LIC: இந்த திட்டத்தில் 5.5 லட்சம் டெபாசிட் செய்தால்... உங்கள் வாழ்நாள் முழுவதும் கவலையே இல்லை!

LIC's New Jeevan Shanti Scheme: எல்ஐசியின் இந்த ஓய்வூதிய திட்டத்தில் நீங்கள் 5.5 லட்ச ரூபாயை முதலீடு செய்தால், உங்களின் வாழ்நாள் முழுவதும் வருடத்திற்கு 50 ஆயிரம் ரூபாயை கிடைக்கும். 

Written by - Sudharsan G | Last Updated : Aug 6, 2023, 07:13 AM IST
  • இது எல்ஐசியின் புதிய ஜீவன் சாந்தி யோஜனா திட்ட எண் 858 என்பதாகும்.
  • ஓய்வூதியத்திற்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட திட்டம் இது.
  • இத்திட்டத்தின் அம்சங்கள், விதிமுறைகள், நிபந்தனைகள் குறித்து இதில் காணலாம்.
LIC: இந்த திட்டத்தில் 5.5 லட்சம் டெபாசிட் செய்தால்... உங்கள் வாழ்நாள் முழுவதும் கவலையே இல்லை! title=

LIC's New Jeevan Shanti Scheme: 40-50 வயதை தாண்டிய பிறகு, முதுமை பற்றிய கவலை அனைவரையும், குறிப்பாக நிதி நெருக்கடி உள்ளவர்களை கவலைக்குள்ளாக்கச் செய்யும். ஓய்வு பெற்ற பிறகு ஓய்வூதியம் இல்லாமல் வாழ்வது மிகவும் கடினம் என்பதால், ஒவ்வொரு பணியாளரும் விரைந்து ஓய்வூதியத் திட்டமிடலைச் செய்ய வேண்டும். அந்த வகையில், இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் (LIC) புதிய ஜீவன் சாந்தி ஓய்வூதியத் திட்டம் மிகவும் வரவேற்பை பெற்ற ஒன்றாகும்.

ஓய்வூதியத்திற்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட எல்ஐசியின் இந்த திட்டத்தின் மிகப்பெரிய அம்சம் என்னவென்றால், அதை ஒரு முறை மட்டுமே டெபாசிட் செய்தால் போதும், ஓய்வுக்குப் பிறகு வாழ்நாள் முழுவதும் ஓய்வூதியம் உங்களுக்கு கிடைக்கும். எல்ஐசியின் புதிய ஜீவன் சாந்தி யோஜனா திட்ட எண் 858 என்பதாகும். இந்தத் திட்டத்தின் அம்சங்கள், விதிமுறைகள், நிபந்தனைகள் குறித்து இதில் காணலாம். 

மேலும் படிக்க  |  LIC பம்பர் திட்டம்: ரூ. 25 லட்சம் லாபம் காணலாம்.. உத்தரவாதத்துடன் பல நன்மைகள்

எப்போது ஓய்வூதியம்?

சில காரணங்களால் ஒருவர் பணியில் இருந்து முன்கூட்டியே ஓய்வு பெற வேண்டிய சூழல் வரலாம். அத்தகைய சூழ்நிலையில் வருமான ஆதாரம் அவர்களுக்கு நிறைவடைந்துவிடும். இந்த வகையான பிரச்சனையை மனதில் வைத்து, எல்ஐசியின் புதிய ஜீவன் சாந்தி திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது ஒரு ஒத்திவைக்கப்பட்ட வருடாந்திரத் திட்டமாகும். இதை நீங்கள் எடுக்கும் நேரத்தில் ஓய்வூதியத் தொகையை நிர்ணயிக்கலாம். குறைந்தபட்சம் ஒரு வருட கால இடைவெளிக்குப் பிறகு, நீங்கள் ஒவ்வொரு மாதமும் ஓய்வூதியத்தைப் பெறத் தொடங்குவீர்கள்.

முக்கிய அம்சங்கள்

இது ஒரு பிரீமியம் திட்டமாகும், அதாவது நீங்கள் ஒரு முறை மட்டுமே முதலீடு செய்ய வேண்டும். ஒத்திவைக்கப்பட்ட ஆண்டுத் திட்டம் (முதலீடு செய்த 1 முதல் 12 ஆண்டுகளுக்குப் பிறகு ஓய்வூதியத்தைப் பெறுவதற்கான விருப்பம்). ஓய்வூதியத் தொகையை ஆண்டு, அரையாண்டு, காலாண்டு மற்றும் மாதந்தோறும் பெறுவதற்கான விருப்பம்.  ரூ. 10 லட்சம் முதலீட்டில் ரூ. 11 ஆயிரம் மேல் மாதாந்திர ஓய்வூதியம் கிடைக்கும். இந்த திட்டத்தில் 6.81 முதல் 14.62% வரை வட்டி கொடுக்கப்படும். ஒற்றை வாழ்க்கை மற்றும் கூட்டு வாழ்க்கை ஆகிய இரண்டிலும் ஓய்வூதியம் பெறும் வசதி உள்ளது. 

30 வயது முதல் 79 வயது வரை உள்ள எவரும் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யலாம். சிறப்பு என்னவென்றால், இந்த திட்டத்தை நீங்கள் எப்போது வேண்டுமானாலும் திரும்ப வாபஸ் செய்யலாம். இதில் அதிகபட்ச முதலீட்டு வரம்பு இல்லை. இந்தக் காலக்கட்டத்தில் பாலிசிதாரர் இறந்துவிட்டால், அவரது கணக்கில் டெபாசிட் செய்யப்பட்ட பணத்துடன் சில கூடுதல் தொகையும் நாமினிக்கு வழங்கப்படும். இந்தத் திட்டத்தில் ஆபத்துக் காப்பீடு இல்லை என்பதை கவனத்தில் கொள்ளவும். 

மேலும் படிக்க  |  எல்ஐசியின் பக்கா பாலிசி... ரூ. 1.5 லட்சம் வரை வரி சலுகை - செப். 30 வரை வாய்ப்பு!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News