ஓய்வூதியர் வீட்டிலிருந்தே உயிர்வாழ் சான்றிதழ் சாமர்பிக்கலாம்... வங்கி உங்கள் வீடு தேடி வரும்!

உயிர்வாழ் சான்றிதழ் சமர்ப்பிக்க ஓய்வூதியதாரர்கள் படும் சிரமங்களை தவிர்க்கும் விதமாக ஓய்வூதியதாரர்களின் வீட்டிற்கே வந்து பயோ மெட்ரிக் முறையை பயன்படுத்தி டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழ் சமர்ப்பிக்க பாரத ஸ்டேட் வங்கி ஏற்பாடு செய்துள்ளது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Oct 28, 2023, 09:33 PM IST
  • நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கியின் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்.
  • மத்திய அரசு மற்றும் மாநில அரசு ஓய்வூதியதாரர்கள் இருவருக்கும் கிடைக்கும் சேவை.
  • டோர் ஸ்டெப் வங்கி மூலம் உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிக்கவும்
ஓய்வூதியர் வீட்டிலிருந்தே உயிர்வாழ் சான்றிதழ் சாமர்பிக்கலாம்... வங்கி உங்கள் வீடு தேடி வரும்! title=

அக்டோபர் முடிய உள்ளது மற்றும் நாடு முழுவதும் உள்ள கோடிக்கணக்கான ஓய்வூதியதாரர்களுக்கு நவம்பர் மிகவும் முக்கியமானது. இந்த மாதம் அவர்கள் தங்கள் வாழ்க்கைச் சான்றிதழை அதாவது டிஜிட்டல்  உயிர்வாழ் சான்றிதழைச் சமர்ப்பிக்க வேண்டும். மத்திய அரசின் விதிகளின்படி, சூப்பர் சீனியர் சிட்டிசன்கள் அதாவது 80 வயதுக்கு மேற்பட்ட ஓய்வூதியம் பெறுவோர் அக்டோபர் 1 முதல் நவம்பர் 30 வரை தங்கள் உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிக்க வாய்ப்பு வழங்கி உள்ளது. அதேசமயம், 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் நவம்பர் 1 முதல் நவம்பர் 30 வரை  உயிர்வாழ் சான்றிதழைச் சமர்ப்பிப்பதற்கான வாய்ப்பைப் பெறுகிறார்கள். கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், உயிர்வாழ் சான்றிதழ் ஒரு பயோமெட்ரிக் அடிப்படையிலான டிஜிட்டல் சேவையாகும், இது  மத்திய அரசு மற்றும் மாநில அரசு ஓய்வூதியதாரர்கள் இருவருக்கும் கிடைக்கும் சேவை.

டோர் ஸ்டெப் வங்கி மூலம் உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிக்கவும்

கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், ஓய்வூதியம் பெறுபவர் தனது உயிர்வாழ் சான்றிதழை வங்கி  Digital life Certificate  அல்லது தபால் அலுவலகத்திற்குப் பதிலாக வீட்டிலிருந்தே சமர்ப்பிக்க விரும்பினால், அவர் அதை டோர் ஸ்டெப் பேங்கிங் என்னும் உங்கள் வீட்டிலேயே வங்கி சேவையை பெறுவதன்  மூலம் செய்யலாம். நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கியின் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள தகவலின்படி, இந்தச் சேவையைப் பெற விரும்பினால், இதற்கு அருகிலுள்ள எஸ்பிஐ கிளையைத் தொடர்புகொள்ளலாம். DSB சேவையினை, இணைய போர்டல் அல்லது கட்டணமில்லா எண் மூலம் தொடர்பு கொண்டு பெறலாம்.

டோர் ஸ்டெப் பேங்கிங் மூலம் உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிக்க தேவையான முக்கியமான விஷயங்கள்:

1. ஆதார் எண் இருப்பது அவசியம்.

2. மொபைல் எண் வைத்திருப்பது அவசியம்.

3. ஓய்வூதியம் செலுத்தும் வங்கிக் கணக்கு அல்லது தபால் அலுவலகக் கணக்குடன் ஆதார் எண் இணைக்கப்பட வேண்டும்.

4. பயோமெட்ரிக் கொடுப்பதும் அவசியம்.

5. நீங்கள் PPO எண், ஓய்வூதிய கணக்கு எண், வங்கி விவரங்கள் போன்றவற்றை வைத்திருப்பதும் முக்கியம்.

சேவைக்கான கட்டண விபரம்

வாடிக்கையாளர்கள் டோர் ஸ்டெப் பேங்கிங் சேவை பெற வங்கிக்கு கட்டணம் செலுத்த வேண்டும். இது வெவ்வேறு வங்கிகளின் படி தீர்மானிக்கப்படுகிறது. பொதுவாக வங்கிகள் இதற்கு ரூ.70 மற்றும் தனி ஜிஎஸ்டி கட்டணமாக வசூலிக்கின்றன. சில வங்கிகள் மூத்த குடிமக்களுக்கு இந்த சேவையை இலவசமாக வழங்குகின்றன.

வங்கி உங்கள் வீடு தேடி வர வங்கிக்கு பதிவு செய்யும் முறை:

1. ஸ்டேட் வங்கி இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள தகவலின்படி, முதலில் டோர் ஸ்டெப் பேங்கிங் செயலியை பதிவிறக்கம் செய்யவும்.

2. மேலும் உங்கள் மொபைல் எண்ணை உள்ளிடுவதன் மூலம் உங்களைப் பதிவு செய்யுங்கள்.

3. அடுத்து DSB பயன்பாட்டில் உள்ளிடும் OTP வரும்.

4. அடுத்து உங்கள் பெயர், பின் குறியீடு, மின்னஞ்சல், கடவுச்சொல் மற்றும் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை பூர்த்தி செய்யவும்.

5. அடுத்து உங்கள் முகவரியை உள்ளிட்டு டைம் ஸ்லாட்டைத் தேர்ந்தெடுக்கவும்.

6. அதன் பிறகு வங்கி உங்கள் கணக்கிலிருந்து டோர்ஸ்டெப் பேங்கிங் சேவைக்கான வங்கி கட்டணத்தை டெபிட் செய்யும்.

7. பிறகு உங்களுக்கு சேவை எண் கிடைக்கும்.

8. வங்கி ஒரு எஸ்எம்எஸ் அனுப்பும், அதில் முகவரின் பெயர், மொபைல் எண் மற்றும் பிற விவரங்கள் பதிவு செய்யப்படும்.

9. பிறகு உங்கள் உயிர்வாழ் சான்றிதழ் உங்கள் வீட்டில் இருந்தபடியே டெபாசிட் செய்யப்படும்.

மேலும் படிக்க | அரசு ஊழியர்களுக்கு குட்நியூஸ் வருது.. அகவிலைப்படியில் புதிய டுவிஸ்ட், இதோ அப்டேட்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News