ITR Filing முக்கிய அப்டேட்: இந்த தேதிக்குள் ஐடிஆர் தாக்கல் செய்யவில்லை என்றால் அதிக அபராதம்

Income Tax Return: வருமான வரிக்குள் வராத வரம்பில் இருந்தாலும், கண்டிப்பாக ஜீரோ ஐடிஆர் (0 ஐடிஆர்) தாக்கல் செய்ய வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jul 8, 2022, 01:50 PM IST
  • நீங்கள் வரி செலுத்துகிறீர்களா?
  • உங்களுக்கு ஒரு முக்கிய அப்டேட் உள்ளது.
  • நீங்களும் வருமான வரிக்குள் வராத வரம்பில் இருந்தால், கண்டிப்பாக ஜீரோ ஐடிஆர் (0 ஐடிஆர்) தாக்கல் செய்ய வேண்டும்.
ITR Filing முக்கிய அப்டேட்: இந்த தேதிக்குள் ஐடிஆர் தாக்கல் செய்யவில்லை என்றால் அதிக அபராதம் title=

வருமான வரி அறிக்கை: நீங்கள் வரி செலுத்துகிறீர்களா? இந்தக் கேள்விக்கு பலரது பதில் 'எங்கள் வருமானம் வரி வரம்புக்குள் வராது' என்பதுதான். உங்களுக்கும் இதே நிலை இருந்தால், நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கியமான விஷயம் ஒன்று உள்ளது. நீங்களும் வருமான வரிக்குள் வராத வரம்பில் இருந்தால், கண்டிப்பாக ஜீரோ ஐடிஆர் (0 ஐடிஆர்) தாக்கல் செய்ய வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

அதை நிரப்புவது உங்களுக்கு பல வழிகளில் நன்மை பயக்கும். 2021-22 (AY 2022-23) நிதியாண்டிற்கு வருமான வரித் துறையால் வருமான வரி அறிக்கை படிவம் (ஐடிஆர் படிவம்) அறிவிக்கப்பட்டுள்ளது. வருமான வரி கணக்கு தாக்கல் ஜூன் 15, 2022 முதல் தொடங்கியது.

ஜூலை 31 வரை ஐடிஆர் தாக்கல் செய்யலாம்

நீங்கள் அலுவலகத்தில் இருந்து படிவம்-16 பெற்றிருந்தால், விரைவில் ஐடிஆர் தாக்கல் செய்யுங்கள். ஏனெனில் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி ஜூலை 31 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்குப் பிறகு, ஐடிஆர் தாக்கல் செய்வதற்கு அபராதம் செலுத்த வேண்டும். 

மேலும் படிக்க | HDFC Bank வாடிக்கையாளர்களுக்கு ஷாக்: இன்று முதல் இந்த புதிய விதி அமல்

இரண்டாவதாக, கடைசி தேதி நெருங்கி வருவதால், இணையதளத்தில் அதிக வரி செலுத்துவோர் ரிட்டர்ன் தாக்கல் செய்வதால் சுமை அதிகரிக்கிறது. இதுபோன்ற சூழ்நிலையில், தாக்கல் செய்வதில் சிக்கல் ஏற்படலாம். ஆகையால் முடிந்தவரை உங்கள் அறிக்கையை விரைவில் தாக்கல் செய்வது நல்லதாகும். 

ஜூலை 31க்குப் பிறகு அபராதம் செலுத்த வேண்டும்

2021-22 நிதியாண்டு அல்லது 2022-23 மதிப்பீட்டு ஆண்டுக்கான தாமதக் கட்டணம் இல்லாமல் வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்வதற்கான கடைசித் தேதி 31 ஜூலை 2022 என்பது குறிப்பிடத்தக்கது. காலக்கெடுவிற்குப் பிறகு வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்வதற்கு, வருமான வரியின் பிரிவு 234A மற்றும் பிரிவு 234F இன் கீழ் அபராதம் செலுத்த வேண்டும். தனிநபர் HUFக்கான வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி ஜூலை 31 ஆகும்.

இது தவிர, தணிக்கை தேவைப்படுபவர்களுக்கு வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி 31 அக்டோபர் 2022 ஆகும். அதேசமயம், TP அறிக்கை தேவைப்படும் வணிகத்திற்கான வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி நவம்பர் 30, 2022 ஆகும்.

மேலும் படிக்க | உங்களிடம் PPF Account இருக்கா? இந்த மாற்றத்தை உடனே கவனியுங்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News