சிறுசேமிப்புத் திட்டங்களில் பெஸ்ட் எது? மூணு ஆப்ஷன்கள்... உங்கள் சாய்ஸ் எது?

Small Saving Schemes: சிறு சேமிப்புத் திட்டங்கள் உத்தரவாதமான வருமானத்தை வழங்குவதோடு வரிச் சலுகையையும் வழங்குகின்றன, சேமிக்கும் பணத்தை பல மடங்காக பெருக்கிறது. 

Written by - Malathi Tamilselvan | Last Updated : Nov 27, 2023, 07:00 AM IST
  • சிறு சேமிப்புத் திட்டங்கள்
  • உத்தரவாதமான வருமானம்
  • சேமிக்கும் பணத்தை பல மடங்காக பெருக்கும் திட்டங்கள்
சிறுசேமிப்புத் திட்டங்களில் பெஸ்ட் எது? மூணு ஆப்ஷன்கள்... உங்கள் சாய்ஸ் எது? title=

அரசின் சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்வது, நாம் சேமிக்கும் பணத்தை பல மடங்காக பெருக்கிறது. இந்த சேமிப்புத் திட்டங்கள் பல நன்மைகளை அளிப்பதால், பெரும்பாலானவர்கள், அரசு சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்ய விரும்புகிறார்கள். சிறு சேமிப்புத் திட்டங்கள் உத்தரவாதமான வருமானத்தை வழங்குவதோடு வரிச் சலுகையையும் வழங்குகின்றன. பொது வருங்கால வைப்பு நிதி (Public Provident Fund (PPF)), மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (Senior Citizen Savings Scheme) சுகன்யா சம்ரித்தி யோஜனா (Sukanya Samriddhi Yojana) ஆகியவை சிறு சேமிப்புத் திட்டங்கள் அனைவராலும் விரும்பப்படும் சேமிப்புத் திட்டங்களில் சிலவாகும். 

சிறு சேமிப்புத் திட்டங்கள் அனைத்து வகை மக்களுக்கும், வரிச் சலுகைகள் முதல் உத்தரவாதமான வருமானம் வரை பல நன்மைகளை வழங்குகின்றன. இந்தச் சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்வதில் பல நன்மைகள் உள்ளன, சிறு சேமிப்பு திட்டத்தின் நன்மைகளை தெரிந்துக் கொள்வோம்.

உத்தரவாதமான வருமானம்
சிறு சேமிப்பு திட்டங்களில் பொது வருங்கால வைப்பு நிதி, அதாவது PPF, மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம், சுகன்யா சம்ரித்தி யோஜனா போன்றவை அடங்கும்.

மேலும் படிக்க | மூத்த குடிமக்களுக்கு அடிச்சது ஜாக்பாட்.... வட்டியை அள்ளித் தரும் ‘சில’ வங்கிகள்!

நிதி சுதந்திரம் மற்றும் ஸ்திரத்தன்மை
நீங்கள் சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்திருந்தால், அது உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் நிதி சுதந்திரத்தையும் ஸ்திரத்தன்மையையும் அளிக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளது. சிறு சேமிப்பு திட்டங்கள் பாதுகாப்பான, வழக்கமான வருமானம் மற்றும் வலுவான நிதி மூலோபாயத்தின் அடித்தளமாக செயல்படுகின்றன.

வருமான வரி விலக்கு
சிறு சேமிப்புத் திட்டங்களுக்கு வருமான வரி விலக்கு கிடைக்கிறது. வருமான வரியின் 80சி பிரிவின் கீழ், நீங்கள் ரூ.1.5 லட்சம் வரை சேமிக்கலாம். PPF, மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம், நேர வைப்புத்தொகை மற்றும் FD போன்ற திட்டங்கள் வரி விலக்கின் பலனை வழங்குகின்றன.

குறைந்தபட்ச முதலீடு
முதலீட்டாளர்கள் குறைந்தபட்ச முதலீடு செய்ய வேண்டும். சிறு சேமிப்புத் திட்டங்களைப் பொறுத்து, தொகை ரூ.250 முதல் ரூ.1,000 வரை இருக்கும். இந்தத் திட்டங்களில் சிறிய தொகையையும் முதலீடு செய்யலாம்.

மேலும் படிக்க | அதிக வருமானத்துடன் வரி சேமிப்பு பலன்களும் கிடைக்க... சில சிறந்த முதலீட்டு திட்டங்கள்..!

வருமான உத்தரவாதம்
இன்றைய காலகட்டத்தில், மக்கள் பங்குச் சந்தை மற்றும் பரஸ்பர நிதி போன்ற ஆபத்தான இடங்களில் முதலீடு செய்கிறார்கள். அதேசமயம் சிறுசேமிப்பு திட்டங்கள் வருமானத்தை உறுதிப்படுத்துகின்றன. நிலையான வட்டியுடன், சிறு சேமிப்புத் திட்டம் முதிர்ச்சியடையும் போது, எவ்வளவு தொகை முதிர்வுத்தொகையாகக் கிடைக்கும் என்பதை முன்கூட்டியே தெரிந்துக் கொள்ளலாம். அதாவது நாம் சேமிக்கும் பணம் குறிப்பிட்ட ஆண்டுகளுக்குப் பிறகு எவ்வளவு என்பது, சேமிக்கத் தொடங்கும்போதே தெரிந்துவிடும் என்பதால், எதிர்கால திட்டங்களுக்கு ஏற்றவாறு திட்டமிடலாம்.  

தபால் அலுவலகத்தில் சேமிப்புத் திட்டங்கள் உள்ளன, அவற்றிலும் முதலீடு செய்து பலனளிக்கலாம். சிறு சேமிப்புத் திட்டங்களின் கீழ், குறுகிய காலத்திலிருந்து நீண்ட கால வரையிலான முதலீடுகள் உள்ளன. பொது வருங்கால வைப்பு நிதி (PPF), கால வைப்பு, மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் மற்றும் சுகன்யா சம்ரித்தி (SSY), வரிச் சேமிப்பிற்காக EPF என பல சிறு சேமிப்பு திட்டங்கள் பிரபலமானவை.

மேலும் படிக்க | இன்னும் கொஞ்ச நாள் தான் இருக்கு... ஆதார் அட்டை அப்டேட் பண்ணலைன்னா சிக்கல் தான்..!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News