சம்பளம் குறைவாக வாங்கினாலும் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும்! ஏன் தெரியுமா?

நீங்கள் வாங்கும் சம்பளம் வருமான வரி வரம்பை விட குறைவாக இருந்தாலும் நீங்கள் வருமான வரி தாக்கல் செய்வதன் மூலம் உங்களுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கும்.  

Written by - RK Spark | Last Updated : Dec 10, 2022, 09:39 AM IST
  • வருமானம் குறைவாக இருந்தாலும் வரி தாக்கல் செய்ய வேண்டும்.
  • கடன் வாங்குவதற்கு இவை பெரிதும் உதவுகிறது.
  • மேலும் பல விசயங்களில் வரி தாக்கல் செய்வது பயன் அளிக்கிறது.
சம்பளம் குறைவாக வாங்கினாலும் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும்! ஏன் தெரியுமா? title=

நீங்கள் பெறக்கூடிய வருமானம் வருமான வரி வரம்பிற்குள் வரவில்லை என்றால் நீங்கள் சட்டப்படி ஐடிஆர் தாக்கல் செய்யவேண்டிய கட்டாயமில்லை.  60 வயதுக்கு மேற்பட்ட மற்றும் 80 வயதுக்குட்பட்ட மூத்த குடிமக்களுக்கு வரி விலக்கு வரம்பு ரூ. 3 லட்சம் மற்றும் 80 வயதுக்கு மேற்பட்ட சூப்பர் சீனியர்களுக்கு இந்த வரி விலக்கு வரம்பு ரூ.5 லட்சம் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்.  அதேசமயம் நீங்கள் வாங்கும் சம்பளம் வருமான வரி வரம்பை விட குறைவாக இருந்தாலும் நீங்கள் வருமான வரி தாக்கல் செய்வதன் மூலம் உங்களுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கும்.

மேலும் படிக்க | ஆதார் மோசடி குறித்த அச்சமா? Masked Aadhaar Card மூலம் பாதுகாப்பாக இருக்கலாம்

ஐடிஆர் தாக்கல் செய்வதனால் கிடைக்கும் நன்மைகள்:

1) பொதுவாக கடன் வாங்குகிறீர்கள் என்றால் உங்கள் வருமானத்தின் அடிப்படையில் தான் உங்களுக்கு வங்கிகள் கடனை வழங்கும்.  வருமான வரிக் கணக்கில் நீங்கள் தாக்கல் செய்த வருமானத்தைப் பொறுத்து  வங்கிகள் உங்களுக்கு கடன்தொகையை வழங்குகிறது.  ஐடிஆர் தாக்கல் செய்வதன் மூலம் கடன் செயல்முறை எளிதாகிறது, வங்கிகள் கடன் செயலாக்கத்தின் போது வாடிக்கையாளர்களிடமிருந்து 3 ஐடிஆர்களைக் கேட்கிறது.  வீட்டுக் கடன் வாங்க அல்லது கார் கடன் வாங்க அல்லது தனிநபர் கடன் வாங்க விரும்பினால், கடனைப் பெறுவதை எளிதாக்கும் வகையில் ஐடிஆர் தாக்கல் செய்ய வேண்டும்.

2) நீங்கள் ஐடிஆர் தாக்கல் செய்தால் டெர்ம் டெபாசிட்கள் போன்ற சேமிப்புத் திட்டங்களில் கிடைக்கும் வட்டிக்கு வரியை சேமிக்கலாம் மற்றும் டிவைடென்ட் வருமானத்திலும் வரியைச் சேமிக்கலாம்.  ஐடிஆர் ரீஃபண்ட் மூலம்  வரியைப் பெறலாம், மொத்த வருமானம் ரூ. 2.5 லட்சத்துக்கு மேல் இருந்தால் டிடிஎஸ்ஸை நீங்கள் மீண்டும் கோரலாம்.

3) வருமான வரி மதிப்பீட்டு ஆர்டரை முகவரிச் சான்றாகப் பயன்படுத்தலாம், இது ஆதார் அட்டை தயார் செய்யவும் இது பயன்படுகிறது.  சுயதொழில் செய்பவர்கள் அல்லது ஃப்ரீலான்ஸர்களுக்கு கூட ஐடிஆர் தாக்கல் ஆவணம் சரியான வருமானச் சான்றாகச் செயல்படுகிறது.

4) வேலை அல்லது தொழில் என இவற்றில் ஏற்படும் இழப்பீட்டிற்கு க்ளெய்ம் செய்வதற்கு வரி செலுத்துபவர் ஒரு குறிப்பிட்ட தேதிக்குள் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய வேண்டும்.  வருமான வரி விதிகள் தொடர்புடைய மதிப்பீட்டு ஆண்டில் ஐடிஆர் தாக்கல் செய்பவர்களுக்கு உடனடியாக இழப்பீட்டிற்கு தொகை கிடைக்கிறது.

5) பெரும்பாலான நாடுகள் ஐடிஆர் கோருகிறது, அப்படிப்பட்ட நாடுகளுக்கு நீங்கள் செல்கிறீர்கள் என்றால் ஐடிஆர் தாக்கல் செய்திருக்க வேண்டியது அவசியம்.  மேலும் இது உங்கள் தற்போதைய நிதி நிலைமை மற்றும் வருமானம் பற்றிய தெளிவான யோசனையை விசா செயலாக்க அதிகாரிகளுக்கு வழங்குகிறது.  இது உங்களுக்கு எளிதில் விசா கிடைக்கவும் வழிவகுக்கிறது.

மேலும் படிக்க | 7th Pay Commission: புத்தாண்டில் பம்பர் டிஏ உயர்வு, இன்னும் பல அறிவிப்புகள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News