8th Pay Commission 2024இல் வந்துவிடும்! முறையான அறிவிப்பு விரைவில்! பே மேட்ரிக்ஸ் இப்படி இருக்குமா?

8th Pay Commission Latest Update: அடுத்த ஆண்டு பொதுத்தேர்தல் அறிவிப்பு வெளியாவதற்கு முன்னதாக, அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சி செய்தியை கொடுக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது....ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கும்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Oct 4, 2023, 06:49 AM IST
  • அரசு ஊழியர்களுக்கு லாட்டரி
  • 8வது சம்பள கமிஷன் லேட்டஸ்ட் அப்டேட்
  • அகவிலைப்படி 50% -ஐ எட்டும் நிலையில் ஊதியங்கள் திருத்தப்படும்
8th Pay Commission 2024இல் வந்துவிடும்! முறையான அறிவிப்பு விரைவில்! பே மேட்ரிக்ஸ் இப்படி இருக்குமா? title=

8வது சம்பள கமிஷன் தேதி அப்டேட்: ஏழாவது சம்பள கமிஷனுக்கு பதிலாக அரசு 8-வது ஊதியக்குழுவை அமல்படுத்த வேண்டும் என்கிற கோரிக்கை நீண்ட நாட்களாகவே இருந்து வரும் நிலையில், தற்போது மீண்டும் அந்த கோரிக்கைகள் உச்சம் பெற்றுள்ளன. இதற்கு காரணம், அடுத்த ஆண்டு பொதுத்தேர்தல் வரவிருக்கும் நிலையில், அதற்கு முன்னதாக அரசுப் பணியாளர்களை திருப்திபடுத்தும் வகையில் மத்திய அரசு இந்த அறிவிப்பை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தக் கட்டுரையில் 8வது சம்பள கமிஷன் எப்போது அமல்படுத்தப்படும் என்பது முதல் சம்பள மேட்ரிக்ஸ் முதல் பல முக்கியமான தகவல்களை தெரிந்துக் கொள்ளலாம்.

ஊதிய உயர்வு கணிசமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பில் அரசு ஊழியர்கள், எட்டாவது சம்பளக் கமிஷன் தொடர்பான செய்திகளை அறிந்துக் கொள்ள ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். 

8வது ஊதியக் குழு

எட்டாவது சம்பள கமிஷன் என்பது, மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் தொடர்பான விஷயங்களை எளிதாக்கும் வகையில் தொடங்கப்பட்டது. ஏனென்றால், அகவிலைப்படி 50% -ஐ எட்டும் நிலையில் ஊதியங்கள் திருத்தப்பட வேண்டும். ஏழாவது ஊதியக் குழுவின் உருவாக்கப்பட்டபோதுஅகவிலைப்படியை திருத்துவதற்கான விதிகளை அரசாங்கம் மாற்றியது.

அதன் படி அகவிலைப்படி 50 சதவீதத்தை எட்டும்போது, அதன்பிறகு அகவிலைப்படி மீண்டும் ​​பூஜ்ஜியமாக்கப்படும். அதற்குப் பிறகு, அப்போதுள்ள அடிப்படை சம்பளத்துடன் 50 சதவீத டிஏ சேர்க்கப்பட்டு, அகவிலைப்படி கணக்கீடு பூஜ்ஜியத்தில் இருந்து தொடங்கும்.

சம்பள மதிப்பீடு 

அதாவது மத்திய அரசு ஊழியர்களின் அடிப்படை சம்பளம், அகவிலைப்படி (Dearness Allowance) , வீடு மற்றும் வாடகை, பயணப்படி, மருத்துவப்படி, சம்பளம், ஊக்கத்தொகை, ஓய்வூதியத் திட்டங்கள், வீட்டு வாடகை போன்றவற்றை மதிப்பீடு செய்யப்படும்.

மேலும் படிக்க | Jackpot! உங்கள் தலை எழுத்தை மாற்றும் ‘இந்த’ பிங்க் நிற 20 ரூபாய் நோட்டு!

மதிப்பீடு செய்யப்பட்டு, அவற்றில் தேவையான திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்டது. 8வது ஊதியக் குழு தொடர்பான அறிவிப்பு, 2023 மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.

இந்தத் திட்டத்தில் பதிவு செய்த ஊழியர்கள், 8வது ஊதியக்குழு எப்போது அமல்படுத்தப்படும் என்பதை அறிந்துக் கொள்ள ஆவலுடன் காத்திருக்கின்றனர். 

8வது சம்பள கமிஷன் எதிர்பார்க்கப்படும் தேதி
மத்திய பொருளாதார விவகாரங்கள் துறை தான் மத்திய அரசின் சம்பள கமிஷனுக்கு பொறுப்பான அதிகார அமைப்பு ஆகும்.நிதி தொடர்பான விஷயங்களை கையாளுதல், அத்தியாவசிய கொள்கைகளை உருவாக்குதல், நாட்டின் பொருளாதார நிலையை பகுப்பாய்வு செய்தல் மற்றும் பல பணிகளை செய்யும் துறை இது என்பது குறிப்பிடத்தக்கது. 

ஊதியக் குழுவைத் தொடர தேவையான ஃபிட்மென்ட் காரணி பரிசீலிக்கப்படுகிறது. அடுத்த ஆண்டு ஜனவரி மாதம், அதாவது நாட்டில் பொதுத்தேர்தல் அறிவிப்பதற்கு முன்னதாகவே 8வது சம்பள கமிஷன் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க | 8th Pay Commission: 44% ஊதிய உயர்வு... புதிய சூத்திரத்துடன் வருகிறதா புதிய ஊதியக்குழு?

ஊதியக் குழு- அட்டவணை
ஊதியக் குழுவிற்கான அட்டவணை என்னவாக இருக்கும் என்பதை தெரிந்துக் கொள்ள பயனாளிகள் ஆவலுடன் இருக்கின்றனர். அதுதான், அவர்களுடைய சம்பளம் எந்தெந்த வகையில் பிரித்து அளிக்கப்படும் என்பதை தீர்மானிப்பதற்கு உதவியாக இருக்கும். பணியாளர் செயல்திறன், தீர்மானிக்கப்பட்ட ஊதியம், ஆண்டுகள் அனுபவம் உட்பட பல்வேறு காரணிகளின் அடிப்படையில் சம்பளம் தீர்மானிக்கப்படும். சம்பந்தப்பட்ட துறை வழங்கும் வழிகாட்டுதல்களை ஊழியர்கள் பின்பற்ற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

8வது ஊதியக் குழுவின் சாதகமான அம்சங்கள்
பொதுவாக10 ஆண்டுகளுக்கு ஒருமுறை அரசு ஊழியர்களுக்கான ஊதியக் குழு விதிகள் மாற்றப்படுகின்றன.  5-வது ஊதியக்குழு, 6-வது ஊதியக்குழு மற்றும் 7-வது ஊதியக் குழு போன்றவை நிறுவப்பட்டபோதும் இதே முறை தான் கடைபிடிக்கப்பட்டது.

8-வது ஊதியக் குழு, அடுத்த நிதியாண்டு முதல் ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்தப் போகிறது. உண்மையில், இது தொடர்பான ஆலோசனை கொரோனா வைரஸ் பரவலுக்கு முன்னரே தொடங்கிவிட்டாலும், உலகத்தையே உலுக்கிய கொரோனாவின் தாக்கம் இந்த திட்டத்தை ஒத்திப்போட வைத்துவிட்டது. தற்போது, தொற்றுநோய் ஏற்படுத்திய உலகளாவிய சிக்கல்களில் இருந்து வெளியே வந்துக் கொண்டிருக்கும் நிலையில், இந்திய அரசு மீண்டும் சம்பளக் கமிஷன் தொடர்பான செயல்பாடுகளை முடுக்கிவிட்டுள்ளது.  

மேலும் படிக்க | மத்திய ஊழியர்களுக்கு டபுள் குட் நியூஸ்.. டிஏ உயர்வு, இந்த தேதியில் பெரும் பரிசு

கொரோனா பாதிப்பு தொடங்கி மூன்றாடுகளுக்கு மேல் ஆகிவிட்டாலும், தற்போதும் அதன் தாக்கம் பொருளாதாரத்தில் இருக்கும் நிலையில், ஒட்டுமொத்த நிதி நிலையில் சற்று சுணக்கம் காணப்பட்டாலும், எட்டாவது சம்பளக் கமிஷனைத் தொடங்க அதிகாரிகள் காத்திருக்கிறார்கள்.

இது தொடர்பான நிதிச் சொத்துக்கள் 25% உயர்த்தப்படும் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அரசு ஊழியர்களின் ஊதியம் பல மடங்கு உயரலாம் என்றும், தோராயமாக 20-25% உயர்வு இருக்கலாம் என்றும் ஊகிக்கப்படுகிறது.

8வது சம்பள கமிஷன் பே மேட்ரிக்ஸ் என்னவாக இருக்கும்?
ஊதியத்தை நிர்ணயிக்கும் கணக்கீடு மேட்ரிக்ஸ் (8th Pay Commission Pay Matrix) பல்வேறு நிலைகளுக்கு ஏற்ப செய்யப்படும். நிலை 1க்கு, 8வது ஊதியக் குழு ரூ.21,600 ஆகவும், லெவல் 2 ரூ.23 ஆகவும், 880 முதல் நிலை 18க்கு ரூ.300,000 ஆகவும் இருக்கும். பொருளாதார விவகாரங்கள் துறையின் போர்ட்டலில் (portal of the Department of Economic Affairs) இருந்து தொழிலாளர்கள் இது தொடர்பான அதிகாரபூர்வ தகவல்களையும் தரவுகளையும் சரிபார்த்துக் கொள்ளலாம்.

மத்திய அரசு ஊழியர்கள், தங்கள் சம்பள மேட்ரிக்ஸைக் கணிப்பதற்காக, அவர்களது மாதாந்திர சம்பளத்தின் பதிவை வைத்திருக்க வேண்டும். குடிமக்களின் நலனுக்காக இந்திய அரசு எடுத்துள்ள முக்கிய நடவடிக்கைகளில் 8வது ஊதியக் குழுவும் ஒன்றாகும். 

மேலும் படிக்க | 8th Pay Commission விரைவில்? 50% -ஐ தாண்டும் அகவிலைப்படி.. குஷியோடு காத்திருகும் ஊழியர்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News