Old Pension அமலால் ஊழியர்களுக்கு ஜாக்பாட், இவ்வளவு சம்பளம் உயர்வா?

Old Pension Scheme: கடந்த ஏப்ரல் 1ம் தேதி முதல் இமாச்சல பிரதேச அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத்தை வழங்குவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. தற்போது மே மாதம் ஊழியர்களின் கணக்கில் புதிய சம்பளம் வழங்கப்பட்டுள்ளது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : May 2, 2023, 12:24 PM IST
  • புதிய ஓய்வூதிய திட்டத்தில் அடிப்படை சம்பளம் மற்றும் டிஏ-வில் 10 சதவீதம் பிடித்தம் செய்யப்படுகிறது.
  • இதில், 60 ஆண்டுகளுக்குப் பிறகு ஓய்வூதியம் பெற, என்பிஎஸ் நிதியில் 40 சதவீதத்தை முதலீடு செய்ய வேண்டும்.
Old Pension அமலால் ஊழியர்களுக்கு ஜாக்பாட், இவ்வளவு சம்பளம் உயர்வா? title=

புதிய ஓய்வூதியத் திட்டம்: உங்களுக்கோ அல்லது உங்கள் குடும்பத்தாரோ அரசு ஊழியர்களாக இருந்தால், இந்த செய்தி உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும். மத்திய, மாநில அரசு ஊழியர்கள் பழைய ஓய்வூதியத்தை வழங்க வேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். அதன்படி ஊழியர்களின் கோரிக்கையை கருத்தில் கொண்டு, காங்கிரஸ் ஆளும் சில மாநிலங்களில் பழைய ஓய்வூதியம் அமல்படுத்தப்பட்டது. அந்த கடந்த ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் இமாச்சல பிரதேச அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத்தை வழங்குவதற்கான அறிவிப்பை வெளியிடப்பட்டது. அதேபோல், தற்போது மே மாதம் அம்மாநில அரசு ஊழியர்களின் கணக்கில் புதிய சம்பளம் வழங்கப்பட்டுள்ளது.

ஊழியர்களுக்கு சம்பள உயர்வு கிடைத்தது
இந்த நிலையில் மே மாதம் இமாச்சல பிரதேச அரசு வழங்கிய ஏப்ரல் மாத சம்பளத்தில் புதிய ஓய்வூதியத் திட்டத்தின் பங்கு பிடித்தம் செய்யப்படவில்லை. மாறாக மே 1ம் தேதி ஊழியர்களுக்கு உயர்த்தப்பட்ட சம்பளம் வழங்கப்பட்டது. மேலும் புதிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் இதுவரை ஊழியர்களின் சம்பளத்தில் 10 சதவீத சம்பளம் பிடித்தம் செய்யப்பட்டு வந்தது. இது தவிர, 14 சதவீத பங்கு, அரசு மூலம் வழங்கப்படுகிறது. ஆனால் அரசு ஊழியர்களின் சம்பளத்தில் 10 சதவீத பணத்தை ஏப்ரல் மாத சம்பளத்தில் பிடித்தம் செய்யாமல் சம்பளமாக பெற்றுள்ளனர்.

மேலும் படிக்க | 7th Pay Commission: ஜூலை 1 முதல் ஊழியர்களின் சம்பளம் 4% வரை உயர வாய்ப்பு! 

PFRDA இல் பணம் டெபாசிட் செய்ய அனுப்பப்படவில்லை
முன்னரே தீர்மானிக்கப்பட்ட முறையின்படி இமாச்சல பிரதேச அரசு சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதாவது, ஏப்ரல் 1, 2023 முதல், எந்தவொரு ஊழியரின் புதிய ஓய்வூதியத் திட்டத்தின் பங்கும் மத்திய அரசு நிறுவனமான PFRDA-க்கு டெபாசிட் செய்ய அனுப்பப்படவில்லை. ஆனால், 10 ஆண்டுகள் பணியை முடிக்காத ஊழியர்களுக்கு, பழைய ஓய்வூதியத் திட்டத்தின் பலன் கிடைக்காது. அதேபோல் இந்த ஊழியர்களின் புதிய ஓய்வூதிய திட்டத்துக்கான பணமும் அவர்களது சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படவில்லை.

புதிய ஓய்வூதியத் திட்டத்தின் பங்கு கழிக்கப்படவில்லை
இத்தகைய சூழ்நிலையில், புதிய ஓய்வூதியத் திட்டப் பங்கை ஊழியர்களின் பங்கிலிருந்து பிடித்தம் செய்யாதபோது, ​​அவர்களின் எதிர்காலம் என்னவாகும் என்ற கேள்வி எழுந்துள்ளது. பழைய ஓய்வூதியத்திற்கான ஜி.பி.எஃப்-ல் பணம் டெபாசிட் செய்யும் பணியும் தொடங்கப்படவில்லை. இதற்கிடையில் இமாச்சலப் பிரதேச அரசுக்கு முன்பு பழைய ஓய்வூதியம் சத்தீஸ்கர், ராஜஸ்தான், பஞ்சாப் மற்றும் ஜார்கண்ட் அரசுகளால் திரும்பப் பெறப்பட்டது. மேலும் தற்போது பாஜக ஆளும் சில மாநிலங்களும் தேர்தலை கருத்தில் கொண்டு பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்துவது குறித்து ஆலோசித்து வருகின்றன.

பழைய ஓய்வூதியத் திட்டம் என்றால் என்ன
இத்திட்டத்தில், பணி ஓய்வு பெறும் போது, ​​சம்பளத்தில் பாதி, ஓய்வூதியமாக வழங்கப்படும். பழைய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் பொது வருங்கால வைப்பு நிதி (ஜிபிஎஃப்) வழங்கப்பட்டுகிறது. இத்திட்டத்தில், பணியாளர்கள் ரூ.20 லட்சம் வரை பணிக்கொடை பெறும் வசதி உள்ளது. ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கும் ஒரு முறை அகவிலைப்படி அதிகரிக்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் ஓய்வூதியத் தொகை அரசின் கருவூலத்தில் இருந்து வழங்கப்படுகிறது. ஓய்வு பெற்ற ஊழியர் இறந்தால், விதிகளின்படி அவரது குடும்ப உறுப்பினர்கள் ஓய்வூதியத் தொகையைப் பெறுவார்கள். இத்திட்டத்தில், பணியாளரின் சம்பளத்தில் இருந்து எந்த தொகையும் பிடித்தம் செய்யப்படுவதில்லை.

புதிய ஓய்வூதியத் திட்டம் என்றால் என்ன?
புதிய ஓய்வூதிய திட்டத்தில் அடிப்படை சம்பளம் மற்றும் டிஏ-வில் 10 சதவீதம் பிடித்தம் செய்யப்படுகிறது. தேசிய ஓய்வூதியத் திட்டம் (NPS) முற்றிலும் பங்குச் சந்தையின் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்டது. இதில், 60 ஆண்டுகளுக்குப் பிறகு ஓய்வூதியம் பெற, என்பிஎஸ் நிதியில் 40 சதவீதத்தை முதலீடு செய்ய வேண்டும். அதாவது, ஊழியர்களுக்கு 60 சதவீத தொகையிலிருந்து ஓய்வூதியம் கிடைக்கும். இந்தத் திட்டத்தில் பணி ஓய்வுக்குப் பிறகு ஓய்வூதியத்துக்கான உத்தரவாதம் இல்லை. உறவினர்களுக்கான எந்த வித வசதியும் இதில் செய்யப்படவில்லை. இதில் அகவிலைப்படி அதிகரிப்பதற்கான விதிமுறையும் இல்லை.

அடல் பிஹாரி வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் பழைய ஓய்வூதியத் திட்டம் (OPS) ரத்து செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், ஜனவரி 2004 முதல் தேசிய ஓய்வூதிய முறையை (என்பிஎஸ்) அமல்படுத்த முடிவு செய்யப்பட்டது. என்பிஎஸ் என்பது பங்களிப்பு அடிப்படையிலான ஓய்வூதியத் திட்டமாகும். மேலும் அதில் அகவிலைப்படி வழங்கப்படுவதற்கான எந்த வழிமுறையும் இல்லை. 

மேலும் படிக்க | அரசு ஊழியர்கள் ஓவர்டைம் சம்பளம் கோர முடியாது: உச்சநீதிமன்றம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News