7th Pay Commission: மத்திய அரசு சமீபத்தில் அதன் ஊழியர்களுக்கான அகவிலைப்படியை உயர்த்திய நிலையில், தற்போது ஊழியர்களுக்கான அகவிலைப்படியை மீண்டும் இந்த ஆண்டு ஜூலை மாதத்தில் உயர்த்தப்போவதாக கூறப்படுகிறது.
பொதுவாக ஆண்டுக்கு இரண்டு முறை என ஜனவரி மற்றும் ஜூலை ஆகிய இரண்டு மாதங்களில் முறையே அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் திருத்தப்படுகிறது.
விலைவாசி உயர்வை சமாளிக்கும் வகையில் மத்திய அரசு தனது ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 3 சதவீதம் முதல் 4 சதவீதம் வரை உயர்த்தக்கூடும் என்று செய்திகள் வெளியாகியுள்ளது. இது ஜூலை 1 முதல் அமலுக்கு வரும் என்று கூறப்படுகிறது.
கடந்த மாதம் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 4 சதவீதம் உயர்த்தப்பட்டு, ஊழியர்களுக்கான மொத்த அகவிலைப்படி 38 சதவீதமாக உயர்ந்தது. இந்த டிஏ திருத்தம் ஜனவரி 1, 2023 முதல் நடைமுறைக்கு வந்தது.
இதற்கு முன், கடந்த 2022ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 4 சதவிகிதமாக உயர்த்தப்பட்டது, இந்த அகவிலைப்படி திருத்தம் ஜூலை 2022 முதல் அமலுக்கு வந்தது.
அகவிலைப்படி உயர்வின் மூலமாக 47.58 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 69.76 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.