SCSS: சீனியர் சிட்டிசன்களுக்கு வரிச் சலுகையுடன் கூடிய சிறப்பான ஓய்வூதியத் திட்டம்!

Senior Citizen Savings Scheme: முன்கூட்டியே திட்டமிட்டு ஓய்வூதிய நிதியில் பணத்தை முதலீடு செய்தால், வயதான காலத்தில் நிம்மதியாக வாழலாம். 

Written by - Malathi Tamilselvan | Last Updated : Oct 4, 2023, 11:46 AM IST
  • 5 ஆண்டுகளுக்கு ரூ. 1- 15 லட்சம் வரை முதலீடு!
  • SCSS திட்டம் கொடுக்கும் வருவாய்
  • வரிச் சலுகையுடன் கூடிய ஓய்வூதியத் திட்டம்
SCSS: சீனியர் சிட்டிசன்களுக்கு வரிச் சலுகையுடன் கூடிய சிறப்பான ஓய்வூதியத் திட்டம்! title=

புதுடெல்லி: மூத்த குடிமக்களுக்கான சிறந்த மற்றும் பாதுகாப்பான ஓய்வூதிய முதலீட்டுத் திட்டங்களில் ஒன்றாக மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் உருவெடுத்துள்ளது. அரசாங்கத்தால் நடத்தப்படும் திட்டத்தில் முதலீடு செய்யும் முதலீட்டாளர்களுக்கு அதிகபட்ச வருவானம் கிடைக்கிறது. எஸ்சிஎஸ்எஸ்ஸில் ரூ. 1 முதல் ரூ. 15 லட்சம் வரையிலான முதலீட்டு, எவ்வளவு வருமானத்தைக் கொடுக்கும் கிடைக்கும் என்பதைத் தெரிந்துகொள்வோம்.

வாழ்க்கையில் கடமைகளை எல்லாம் முடித்துவிட்டு, பணி ஓய்வு பெற்ற பிறகு, யாரையும் சாராமல் வாழ வேண்டும் என்ற எண்ணம் பலருக்கும் பொதுவானது தான். தங்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் மருந்துகளை வாங்குவதற்கான அன்றாடச் செலவுகளுக்கு யாரையும் சார்ந்திருக்க வேண்டிய அவசியமில்லாத பாதுகாப்பான வாழ்க்கை அவசியமானது.

பணி ஓய்வுக்குப் பிந்தைய வாழ்க்கைக்காக, சம்பாதிக்கும் காலத்திலேயே ஓய்வூதிய நிதிகளில் முதலீடு செய்கிறார்கள். அலுவலக வேலை, தொழில் என பலரும் அவரவர் வேலைக்கு ஏற்ப பணம் சம்பாதித்தபோது சேமித்த பணம், அவர்கள், வருவாய் ஈட்டாத நிலையில், பெரும் ஆதரவாக வருகிறது. இதற்கு முன்கூட்டியே திட்டமிட்டு ஓய்வூதிய நிதியில் பணத்தை முதலீடு செய்வது அவசியம். இந்த நிதியில் இருக்கும் பணம் கொடுக்கும் வட்டியை வாங்கி வாழ்க்கையை நிம்மதியாக தொடரலாம். 

வட்டியை செலவு செய்தாலும்கூட, நீங்கள் முதலீடு செய்த பணமும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கும்.இதுபோன்ற திட்டங்களில் மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (Senior Citizen Savings Scheme (SCSS)) மிகவும் சிறப்பானது.

மேலும் படிக்க | Employee Pension Scheme: ஓய்வூதியம் தொடர்பான முக்கிய அறிவிப்பு!

பணி ஓய்வு பெற்ற முதியவர்களில், 60 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய எந்தவொரு நபரும் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யலாம். 55-60 வயதுக்குட்பட்ட வி.ஆர்.எஸ் தெரிவில் விருப்பப் பணி ஓய்வு (voluntary retirement scheme) எடுத்துள்ளவர்கள் மற்றும் ஓய்வு பெற்ற பாதுகாப்புப் பணியாளர்கள் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யலாம்.

அதிகபட்ச முதலீட்டு வரம்பு
எஸ்சிஎஸ்எஸ்ஸில் குறைந்தபட்சம்1,000 ரூபாய் முதலீடு செய்யலாம் என்றால் அதிகபட்சம் 30 லட்சம் வரை முதலீடு செய்யலாம். அதிகபட்ச முதலீட்டு வரம்பு அதன் முந்தைய வரம்பான ரூ.15 லட்சத்தில் இருந்து இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது என்பது இந்த திட்டத்தின் சிறப்பம்சம் ஆகும். 

இந்த கணக்கு தொடங்கிய நாளிலிருந்து 5 ஆண்டுகளுக்குப் பிறகு, டெபாசிட் செய்யப்பட்ட தொகை முதிர்ச்சியடைகிறது. டெபாசிட் செய்யப்பட்ட தொகைக்கு காலாண்டு அடிப்படையில் வட்டி வழங்கப்படுகிறது. மூத்த குடிமக்களுக்கு வரிச் சலுகைகளையும் இந்தத் திட்டம் வழங்குகிறது.

மேலும் படிக்க | MPC நிதிக் கொள்கைக் குழு, ரெப்போ ரேட்டை திருத்துமா? இல்லை என்றால் காரணம் இதுதான் 

SCSS திட்டத்தில் 5 ஆண்டுகளில் ஒரு லட்சம் முதல் 15 லட்சம் வரை முதலீடு செய்தால் கிடைக்கும் பலன் என்ன?
1 லட்சம் முதல் 15 லட்சம் வரை முதலீடு செய்தால் எவ்வளவு பணம் கிடைக்கும் என்பதைத் தெரிந்துகொள்ள விரிவான கணக்கீட்டை வழங்கியுள்ளோம்.

ரூ.1,00,000 முதலீடு - முதிர்வு காலத்தில் ரூ.1,41,000 .
ரூ.2,00,000 முதலீடு - முதிர்வு காலத்தில் ரூ.2,82,000 
ரூ.3,00,000 முதலீடு - முதிர்வு காலத்தில் ரூ.4,23,000 
ரூ.4,00,000 முதலீடு - முதிர்வு காலத்தில் ரூ.5,64,000 
ரூ.5,00,000 முதலீடு - முதிர்வு காலத்தில் ரூ.7,05,000  
ரூ.6,00,000 முதலீடு - முதிர்வு காலத்தில் ரூ.8,46,000  
ரூ.7,00,000 முதலீடு - முதிர்வு காலத்தில் ரூ.9,87,000  
ரூ.8,00,000 முதலீடு - முதிர்வு காலத்தில் ரூ.11,28,000  
ரூ.9,00,000 முதலீடு - முதிர்வு காலத்தில் ரூ.12,69,000  
ரூ.10,00,000 முதலீடு - முதிர்வு காலத்தில் ரூ.14,10,000 
ரூ.11,00,000 முதலீடு - முதிர்வு காலத்தில் ரூ.15,51,000  
ரூ.12,00,000 முதலீடு - ரூ.16,92,000 கிடைக்கும்.
ரூ.13,00,000 முதலீடு - ரூ.18,33,000 கிடைக்கும்.
ரூ.14,00,000 முதலீடு - ரூ.19,74,000 கிடைக்கும்.
ரூ.15,00,000 முதலீடு - ரூ.21,15,000 கிடைக்கும்.

மேலும் படிக்க | 8th Pay Commission 2024இல் வந்துவிடும்! முறையான அறிவிப்பு விரைவில்! பே மேட்ரிக்ஸ் இப்படி இருக்குமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News