எச்டிஎஃப்சி வங்கி வட்டி விகிதம்: மிகப்பெரிய தனியார் துறை வங்கியான எச்டிஎஃப்சி வங்கியின் கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சியான செய்தி ஒன்று உள்ளது. எச்டிஎஃப்சி வங்கி, பல்வேறு தவணைக்காலங்களின் அனைத்து வகையான கடன்களுக்கான எம்சிஎல்ஆர்-ஐ அதிகரித்துள்ளது.
பணவீக்கம் அதிகரித்து வரும் நிலையில், இந்த செய்தி நடுத்தர மற்றும் கீழ்தட்டு மக்களுக்கு பெரும் அடியாக கருதப்படுகிறது. எச்டிஎஃப்சி வங்கி 20 அடிப்படை புள்ளிகளை அதிகரித்துள்ளது. வங்கியின் இந்த நடவடிக்கைக்குப் பிறகு, ஹெச்டிஎஃப்சியில் வீட்டுக் கடன், கார் கடன் மற்றும் தனிநபர் கடன் வாங்கிய வாடிக்கையாளர்களின் இஎம்ஐ-க்கான சுமை மேலும் அதிகரிக்கும்.
புதிய கட்டணங்கள் இன்று முதல் அமலுக்கு வருகின்றன
புதிய விகிதங்கள் ஜூலை 7 முதல் உடனடியாக அமலுக்கு வரும் வகையில் வங்கியால் அமல்படுத்தப்பட்டுள்ளது. வங்கியின் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள தகவலின்படி, ஒரு இரவுக்கான எம்சிஎல்ஆர் விகிதம் 20 அடிப்படை புள்ளிகள் அதிகரித்து 7.70 சதவீதமாக உள்ளது.
மேலும் படிக்க | உங்களிடம் PPF Account இருக்கா? இந்த மாற்றத்தை உடனே கவனியுங்கள்
இதேபோல், ஒரு மாத கால அளவு கொண்ட எம்சிஎல்ஆர் விகிதம் 7.75 சதவீதமாகவும், 3 மாத காலத்திற்கான எம்சிஎல்ஆர் விகிதம் 7.80 சதவீதமாகவும், ஆறு மாதங்களுக்கான எம்சிஎல்ஆர் விகிதம் 7.90 சதவீதமாகவும் உள்ளது. அதேபோல், ஓராண்டுக்கான எம்சிஎல்ஆர் 8.05 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 35 அடிப்படை புள்ளிகள் உயர்த்தப்பட்டன
எச்டிஎஃப்சி வங்கி கடந்த மாதம் மட்டும் 35 அடிப்படை புள்ளிகளை அதிகரித்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மாற்றம் ஜூன் 7 முதல் அமல்படுத்தப்பட்டது. ஒரு மாதத்தில் இரண்டாவது முறையாக எச்டிஎஃப்சி கட்டணத்தை மாற்றியுள்ளது.
ரிசர்வ் வங்கியின் ரெப்போ ரேட் மற்றும் ரிவர்ஸ் ரெப்போ ரேட் உயர்த்தப்பட்ட பிறகு, பல்வேறு வங்கிகளின் கடன்களின் விகிதங்கள் அதிகமாகின என்பது குறிப்பிடத்தக்கது. ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் கடந்த ஜூன் 8 ஆம் தேதி ரெப்போ விகிதத்தை 50 அடிப்படை புள்ளிகள் உயர்த்தினார். இதற்கு சில நாட்களுக்கு முன், திடீரென 40 அடிப்படை புள்ளிகள் அதிகரிக்கப்பட்டன. அதன்படி, கடந்த ஒரு மாதத்தில் 90 பைசா அதிகரித்துள்ளது.
வங்கியின் நெட்வொர்க் இரட்டிப்பாகும்
முன்னதாக ஜூன் 22 அன்று, நாடு முழுவதும் தற்போதுள்ள கிளைகளை இரட்டிப்பாக்கும் திட்டம் வங்கியால் அறிவிக்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1,500 முதல் 2,000 கிளைகள் திறக்கப்படும் என்று வங்கி தெரிவித்தது. இதன் மூலம், வங்கியின் நெட்வொர்க் வரும் மூன்று முதல் ஐந்து ஆண்டுகளில் இரட்டிப்பாகும்.
தற்போது, வங்கிக்கு நாட்டில் 6,000க்கும் மேற்பட்ட கிளைகள் உள்ளன. மக்கள் தொகைக்கு ஏற்ப பார்த்தால், பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பு (ஓ.இ.சி.டி.,) நாடுகளை விட, வங்கியின் கிளைகளின் எண்ணிக்கை குறைவாக உள்ளதாக வங்கி அதிகாரி தரப்பில் கூறப்பட்டது.
மேலும் படிக்க | இல்லத்தரசிகளுக்கு குட் நியூஸ்; அடுத்த வாரம் சமையல் எண்ணெயின் விலை குறையும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR