அல்ல அல்ல குறையாத சொத்துகளை வைத்துள்ள ஆனந்த் அம்பானி! மொத்தம் எவ்வளவு கோடி தெரியுமா?

Anant Ambani Net Worth Details : விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ள முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?   

Written by - Yuvashree | Last Updated : Mar 1, 2024, 08:15 PM IST
  • ஆனந்த் அம்பானியின் சொத்து மதிப்பு
  • இவருக்கு ஜூலை மாதம் திருமணம் ஆக உள்ளது
  • இவரது மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு?
அல்ல அல்ல குறையாத சொத்துகளை வைத்துள்ள ஆனந்த் அம்பானி! மொத்தம் எவ்வளவு கோடி தெரியுமா?  title=

Anant Ambani Net Worth Details, Pre-Wedding Celebration, Wedding Budget : இந்தியாவின் மிகப்பெரிய பணக்கார் ஆக இருக்கும் முகேஷ் அம்பானியின் மகன், ஆனந்த் அம்பானி. இவர், இந்தியாவின் மிகப்பெரிய பணக்கார இளைஞர்களுள் ஒருவராக இருக்கிறார். முகேஷ் அம்பானி, ரிலையன்ஸ் நிறுவன குழுமத்தின் வாயிலாக மட்டும் 500க்கும் மேற்பட்ட நிறுவனங்களை வைத்து நடத்தி வருகிறார். இவரது சொத்து மதிப்பு அமெரிக்க டாலர் மதிப்பு படி, 111 பில்லியனை தாண்டுகிறது. அதாவது, இந்திய மதிப்பு படி, 91ஆயிரம் கோடிக்கும் மேல் ஆகும். தந்தை ஒரு பக்கம் இப்படி சொத்து சேர்க்க, அவரது மகன் விரைவில் தனது நெடுநாள் காதலியான ராதிகா மெர்சென்டை (Radhika Merchant) திருமணம் செய்து கொள்ள இருக்கிறார். இவர்களின் திருமணம்தான் தற்போது கூகுள் தேடுதளத்தில் அதிகம் தேடப்படும் விஷயமாக இருக்கிறது. யார் இந்த ஆனந்த் அம்பானி? அவருக்கு இருக்கும் சொத்து மதிப்பு எவ்வளவு? முழு விவரத்தையும் இங்கு பார்ப்போம். 

ஆனந்த் அம்பானி:

முகேஷ் அம்பானியின் இளைய மகன், ஆனந்த் அம்பானி. இவர், 1995ஆம் ஆண்டு ஏப்ரல் 10ஆம் தேதி மும்பையில் பிறந்தார். பணக்கார குடும்பத்தில் பிறந்திருந்தாலும் இவர் தனக்கான பாணியில் தனியாக பயணித்து வந்தார். அமெரிக்கா சென்று, பிரவுன் யுனிவர்சிட்டி எனும் பல்கலைக்கழகத்தில் படித்தார். ஃபிட்னஸ்ஸிலும் ஆர்வமுடைய இவர், 108 கிலோவிலிருந்து 18 மாதங்களில் உடல் எடையை இளைத்தார். இவருக்கு ஆஸ்துமா பிரச்சனை இருப்பதால் அதற்கான மருந்துகளை எடுத்துக்கொள்கிறார். இதனால் இவரது உடல் எடை மேலும் அதிகரித்தது. 

மேலும் படிக்க | குழந்தைகளுக்கான புதிய பாலிசியை அறிமுகம் செய்தது LIC: முழு விவரம் இதோ

ராதிகா மெர்செண்டுடன் திருமணம்:

முகேஷ் அம்பானி போலவே, அவருக்கு விரைவில் சம்பந்தியாகவுள்ள விரேன் மெர்செண்டும் பெரிய தொழில் அதிபராக உள்ளார். இவர்கள், என்கோர் ஹெல்த்கேர் எனும் நிறுவனத்தில் தலைவர்களாவர். அது மட்டுமன்றி இரும்பு தொழில் நிறுவனத்தையும் நடத்தி வருகின்றனர், இவர்களின் மகளான ராதிகா மெர்செண்டைதான் ஆனந்த அம்பானி திருமணம் செய்து கொள்ள இருக்கிறார். இவர்கள் இருவரும் சிறுவயதில் இருந்தே நல்ல நண்பர்களாக இருக்கின்றனர். இவர்களது திருமணம், வரும் ஜூலை 12ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதையடுத்து திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டங்கள் (Pre-Wedding Celebrations) ஆரம்பிக்கப்பட்டு விட்டது. இதில் இந்திய பிரபலங்கள் பலர் கலந்து கொள்கின்றனர். 

ஆனந்த அம்பானியின் சொத்து மதிப்பு:

ஆனந்த அம்பானி, ஜியோ குழுமத்தில் முக்கிய தலைவர் பொறுப்பில் இருக்கிறார்.  கடந்த 2022ஆம் ஆண்டு மே மாதத்தில் ரிலையன்ஸ் ரீடைல் வென்சர்ஸ் குழுமத்திலும் உறுப்பினராக மாறினார். தான் தனியாக நடத்தி வரும் நிறுவனங்கள் மட்டுமன்றி, ஆனந்த அம்பானி தனது குடும்பத்தொழில்களிலும் முதன்மையானவராக இருக்கிறார். ஆனால், இவருக்கு இந்த பொறுப்புகளில் இருப்பதற்கு சம்பளம் என்ற ஒன்று கிடையாதாம். ஆனால், முதலாளிக்கு கிடைக்கும் அனைத்து சலுகைகளும் இவர்களுக்கு கிடைக்குமாம். ஆனந்த் அம்பானியின் சொத்து மதிப்பு மட்டும் 33 ஆயிரம் கோடிக்கும் மேல் இருக்கும் என தரவுகள் தெரிவிக்கின்றன. 

திருமண பட்ஜெட் மட்டும் இவ்வளவா?

ராதிகா மெர்செண்ட்-ஆனந்த் அம்பானியின் திருமணத்திற்கு முந்தைய நிகழ்ச்சிகள், ஜாம்நகரிலுள்ள ஜாக்வாட் எனும் இடத்தில் நடைபெறுகிறது. இதில், ஹாலிவுட் முதல் பாலிவுட் வரை பல திரை பிரபலங்கள் கலந்து கொள்கின்றனர். பல ஆயிரம் பேருக்கு அன்னதானம், ஆங்கில பாப் பாடகரை அழைத்து பர்ஃபாமென்ஸ் என பணத்தை தண்ணி போல வாரி இரைக்கின்றனர், அம்பானி குடும்பத்தார். இந்த திருமணம், ரூ.1000 கோடி செலவில் நடைபெறுகிறது. 

மேலும் படிக்க | E-Scooters: அற்புதமான மைலேஜ் தரும் எலக்ட்சிக் ஸ்கூட்டர்கள்! விலையும் ஒரு லட்சம் ரூபாய்க்குள் தான்!

(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News