ஸ்டார் போட்ட ரூ. 500 நோட்டு உங்ககிட்ட இருக்கா... ஆர்பிஐயின் முக்கிய அறிவிப்பு!

Reserve Bank Of India: தற்போது புழக்கத்தில் இருக்கும் பல ரூபாய் நோட்டுகளில், 'நட்சத்திரம்' போட்ட குறியுடன் அச்சிடப்பட்டுள்ளது. இந்த ரூபாய் நோட்டுகள் குறித்து ஆர்பிஐ அறிக்கை வெளியிட்டுள்ளது. 

Written by - Sudharsan G | Last Updated : Jul 28, 2023, 06:36 AM IST
  • 'நட்சத்திரம்' குறிக்கப்பட்ட நோட்டுகளும் செல்லுபடியாகுமா என சந்தேகம் எழுந்தது.
  • சந்தேகங்களுக்கு பதிலளித்து ஆர்பிஐ அறிக்கை வெளியீடு.
  • நட்சத்திரம் குறிக்கப்பட்ட ஏன் நோட்டுகள் அச்சிடப்படுகின்றன என்பதை விளக்கியுள்ளது.
ஸ்டார் போட்ட ரூ. 500 நோட்டு உங்ககிட்ட இருக்கா... ஆர்பிஐயின் முக்கிய அறிவிப்பு! title=

Reserve Bank Of India: கரன்சி நோட்டுகள் தொடர்பாக நாடு முழுவதும் பல்வேறு வகையான செய்திகள் காணப்படுகின்றன. சமீபத்தில் 2000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து வாபஸ் பெற மத்திய அரசு முடிவு செய்தது. இதற்கிடையில், ரிசர்வ் வங்கி ஒரு முக்கிய அறிக்கையை நேற்று வெளியிட்டுள்ளது. 

அதில் 'நட்சத்திரம்' குறியிடப்பட்ட நோட்டு குறித்த தகவலை ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி வியாழன் அன்று 'நட்சத்திரம்' குறிக்கப்பட்ட நோட்டுகளும் செல்லுபடியாகும் எனக்கூறி அது குறித்த அனைத்து சந்தேகங்களையும் தீர்த்து வைத்தது. இந்த நோட்டுகள் மற்ற நோட்டுகளைப் போலவே செல்லுப்படியாகும் என்று நேற்று வெளியிட்ட அறிக்கையில் விளக்கம் அளிக்கப்பட்டது.

ஏன் நட்சத்திரக் குறியிடப்பட்ட நோட்டுகள்?

தவறாக அச்சிடப்பட்ட நோட்டுக்குப் பதிலாக வெளியிடப்படும் நோட்டின் நம்பர் பேனலில் நட்சத்திரக் குறி சேர்க்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரிசை எண் கொண்ட நோட்டுகளின் தொகுப்பில் தவறாக அச்சிடப்பட்ட நோட்டுகளுக்குப் பதிலாக நட்சத்திரக் குறியுடன் கூடிய நோட்டுகள் வழங்கப்படுகின்றன. zeenews.india.com/tamil/business-news/rbi-bank-latest-news-only-rs-50000-can-withdrawn-deposit-in-co-operative-bank-455871

மேலும் படிக்க | 8.5 கோடி பேருக்கு ஜாக்பாட்... வங்கியில் பணத்தை போட்ட மத்திய அரசு!

நம்பர் பேனல்களில் நட்சத்திரக் குறிகளைக் கொண்ட நோட்டுகளின் செல்லுபடியாகும் தன்மை குறித்து சில சமூக ஊடகப் பதிவுகளில் சந்தேகங்கள் கிளம்பியது. இதையடுத்து, இந்திய ரிசர்வ் வங்கி இந்த விளக்கத்தை அளித்துள்ளது.

ஆர்பிஐ தகவல்

மற்ற செல்லுபடியாகும் நோட்டுகளைப் போன்றே நட்சத்திரக் குறியுடன் கூடிய வங்கி நோட்டு என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. அதன் நட்சத்திரக் குறியானது, மாற்றப்பட்ட அல்லது மறுபதிப்பு செய்யப்பட்ட நோட்டுக்கு பதிலாக வெளியிடப்பட்டது என்பதைக் குறிக்கிறது. அந்த ரூபாய் நோட்டின் எண் மற்றும் அதற்கு முன் உள்ளிட வேண்டிய எழுத்துக்களுக்கு இடையே இந்த நட்சத்திரக் குறி அச்சிடப்படுகிறது.

2000 ரூபாய் நோட்டுகள்

2 ஆயிரம் ரூபாய் நோட்டை வைத்திருப்பவர்கள் அதை அவரது வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யலாம் அல்லது வேறு நோட்டுடன் வங்கிக்குச் சென்று மாற்றிக்கொள்ளலாம் என்று ரிசர்வ் வங்கி கவர்னர் கூறினார். ரூ.2,000 நோட்டுகளை மாற்ற தேவையான ஏற்பாடுகளை செய்ய வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் பெரும்பாலான ரூ.2,000 நோட்டுகள் திரும்ப வந்துவிடும் என்று நம்புகிறோம் என்றார் அவர்.

சமீபத்திய அறிவிப்பு

ஒரு குறிப்பிட்ட வங்கியில் உங்களிடம் கணக்கு இருந்தால் நீங்கள் குறிப்பிட்ட தொகைக்கு மேல் எடுக்க முடியாது என ஆர்பிஐ சமீபத்தில் அறிக்கை வெளியிட்டிருந்தது. அதாவது, பெங்களூரில் அமைந்துள்ள தேசிய கூட்டுறவு வங்கி தொடர்பாக ரிசர்வ் வங்கி இந்த முடிவை எடுத்துள்ளது. கர்நாடகா தலைநகர் பெங்களூருவில் தேசிய கூட்டுறவு வங்கிக்கு 13 கிளைகள் உள்ளன. 

பெங்களூரைச் சேர்ந்த தேசிய கூட்டுறவு வங்கியின் மோசமான நிதி நிலை காரணமாக அதன் மீது இந்திய ரிசர்வ் வங்கி இத்தகைய நடவடிக்கை எடுத்துள்ளது. ஜூலை 24ஆம் தேதி முதல், ரிசர்வ் வங்கி அந்த வங்கியில் வணிகக் கட்டுப்பாடுகளை விதித்தது மற்றும் ஒரு கணக்கிற்கு ரூ. 50,000 வரை மட்டுமே டெபாசிட் செய்யவும், திரும்பப் பெறவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | ரயில்வே தந்த முக்கிய அப்டேட்: இந்த விதிகளில் மாற்றம்.. பயணிகளுக்கு இனி சிரமம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News