், இரு நாடுகளின் விமான நிறுவனங்களும் சில கட்டுப்பாடுகளுடன் சர்வதேச விமானங்களை இயக்க முடியும்.

மேலும் படிக்க | மும்பையில் லால்பாக்சா ராஜா இல்லாத விநாயகர் சதுர்த்தி... 86 ஆண்டுகளில் முதல் முறை..!!!

அண்டை நாடுகளான இலங்கை, பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான், நேபாளம் மற்றும் பூட்டான் ஆகிய நாடுகளுடனும்  ஏர் பப்பிஸ் எனப்படும் இந்த ஒப்பந்தம் முன்மொழியப்பட்டுள்ளது என்று விமான போக்குவரத்து அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

​​மற்ற நாடுகளுடனும் இதுபோன்ற ஏற்பாடுகளை நாங்கள் பரிசீலிப்போம். என உறுதி அளித்த அவர், வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் ஒவ்வொரு குடிமகனை தாயநாட்டிற்கு பாதுகாப்பாக கொண்டு வருதே அரசின் நோக்கம் என மேலும் கூறினார்.

மேலும் படிக்க | விமான நிலையம் தனியார் தனியார் மயமாக்கல்… விமான போக்குவரத்து அமைச்சகம் முன்மொழிவு..!!!

ஆகஸ்ட் 1 ஆம் தேதி தொடங்கிய வந்தே பாரத் திட்டத்தின் 5 ஆம் கட்டம் ஆகஸ்ட் 31 ஆம் தேதியுடன் முடிவடைந்து 6 ஆம் கட்டம் செப்டம்பர் 1 முதல்  தொடங்கி அக்டோபர் 24 வரை நீடிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News