7வது ஊதியக்குழு, சமீபத்திய புதுப்பிப்பு: மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு பல நல்ல செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. சமீபத்தில் மத்திய அரசு அகவிலைப்படியை 4 சதவிகிதம் அதிகரித்ததை அடுத்து மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலை நிவாரணம் ஆகியவை 46 சதவிகிதமாக அதிகரித்துள்ளன. நல்ல செய்திகள் இதோடு முடிந்து விடவில்லை. ஊழியர்களுக்கு கூடுதல் பணம் கிடைக்கவுள்ளது. தீபாவளி நேரத்தில் அரசு ஒன்றல்ல இரண்டு பரிசுகளை ஊழியர்களுகு வழங்கப் போகிறது. இதனால் சுமார் 1 கோடி குடும்பங்கள் பயன்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இரண்டு பெரிய பரிசுகள்
ஊழியர்களுக்கு நிலுவையில் உள்ள டிஏ அரியர் தொகை கிடைப்பதுடன் ஃபிட்மெண்ட் ஃபாக்டரும் அதிகரிக்கப்படும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இப்படி நடந்தால், இது ஊழியர்களுக்கு ஒரு மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமையக்கூடும். அதை பற்றி விரிவாக காணலாம்.
டிஏ அரியர் தொகை (DA Arrears) மற்றும் ஃபிட்மெண்ட் ஃபாக்டர் அதிகரிப்பு பற்றி அரசு இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. எனினும், அடுத்த ஆண்டு மக்களவை தேர்தல்கள் வரவுள்ள நிலையில், மத்திய அரசு ஊழியர்களின் மனதை மகிழ்விக்க அரசு இந்த பெரிய முடிவை எடுக்கக்கூடும் என அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. டிஏ அரியர் தொகை வந்தால், ஊழியர்களுக்கு (Central Government Employees) மொத்தமாக எவ்வளவு பணம் கிடைக்கும் என இங்கே காணலாம்.
அகவிலைப்படி அரியர் தொகை
டிஏ நிலுவைத் தொகையை ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் கணக்கில் மத்திய அரசு டெபாசிட் செய்யக்கூடும் என கூறப்படுகின்றது. இது ஊழியர்களுக்கு பெரிய பரிசாக இருக்கும். முன்னதாக, கொரோனா வைரஸ் தொற்று காலத்தில் ஊழியர்களின் அகவிலைபப்டி முடக்கப்பட்டது. நிலைமை சற்று சரியானவுடன் இந்த முடக்கம் நீக்கப்பட்டது. மோடி அரசாங்கம் 2020 ஜனவரி 1 முதல் 2021 ஜூன் 30 வரை முடக்கப்பட்ட டிஏ நிலுவைத் தொகையை ஊழியர்களின் கணக்கில் டெபாசிட் செய்யவில்லை.
இதன்படி, அரசு இன்னும் 18 மாதங்களுக்கான அகவிலைப்படி (Dearness Allowance) அரியர் தொகையை அளிக்க வேண்டும். இதற்காக ஊழியர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். இப்போது இது விரைவில் அங்கீகரிக்கப்படலாம் என்று நம்பப்படுகிறது. பணவீக்கத்தால் அவதியில் உள்ள ஊழியர்களுக்கு இந்த தொகை வந்தால், அது பெரிய நிவாரணமாக இருக்கும்.
ஒரு கணக்கீட்டின்படி, மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் ரூ.2 லட்சத்திற்கு மேல் டிஏ நிலுவைத் தொகையைப் பெற வாய்ப்புள்ளது. அரசு அதிகாரப்பூர்வமாக இதற்கான முடிவை இன்னும் எடுக்கவில்லை. எனினும், விரைவில் இது எடுக்கப்படும் என்று ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
ஃபிட்மெண்ட் ஃபாக்டரில் ஏற்றம்
மோடி அரசு விரைவில் ஃபிட்மென்ட் ஃபாக்டரை அதிகரிக்கப் போகிறது. இதன் காரணமாக ஊழியர்களின் அடிப்படை சம்பளம் கணிசமாக உயரும் என்பது உறுதி. ஃபிட்மென்ட் ஃபாக்டரை 2.60 மடங்கில் இருந்து 3.0 மடங்குக்கு அரசாங்கம் உயர்த்தலாம் என்று நம்பப்படுகிறது. இது அடிப்படை சம்பளத்தில் மிக அதிக அதிகரிப்புக்கு வழிவகுக்கும். இதன் மூலம் ஏராளமான ஊழியர்கள் பயனடைவார்கள்.
பொதுத் தேர்தல்கள்
அடுத்த ஆண்டு நாட்டில் மக்களவை தேர்தல்கள் நடக்கவுள்ளன. இந்த நிலையில் மத்திய அரசு ஊழியர்களின் ஆதரவை பெற அரசு, டிஏ அரியர், ஃபிட்மெண்ட் ஃபாக்டர் போன்ற அவர்களது நீண்ட நாள் கோரிக்கைகளை நிறைவேற்றலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மேலும் படிக்க | தீபாவளிக்கு முன் LPG Gas சிலிண்டர்களின் விலையில் அதிரடி ஏற்றம்: விலை விவரம் இதோ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ