Post Office Schemes for Women: முதலீடு என்பது அனைவரது வாழ்விலும் ஒரு மிக முக்கியமான அம்சமாகும். இதில் ஆண்கள் பெண்கள் என்ற வித்தியாசம் இல்லை. அனைவருக்கும் பணத்தை சேமிப்பது போல, பணத்தை சரியான இடத்தில் முதலீடு செய்து அதை பெருக்குவதும் மிக அவசியம். குறிப்பாக பெண்களை பொறுத்தவரை, அவர்கள் தங்கள் பணத்தை பாதுகாப்பாக வைத்து சிறந்த வருமானத்தை அளிக்கும் முதலீட்டு திட்டங்களையே தேர்ந்தெடுக்க விரும்புகிறார்கள். இப்படிப்பட்ட பல திட்டங்கள் தபால் நிலையத்தில் உள்ளன.
பல வகையான சேமிப்புத் திட்டங்கள் இந்திய அஞ்சல் அலுவலகத்தால் நடத்தப்படுகின்றன. இந்த அஞ்சலக திட்டங்களில் முதலீடு செய்து கோடிக்கணக்கான மக்கள் நல்ல வருமானம் பெறுகின்றனர். அஞ்சல் அலுவலகத்தில் பாதுகாப்பான வழியில் சிறந்த வருமானத்தை அளிக்கும் பல திட்டங்கள் உள்ளன. முதலீட்டைப் பொறுத்தவரை பெண்களுக்குச் சிறந்ததாகக் கருதப்படும் அந்த 5 திட்டங்களைப் பற்றி இந்த பதிவில் காணலாம். இவற்றில் முதலீடு செய்வதன் மூலம் பெண்கள் சிறந்த வருமானத்தை பெறுவதோடு வரி விலக்கும் கிடைக்கும்.
பொது வருங்கால வைப்பு நிதித் திட்டம் (PPF)
பொது வருங்கால வைப்பு நிதித் திட்டம் (PPF) நீண்ட கால சேமிப்புத் திட்டமாகும். இதில் முதலீடு செய்வதன் மூலம் பெண்கள் தங்கள் எதிர்காலத்தைப் பாதுகாக்க முடியும். இந்த திட்டத்தின் கீழ், அரசாங்கம் தற்போது டெபாசிட்டுகளுக்கு 7.1 சதவீத வட்டி விகிதத்தை வழங்குகிறது. நீங்கள் 15 ஆண்டுகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் ரூ.1 லட்சத்தை முதலீடு செய்தால், முதிர்ச்சியின் போது சுமார் ரூ.31 லட்சம் கிடைக்கும்.
சுகன்யா சம்ரித்தி யோஜனா (SSY)
சுகன்யா சம்ரித்தி யோஜனா எனப்படும் செல்வமகள் சேமிப்புத் திட்டம் ஒரு மிகச்சிறந்த அஞ்சல் அலுவலக திட்டமாகும். இது குறிப்பாக பெண்களுக்காக தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், 10 வயது வரையிலான பெண் குழந்தைகளின் பெயரில் கணக்கு தொடங்கலாம். இந்தக் கணக்கில் ரூ.250 முதல் அதிகபட்சமாக ரூ.1.5 லட்சம் வரை முதலீடு செய்யலாம். தற்போது இந்த திட்டத்தின் கீழ் டெபாசிட்களுக்கு 8 சதவீத வட்டியை அரசு வழங்குகிறது.
மேலும் படிக்க | Business Idea: பண்டிகை காலத்தை மிஸ் பண்ணாதீங்க...கை கொடுக்கும் ‘5’ சூப்பர் பிஸினஸ்!
தேசிய சேமிப்புச் சான்றிதழ் (NSC)
தேசிய சேமிப்புச் சான்றிதழ் பெண்களுக்கு சிறந்த முதலீட்டுத் தேர்வாகவும் இருக்கும். இந்தத் திட்டத்தின் கீழ், நீங்கள் ரூ 1000 முதல் எவ்வளவு தொகை வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம். இதற்கு அதிகபட்ச வரம்பு இல்லை. வைப்புத்தொகைக்கான வட்டி விகிதம் 7.7 சதவீதம் என்ற விகிதத்தில் கிடைக்கும். இத்திட்டத்தின் மொத்த காலம் 5 ஆண்டுகள் ஆகும்.
நேர வைப்பு திட்டம் (Time Deposit Scheme)
போஸ்ட் ஆபிஸ் டைம் டெபாசிட் திட்டமும் பெண்களுக்கு ஒரு நல்ல முதலீட்டு விருப்பமாகும். இந்தத் திட்டத்தின் கீழ், ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட தொகையை கணக்கில் டெபாசிட் செய்யலாம். தபால் அலுவலகம் 5 ஆண்டுகளுக்கு 7.5 சதவீத வட்டி விகிதத்தை வழங்குகிறது.
மகிளா சம்மான் சேமிப்புத் திட்டம் (MSSC)
மகிளா சம்மான் பச்சத் யோஜனா எனப்படும் மகிளா சம்மான் சேமிப்புத் திட்டம் அரசால் தொடங்கப்பட்ட திட்டமாகும். இது பெண்களுக்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ், பெண்கள் ரூ.2 லட்சம் வரை முதலீடு செய்யலாம். டெபாசிட் செய்யப்பட்ட தொகைக்கு 7.5 சதவீதம் வரை வட்டி பெறலாம். இந்தத் திட்டத்தின் மொத்தக் காலம் இரண்டு ஆண்டுகள் ஆகும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ