ரயில்வே தந்த முக்கிய அப்டேட்: இந்த விதிகளில் மாற்றம்.. பயணிகளுக்கு இனி சிரமம்

Indian Railways: இந்திய ரயில்வேயில் பல்வேறு விதிகள் உள்ளன, இது பற்றி பயணிகளுக்கு மிகக் குறைவான தகவல்களே உள்ளன. இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஏசி, ஸ்லீப்பர் கோச் எதுவாக இருந்தாலும் சரி இனி மிடில் பெர்த்தில் தூங்க புதிய விதி ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jul 27, 2023, 11:17 AM IST
  • ரயிலில் தூங்குவதற்கான விதிகள் மாற்றப்பட்டுள்ளன.
  • லோயர் பெர்த் பயணிகள் இரவு 10 மணிக்கு முன் தூங்க முடியாது.
  • பகலில் நடுத்தர பெர்த்தில் தூங்குவதற்கான விதிகள்.
ரயில்வே தந்த முக்கிய அப்டேட்: இந்த விதிகளில் மாற்றம்.. பயணிகளுக்கு இனி சிரமம் title=

இந்திய ரயில்வே புதிய விதிமுறைகள்: நீங்கள் ரயிலில் பயணம் செய்கிறீர்கள் என்றால், சில புதிய விதிகளைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். பெரும்பாலும் ரயிலில் பல்வேறு மாற்றங்கள் இருக்கும். சில தினங்களுக்கு முன்பு, ரயிலில் தூங்குவது தொடர்பாக பயணிகளுக்கு சில விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. பழைய விதிகளின்படி, ரயிலில் இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை பயணிகள் படுக்கையில் தூங்கலாம் என்று விதிக்கப்பட்டது, ஆனால் தற்போது இந்த விதியில் பெரிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் நீங்கள் இந்த புதிய விதிகளை முறையாக பின்பற்றவில்லை என்றால், இதற்கு உங்களிடம் அபராதம் விதிக்கப்படும்.

இந்திய ரயில்வேயில் தினமும் 2 கோடி பயணிகள் பயணம் செய்கின்றனர். ஆனால் பெரும்பாலான பயணிகளுக்கு ரயில் பயணம் தொடர்பான தேவையான விதிமுறைகள் பற்றி தெரியதில்லை. இதனால் அவர்களில் பலர் பல சிரமங்களை சந்திக்க நேரிடுகிறது. அந்தவகையில் இன்னல்களை தவிர்க்க ரயில் பயணம் தொடர்பான விதிகளை நீங்கள் அறிந்திருக்க வேண்டும், மேலும் இதயம் மூலம் பயணத்தின் போது பல சிக்கல்களில் இருந்து நீங்கள் காப்பாற்றப்படுவீர்கள்.

மேலும் படிக்க | 7th Pay Commission: ஜூலையில் ஜாலிதான்.... அதிரடி டிஏ ஹைக் நிச்சயம்.. உற்சாகத்தில் ஊழியர்கள்

ரயிலில் தூங்குவதற்கான விதிகள் மாற்றப்பட்டுள்ளன
உண்மையில், முதல் பயணிகள் இரவு பயணத்தின் போது அதிகபட்சம் 9 மணிநேரம் தூங்கலாம் என்று கூறப்பட்டது. ஆனால் தற்போது இந்த நேரம் 8 மணி நேரமாக குறைக்கப்பட்டுள்ளது. முன்னதாக பயணிகள் ஏசி பெட்டிகள் மற்றும் ஸ்லீப்பர்களில் இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை தூங்க அனுமதிக்கப்பட்டனர். ஆனால் தற்போது ரயில்வே விதிகளை மாற்றியுள்ளது. எனவே இப்போது புதிய விதிகளின்படி இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை மட்டுமே தூங்க முடியும். அதாவது, இப்போது தூங்கும் நேரம் 8 மணிநேரமாக குறைந்துள்ளது. இந்த மாற்றம் அனைத்து ரயில்களிலும் அமல்படுத்தப்பட்டுள்ளது. எனவே நீங்கள் அடிக்கடி ரயிலில் பயணம் செய்யபவராக இருந்தால், நீங்கள் நிச்சயமாக புதிய தூக்க நேரத்தை பின்பற்ற வேண்டும்.

லோயர் பெர்த் பயணிகள் இரவு 10 மணிக்கு முன் தூங்க முடியாது
ரயில்வே விதிகளின்படி, அனைத்து இருப்புப் பெட்டிகளிலும் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை உட்காருவதற்கும், இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை தூங்குவதற்கும் கீழ் பெர்த்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. நீங்கள் கீழ் பெர்த்தில் அமர்ந்திருக்கும் பயணியாக இருந்தால், உங்களால் அங்கு தூங்க முடியாது. விதிகளின்படி, நீங்கள் 10 மணிக்கு முன் தூங்க முடியாது.

ரயிலில் பகலில் நடுத்தர பெர்த்தில் தூங்குவதற்கான விதிகள்
நடுத்தர பெர்த்தில் சீட் இருக்கும் பயணிகள் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை தூங்க வேண்டும் என்ற விதி உள்ளது. இந்தான் நேரத்தில் நடுத்தர பெர்த்தை உயர்த்திக் கொள்ளலாம். இந்த வீதியை மீறினால் ரயில்வே விதிகளின்படி, அது குற்றமாக கருதப்படும். உறங்கும் நேரம் முடிந்த பிறகு நடு பெர்த்தை இறக்கி வைப்பதிருக்க வேண்டியது அவசியமாகும். அதேபோல், ஸைட் பக்கத்தில் உள்ள மேல் பெர்த்தில் இருப்பவர் தூங்கும் நேரத்தில் பக்கத்திலுள்ள கீழ் பெர்த்திற்கு உரிமை கோர முடியாது.

மேலும் படிக்க | 7th Pay Commission: விரைவில் 50% டிஏ, அதன் பிறகு 8வது ஊதியக்குழு... மொத்தத்தில் பண மழை!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News