ரூ.500 நோட்டு பற்றி ரிசர்வ் வங்கி அளித்த முக்கிய செய்தி: இந்த நோட்டு செல்லுமா செல்லாதா?

RBI Update: ஆதாரமற்ற வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் மக்கள் அதிகாரப்பூர்வ அமைப்புகளிலிருந்து வரும் அறிவிப்புகள் மற்றும் செய்திகளை மட்டுமே நம்ப வேண்டும் என்றும் இந்திய ரிசர்வ் வங்கியும் இந்திய அரசாங்கமும் அவ்வப்போது மக்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்கி வருகின்றன. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Nov 1, 2023, 03:17 PM IST
  • 500 ரூபாய் நோட்டில் உள்ள குழப்பம்.
  • சமூக ஊடக தளங்களில் பரவி வரும் வதந்திகளுக்கு பதில் அளித்த ரிசர்வ் வங்கி
  • ரிசர்வ் வங்கி நட்சத்திர குறியிட்ட ரூபாய் நோட்டுகளை வெளியிடுவதற்கான காரணம் என்ன?
ரூ.500 நோட்டு பற்றி ரிசர்வ் வங்கி அளித்த முக்கிய செய்தி: இந்த நோட்டு செல்லுமா செல்லாதா? title=

RBI Update: சில மாதங்களுக்கு முன்னர் இந்திய ரிசர்வ் வங்கி 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்திலிருந்து நீக்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டது. இதைத் தொடர்ந்து மற்ற மதிப்பிலான ரூபாய் நோட்டுகள் தொடர்பான பல செய்திகள் வலம் வந்த வண்ணம் உள்ளன. இவற்றில் எது உண்மை எது வதந்தி என்ற குழப்பம் தொடர்ந்து மக்களுக்கு இருந்து வருகிறது. குறிப்பாக, 2000 ரூபாய்க்கு அடுத்த பெரிய மதிப்பிலான ரூபாய் நோட்டான 500 ரூபாய் நோட்டு குறித்து தொடர்ந்து பல வதந்திகள் பரவி வருகின்றன. இவை ஒரு பக்கம் இருக்க, ஆதாரமற்ற வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் மக்கள் அதிகாரப்பூர்வ அமைப்புகளிலிருந்து வரும் அறிவிப்புகள் மற்றும் செய்திகளை மட்டுமே நம்ப வேண்டும் என்றும் இந்திய ரிசர்வ் வங்கியும் இந்திய அரசாங்கமும் அவ்வப்போது மக்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்கி வருகின்றன. 

500 ரூபாய் நோட்டில் உள்ள குழப்பம்

பல சமயம் நட்சத்திர (*) சின்னம் உள்ள ரூபாய் நோட்டை மக்கள் வங்கிகள் மூலமாகவோ அல்லது பிற இடங்களிலோ பெறுகிறார்கள். இந்த நோட்டு செல்லுபடியாகுமா என்ற குழப்பம் அவர்களுக்கு ஏற்படுகின்றது. இதற்கு காரணமும் உள்ளது. ஸ்டார் குறியிட்ட நோட்டுகள் செல்லாது என சில காலமாக ஒரு செய்தி வைரலாக பரவி வருகின்றது. ஆனால், இந்த நோட்டு செல்லுபடியாகும் என்றும் இது குறித்து எந்த குழப்பமும் வேண்டாம் என்றும் ரிசர்வ் வங்கி (Reserve Bank) பல நாட்களுக்கு முன்னரே தெளிவுபடுத்தி உள்ளது. புதிய 500 ரூபாய் நோட்டுகளில் நட்சத்திரக் குறியீடு (*) டிசம்பர் 2016 இல் அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்கான காரணம் என்ன? இதை பற்றி இந்த பதிவில் காணலாம்.

சமூக ஊடக தளங்களில் பரவி வரும் வதந்திகளுக்கு பதில் அளித்த ரிசர்வ் வங்கி, ரூபாய் நோட்டின் எண் பேனலில் உள்ள நட்சத்திரம் (*) சின்னம் மாற்றப்பட்ட அல்லது மறுபதிப்பு செய்யப்பட்ட ரூபாய் நோட்டுகளை குறிக்கின்றன என்பதை தெளிவுபடுத்தியது. இந்த நட்சத்திர (*) ரூபாய் நோட்டுகள் மற்ற சட்டப்பூர்வ ரூபாய் நோட்டுகளுக்கு சமமானவை என்றும் இவை கண்டிப்பாக செல்லுபடியாகும் என்றும் ஆர்பிஐ (RBI) கூறியது. 

“நட்சத்திரம் (*) குறியீட்டைக் கொண்ட ரூபாய் நோட்டு, வேறு எந்த சட்டப்பூர்வ ரூபாய் நோட்டுக்கும் ஒத்ததாக இருக்கும். இந்த நோட்டுகளில் எண் பலகத்தில், ப்ரிஃபிக்சுக்கும் வரிசை எண்ணுக்கும் இடையே ஒரு நட்சத்திரம் (*) சின்னம் சேர்க்கப்பட்டிருக்கும். இந்த நட்சத்திரம் (*) மாற்றப்பட்ட/மீண்டும் அச்சிடப்பட்ட ரூபாய் நோட்டு என்பதற்கான அடையாளங்காட்டியாகும்” என்று ரிசர்வ் வங்கி இது தொடர்பான தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க | அடி தூள்!! டிஏ ஹைக்கை தொடர்ந்து தீபாவளியில் ஊழியர்களுக்கு 2 பரிசுகள்.... எப்போது அறிவிப்பு?

ரிசர்வ் வங்கி மகாத்மா காந்தி (புதிய) வரிசையில் ரூ.500 மதிப்பிலான ரூபாய் நோட்டுகளை வெளியிட்டு வருகிறது. அவை இரண்டு எண் பேனல்களிலும் ‘E' என்ற இன்செட் எழுத்தைக் கொண்டுள்ளன. இந்த ரூபாய் நோட்டுகளில் சிலவற்றின் எண் பேனலில் கூடுதல் எழுத்து ‘*’ (நட்சத்திரம்) உள்ளது. இது ப்ரெஃபிக்சுக்கும் எண்ணுக்கும் இடையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை 2016க்கு முன்பே ரூ.10, ரூ.20, ரூ.50 மற்றும் ரூ.100 ரூபாய் நோட்டுகளில் அறிமுகப்படுத்தப்பட்டது.

ரிசர்வ் வங்கி நட்சத்திர குறியிட்ட ரூபாய் நோட்டுகளை வெளியிடுவதற்கான காரணம் என்ன? 

அச்சிடும் செயல்பாட்டின் போது குறைபாடுகள் ஏற்பட்ட ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்காக இந்திய ரிசர்வ் வங்கி நட்சத்திர வரிசை ரூபாய் நோட்டுகளை வெளியிடுகிறது. ரூபாய் நோட்டில் ஒரு குறைபாடு கண்டறியப்பட்டால், இந்த ரூபாய் நோட்டுகள் அதே வரிசை எண்ணைக் கொண்ட புதியவற்றுடன் மாற்றப்பட்டு, பாக்கெட்டில் வரிசைமுறை பராமரிக்கப்படுவது உறுதி செய்யப்படுகிறது. நட்சத்திர வரிசை எண் முறையானது, சர்வதேச அளவிலான சிறந்த நடைமுறைகளைப் பின்பற்றுவதற்கும், அச்சகங்களில் செலவு-செயல்திறனை உறுதி செய்வதற்கும் RBI இன் முயற்சிகளின் ஒரு பகுதியாகும்.

நட்சத்திர வரிசை நோட்டுகளுடன் கூடிய ரூபாய் நோட்டு பாக்கெட்டை நீங்கள் கண்டால், பயப்பட வேண்டாம். அவை செல்லுபடியாகும் என்பதையும் அவற்றை சட்டப்பூர்வ டெண்டராக பயன்படுத்தப்படலாம் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள். நட்சத்திரத் தொடர் ரூபாய் நோட்டுகள், மகாத்மா காந்தி தொடரில் உள்ள வழக்கமான நோட்டுகளைப் போலவே இருக்கும். ஆனால் எண் பேனலில் கூடுதலாக *(நட்சத்திரம்) இருக்கும். உதாரணமாக இப்படி ஒரு ரூபாய் நோட்டு இருக்கலாம் - 4CC*456987. 

மேலும் படிக்க | தீபாவளிக்கு முன் ரிசர்வ் வங்கி அளித்த நல்ல செய்தி: ஆச்சரியம் காத்திருப்பதாக கூறும் ஆர்பிஐ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News