LIC ஜாக்பாட் திட்டம்: ஒருமுறை மட்டுமே டெபாசிட்.... வாழ்நாள் முழுவதும் ஓய்வூதியம்

LIC Jackpot Pension Scheme: பணியில் இருக்கும்போதே ஓய்வூதியத் திட்டமிடலைச் செய்வது மிகவும் முக்கியம். இன்றைய காலக்கட்டத்தில், பல திட்டங்கள் மூலம் நீங்கள் முதுமையில் வழக்கமான வருமானம் பெறலாம். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jul 20, 2023, 05:48 PM IST
  • சரல் பென்ஷன் திட்டம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
  • சிங்கிள் லைஃப் மற்றும் ஜாயிண்ட் லைஃப் திட்டம்.
  • 60 வயது வரை காத்திருக்க வேண்டியதில்லை.
LIC ஜாக்பாட் திட்டம்: ஒருமுறை மட்டுமே டெபாசிட்.... வாழ்நாள் முழுவதும் ஓய்வூதியம் title=

எல்ஐசி சரல் பென்ஷன் திட்டம்: முதுமையில் சொந்தப் பந்தம் என பல இருந்தாலும், ஒருவரிடம் இருக்கும் பணமும் அவருக்கு மிகப்பெரிய பலத்தை அளிக்கின்றது. ஆனால், வயதான காலத்தில் ஒருவரால் உடலால் கஷ்டப்பட்டு அதிகம் உழைக்க முடியாது என்பதால், பணியில் இருக்கும்போதே ஓய்வூதியத் திட்டமிடலைச் செய்வது மிகவும் முக்கியம். இன்றைய காலக்கட்டத்தில், பல திட்டங்கள் மூலம் நீங்கள் முதுமையில் வழக்கமான வருமானம் பெறலாம். இவற்றின் மூலம் உங்கள் அன்றாட தேவைகளை முதுமையில் எளிதாக நிறைவேற்றலாம்.

நீங்களும் இதேபோன்ற ஓய்வூதியத் திட்டத்தில் பணத்தை முதலீடு செய்ய நினைக்கிறீர்கள் என்றால், எல்ஐசி சாரல் ஓய்வூதியத் திட்டத்தைப் பற்றி நீங்கள் அறிந்திருக்க வேண்டும். இத்திட்டத்தின் மூலம் வாழ்நாள் முழுவதும் ஓய்வூதியத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். இதில் பென்ஷன் பெற 60 வயது வரை காத்திருக்க வேண்டியதில்லை என்பது சிறப்பு. 40 வயதிலிருந்தே ஓய்வூதியத்தைப் பெற முடியும். இந்த திட்டத்தின் அனைத்து அம்சங்களையும் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். 

சரல் பென்ஷன் திட்டம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

எல்ஐசியின் சரல் ஓய்வூதியத் திட்டம் உடனடி வருடாந்திரத் திட்டமாகும். அதில் பாலிசி எடுத்தவுடனே உங்களுக்கு பென்ஷன் கிடைக்க ஆரம்பிக்கும். இந்தத் திட்டத்தின் கீழ் பாலிசியை வாங்கும் போது, ​​நீங்கள் ஒரு முறை மட்டுமே பிரீமியத்தைச் செலுத்த வேண்டும். பாலிசிதாரர் பிரீமியம் செலுத்திய பின்னரே ஓய்வூதியத்தைப் பெறத் தொடங்குகிறார் மற்றும் வாழ்நாள் முழுவதும் அதே அளவு ஓய்வூதியத்தைப் பெறுகிறார். பாலிசியை வாங்குபவர் ஏதேனும் காரணத்தால் இறந்துவிட்டால், அவருடைய வைப்புத் தொகை அவரது நாமினிக்கு திருப்பித் தரப்படும்.

மேலும் படிக்க | 7th Pay Commission: 50% டிஏ... சம்பளத்தில் அதிரடி ஏற்றம் விரைவில்!! ஊழியர்கள் ஹேப்பி!!

சிங்கிள் லைஃப் மற்றும் ஜாயிண்ட் லைஃப் திட்டம்

சரல் ஓய்வூதியத் திட்டத்தின் பலனை இரண்டு வழிகளில் பெற்றுக்கொள்ளலாம். முதல் முறை சிங்கிள் லைஃப் முறை மற்றும் இரண்டாவது ஜாயிண்ட் லைஃப் முறை ஆகும். சிங்கிள் லைஃப் முறையில் பாலிசிதாரர் இருக்கும் வரை, அவருக்கு ஓய்வூதியம் தொடர்ந்து கிடைக்கும். இறந்த பிறகு, முதலீட்டுத் தொகை நாமினிக்கு திருப்பித் தரப்படும். ஜாயிண்ட் லைஃப் முறை கணவன் மற்றும் மனைவி இருவரையும் உள்ளடக்கியது. இதில் முதன்மை பாலிசிதாரருக்கு அவர் உயிருடன் இருக்கும் வரை ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. இறந்த பிறகு, அவரது மனைவி ஓய்வூதியத்தின் பலனைப் பெறுகிறார். இருவரும் இறந்தால், டெபாசிட் செய்யப்பட்ட தொகை நாமினிக்கு வழங்கப்படும்.

குறைந்தபட்சம் 1000 ரூபாய் ஓய்வூதியம், அதிகபட்ச வரம்பு இல்லை

சரல் பென்ஷன் யோஜனாவின் கீழ், நீங்கள் மாதாந்திர ஓய்வூதியமாக ரூ 1000 பெறலாம் மற்றும் அதிகபட்ச ஓய்வூதியத்திற்கு வரம்பு இல்லை. இந்த ஓய்வூதியம் உங்கள் முதலீட்டின் அளவைப் பொறுத்தது. ஓய்வூதியத்திற்கு, நீங்கள் மாதாந்திர, காலாண்டு, அரையாண்டு மற்றும் வருடாந்திர ஓய்வூதியத்தின் விருப்பத்தைப் பெறுவீர்கள். நீங்கள் தேர்ந்தெடுக்கும் விருப்பத்திற்கு ஏற்ப ஓய்வூதியம் வழங்கப்படும். எல்ஐசியின் இணையதளத்தின்படி, 60 வயதில் அதில் ரூ.10 லட்சம் முதலீடு செய்தால், ஆண்டுக்கு ரூ.58,950 கிடைக்கும். மறுபுறம், கூட்டு வாழ்க்கைத் திட்டத்தை எடுத்துக் கொண்டால் ஆண்டுக்கு ரூ.58,250 கிடைக்கும். நீங்கள் ஆன்லைனில் மற்றும் ஆஃப்லைனில் இந்த பாலிசியை வாங்கலாம்.

60 வயது வரை காத்திருக்க வேண்டியதில்லை

இத்திட்டத்தில் ஓய்வூதியம் பெற 60 வயது வரை காத்திருக்க வேண்டியதில்லை. நீங்கள் 40 வயது முதல் 80 வயது வரை எந்த நேரத்திலும் இதில் முதலீடு செய்யலாம். மேலும் முதலீட்டுடன் ஓய்வூதியத்தின் பலனைப் பெற ஆரம்பிக்கலாம். நீங்கள் 40 வயதில் சரல் பென்ஷன் திட்டத்தில் முதலீடு செய்தால், அதே வயதிலிருந்தே நீங்கள் ஓய்வூதியத்தின் பலனைப் பெறுவீர்கள். அது வாழ்நாள் முழுவதும் கிடைக்கும்.

கடன் வசதியும் உண்டு

எல்ஐசி -யின் இந்தத் திட்டத்தில் நீங்கள் கடன் வசதியையும் பெறுவீர்கள். திட்டத்தை வாங்கிய 6 மாதங்களில் இருந்து கடன் வசதியைப் பெறத் தொடங்குவீர்கள். அவசரநிலை ஏற்பட்டால், பாலிசியை ஒப்படைக்க விரும்பினால், ஆறு மாதங்களுக்குப் பிறகு இந்த வசதியையும் பெறுவீர்கள்.

மேலும் படிக்க | டிரைவிங் லைசென்ஸ் கட்டணம் உயர்வு! போக்குவரத்து துறையில் மாற்றம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News