Chhotu: இந்தியன் ஆயில் 5 குட்டி கிலோ சிலிண்டரின் புதிய பிராண்ட் பெயர்

IOC தனது 5 கிலோ குட்டி எல்பிஜி சிலிண்டரை “சோட்டூ” என்ற பெயரில் புதுதில்லியில் வெள்ளிக்கிழமை அறிமுகப்படுத்தியது. 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Dec 12, 2020, 08:53 PM IST
  • நாட்டில் 695 மாவட்டங்களில் சோட்டூ என்னும் 5 கிலோ குட்டி சிலிண்டர் கிடைக்கிறது.
  • இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், இதனை அறிமுகப்படுத்தியதில் இருந்து கிட்டத்தட்ட 52 லட்சம் சிலிண்டர்களை விற்றுள்ளது.
Chhotu:  இந்தியன் ஆயில் 5 குட்டி கிலோ சிலிண்டரின் புதிய பிராண்ட் பெயர் title=

மிகவும் பிரபலமாக உள்ள சிறிய LPG சிலிண்டருக்கு புதிய பிராண்ட் அடையாளத்தை கொடுத்துள்ள இந்திய ஆயில் கார்பரேஷன். வாடிக்கையாளர்கள் எளிதாக அடையாளப்படுத்தும் வகையில்  இப்போது 5 கிலோ LPG சிலிண்டருக்கு ‘சோட்டூ” என பெயரிட்டுள்ளது.

IOC தனது 5 கிலோ குட்டி எல்பிஜி சிலிண்டரை “சோட்டூ” என்ற பெயரில் புதுதில்லியில் வெள்ளிக்கிழமை அறிமுகப்படுத்தியது. 

இந்த இண்டேன் வகை சிலிண்டரை, இந்தியன் ஆயிலால் அறிமுகப்படுத்தியது. முகவரி ஆதாரம் ஏதும் இல்லாத புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், மற்றும் இடம் மாறிக் கொண்டே இருக்கும் வேறு பிரிவினர் மற்றும் குறைந்த அளவு எல்பிஜி (LPG Cylinder)  தேவைப்படும் குடும்பங்கள் மற்றும் சிறு வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட குறிப்பிட்ட பிரிவுகளின் தேவைகளை மனதில் கொண்டு இந்த குட்டி சிலிண்டரை அறிமுகப்படுத்தியது.

ALSO READ | Good News: 8 மாதங்களில் 60 கோடி கொரோனா தடுப்பூசி வழங்க தயாராகிறது இந்தியா

இந்த குட்டி சிலிண்டரைப் பெற, ஒரு வாடிக்கையாளர் தனது அடையாள அட்டை நகலை சமர்ப்பிக்க வேண்டும். வேறு எந்த ஆவணமும் தேவையில்லை. கூடுதலாக, இந்த சிலிண்டர்களை எடுத்துச் செல்லவும் பயன்படுத்தவும் எளிதானது என்று ஐஓசி ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

சிலிண்டரின் கச்சிதமான மற்றும் பாதுகாப்பான வடிவமைப்பு  எல்பிஜி சிலிண்டர் உடனடியாக தேவைப்படும் அனைத்து விதமான வாடிக்கையாளர்களுக்கும் இது பயனுள்ளதாக உள்ளது என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியன் ஆயில் கார்பரேஷனின் (IOC) சில்லறை விற்பனை நிலையங்கள், இண்டேன் விநியோகஸ்தர்கள் மற்றும் சில மளிகை கடைகள் உள்ளிட்ட பல்வேறு விற்பனை இடங்களில் சிலிண்டர்கள் கிடைக்கின்றன. மேலும் அவை வாடிக்கையாளரின் தனக்கு அருகில் உள்ள இடத்திலிருந்து வாங்கலாம்.

“சோட்டூ சிலிண்டர், அதாவது ஐந்து கிலோ குட்டி சிலிண்டர் வாங்க எந்தவொரு ஆவணமும் தேவையில்லை. மிக எளிதாகக் கிடைக்கும், கையில் எடுத்து செல்லலாம். மீண்டும் நிரப்பவும் எளிதானது. கடுமையான பாதுகாப்பு சோதனைகள் நடத்தப்பட்டு வரும், சோட்டு என்னும் குட்டி சிலிண்டர், சமையலறையில் உங்கள் தேவையை நிறைவேற்றும், ”இந்தியன் ஆயில் தலைவர் எஸ்.எம்.  வைத்யா கூறினார்.

நாட்டில் 695 மாவட்டங்களில் சோட்டூ என்னும் 5 கிலோ குட்டி சிலிண்டர்  கிடைக்கிறது. இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், இதனை அறிமுகப்படுத்தியதில்  இருந்து கிட்டத்தட்ட 52 லட்சம் சிலிண்டர்களை விற்றுள்ளது.

ALSO READ | சம்பள பாக்கி பிரச்சனை: iPhone தொழிற்சாலையை அடித்து நொறுக்கிய ஊழியர்கள்

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News