SBI Vs Post office RD: எது சிறந்தது, எவ்வளவு வட்டி என்பதை தெரிந்து கொள்ளுங்கள்!

RD திட்டங்களுக்கு வட்டி விகிதங்கள் எவ்வளவு? அஞ்சல் அலுவலகம் அல்லது SBI வங்கி எது சிறந்தது என்பதை பார்க்கலாம்..!

Last Updated : Jan 25, 2021, 06:53 AM IST
SBI Vs Post office RD: எது சிறந்தது, எவ்வளவு வட்டி என்பதை தெரிந்து கொள்ளுங்கள்! title=

RD திட்டங்களுக்கு வட்டி விகிதங்கள் எவ்வளவு? அஞ்சல் அலுவலகம் அல்லது SBI வங்கி எது சிறந்தது என்பதை பார்க்கலாம்..!

சிறு சேமிப்பு திட்டங்கள் என்றாலே இயல்பாக நமக்கு நினைவுக்கு வருவது அஞ்சலக சேமிப்பு திட்டங்கள் தான். அதிலும் குறிப்பாக RD திட்டம் (Recurring deposit) தான். இந்த திட்டத்தை நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான SBI-யும் வழங்குகிறது. இந்த RD கணக்குகளில் தனிநபர்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் தொடர்ந்து பணம் செலுத்தி வர வேண்டும். இந்த திட்டங்களுக்கு வட்டி விகிதங்கள் எவ்வளவு? அஞ்சல் அலுவலகம் அல்லது SBI வங்கி எது சிறந்தது என்பதை பார்க்கலாம். 

போஸ்ட் ஆபிஸ் Vs SBI RD

நிரந்தர வைப்புநிதியை (FD) போலவே இதிலும் பணம் முடக்கப்படும். இதன் மூலம் சேமிப்பு பழக்கமும் வளரும். இந்தியாவில் SBI மற்றும் இந்திய அஞ்சல் துறை ஆகிய இரண்டும் சேமிப்பு அல்லது RD கணக்குகளைத் துவங்க மிகவும் பிரபலமான வாய்ப்புகளை வாடிக்கையாளர்களுக்கு அளித்து வருகின்றன.

இதற்கு என்னென்ன ஆவணங்கள் தேவை?

SBI அல்லது தபால் நிலையத்தில் (India Post) RD-யை தொடங்க KYC தேவைகளைப் பூர்த்திச் செய்யும் விதமாக தனிநபர் மற்றும் இருப்பிட ஆதாரங்களை முதலில் சமர்ப்பிக்க வேண்டும். அதோடு ஆதார் அட்டை மற்றும் பான் அட்டை போன்ற ஆவணங்களுடன், உங்களின் பாஸ்போர்ட் அளவு புகைப்படமும் தேவைப்படும். 

ALSO READ | தினசரி ரூ .200 சேமித்து, 10 ஆண்டுகளில் 10 லட்சத்தை பெருங்கள்!

நீங்கள் ஏற்கனவே SBI வங்கியின் வாடிக்கையாளர் எனில், இணையவழி வங்கிச்சேவையின் மூலம், எளிதில் இந்த தொடர் வைப்புநிதி கணக்கினை தொடங்கலாம். SBI-யில் இந்த தொடர் வைப்புநிதி கணக்கை தொடங்க சேமிப்பு/நடப்பு கணக்கு அவசியம். எந்தவொரு தனிநபரும் இந்த இரண்டிலும் தொடர் வைப்புநிதி கணக்கை தொடங்கிக் கொள்ளலாம்.

யார் வேண்டுமானலும் தொடங்கலாம்?

தபால் நிலையங்களில் (Post Office) குழந்தைகளின் பெயரில் கூடத் தொடர் வைப்புநிதி கணக்கை துவங்கலாம். குறிப்பாக 10 வயது குழந்தைகள் தங்கள் கணக்குகளைத் தாங்களே பராமரிக்கலாம். SBI வங்கியை பொறுத்த வரை இரண்டு வித தொடர் வைப்புநிதி கணக்குகளை வழங்குகிறது. ஒன்று வழக்கமானது. மற்றொன்று விடுமுறை காலச் சேமிப்புக் கணக்குகள்.

வங்கியில் தொடர் வைப்புநிதி கணக்கானது பிக்ஸட் டெபாசிட் குறிப்பிட்ட காலத்தை சார்ந்தே இருக்கும். இத்திட்டத்தின் கால அளவு ஒரு ஆண்டு முதல் அதிகபட்சமாக 10 ஆண்டுகளாக இருக்கலாம். மேலும் ஒரு நிதியாண்டில் குறைந்தபட்சம் ரூ.5,000-லிருந்து அதிகபட்சமாக ரூ.50,000 வரை முதலீடு செய்யலாம். இதுவே, அஞ்சல் அலுவலகங்களில் 5 ஆண்டுக்காலத் தொடர் வைப்புநிதி கணக்குகளை தொடங்கிக் கொள்ள முடியும்.

வட்டி விகிதம் எவ்வளவு?

இதே SBI-யில் 1 வருடம் முதல் 2 வருடத்திற்குள் வட்டி விகிதம் 4.9% ஆகும். இதே 2 வருடம் முதல் 3 வருடத்திற்குள் 5.1% ஆகும். இதே 3 வருடம் முதல் 5 வருடத்திற்குள் 5.3% ஆகும். இதே 5 வருடம் முதல் 10 வருடத்திற்கு வட்டி விகிதம் 5.4% ஆகும். அஞ்சலகங்களில் வட்டி விகிதங்கள் சிறப்பாக உள்ளன. இதே அஞ்சலகத்தில் 5 ஆண்டுகாலக் கணக்கிற்கு 5.8% வட்டி தருகிறது. ஆக மொத்தத்தில் வட்டி விகிதம் என பார்க்கும் போது அஞ்சலகத்தில் தான் அதிகம். ஆக உங்களுக்கு எது பொருந்துகிறதோ? அதனை தேர்தெடுத்து சேமிக்க தொடங்கலாம்.

உலக நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள ZEE இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்...

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News