Onion Price: பண்டிகை காலத்தில் வெங்காய விலை அதிரடியா உயருதே! கவலையை தீர்க்கும் அரசு

Onion Prices Hike: வெங்காய விலை அதிகரிப்பில் இருந்து நிவாரணம் கொடுக்கும் மத்திய அரசு!  25 ரூபாய்க்கு விற்கும், பஃபர் ஸ்டாக் மூலம் விற்பனை செய்ய முடிவு

Written by - Malathi Tamilselvan | Last Updated : Oct 28, 2023, 05:28 AM IST
  • வெங்காயத்தின் விலை கிலோ ஒன்றுக்கு 60-70 ரூபாயை எட்டும்.
  • பண்டிகை காலத்தில் வெங்காய விலை அதிகரிப்பு
  • விலையைக் கட்டுப்படுத்த அரசு முன்னேற்பாடு
Onion Price: பண்டிகை காலத்தில் வெங்காய விலை அதிரடியா உயருதே! கவலையை தீர்க்கும் அரசு title=

புதுடெல்லி: நமது அன்றாட உணவில் அங்கமாகிவிட்ட வெங்காயம் அவ்வப்போது விலை உயர்ந்து அனைவரின் கண்களிலும் கண்ணீரை வரவழைக்கிறது. தற்போது வெங்காய விலை உயர்வுக்குப் பிறகு, நுகர்வோருக்கு நிவாரணம் அளிக்கும் வகையில், சில்லறை சந்தைகளில், 'பஃபர் ஸ்டாக்' மூலம், ஒரு கிலோவுக்கு, 25 ரூபாய்க்கு சலுகை விலையில், வெங்காயம் விற்பனையை அதிகரிக்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.நவராத்திரி முடிந்த உடனேயே வெங்காயத்தின் விலையில் அதிகரிப்பு தெரியத் தொடங்கிவிட்டது.

15 நாட்களுக்குள் வெங்காயத்தின் விலை 57%க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. வெங்காயத்தின் விலை தற்போது கிலோ 70 ரூபாயை எட்டியுள்ளது. வெங்காயம் விலை உயர்வுக்குப் பிறகு, நுகர்வோருக்கு நிவாரணம் அளிக்கும் வகையில், சில்லறை விற்பனைச் சந்தையில் ஒரு கிலோவுக்கு ரூ.25 சலுகை விலையில், 'பஃபர் ஸ்டாக்' மூலம் வெங்காயம் விற்பனையை அதிகரிக்க மத்திய அரசு முடிவு செய்தது.

இது தொடர்பாக, நுகர்வோர் விவகார அமைச்சகம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, வெங்காயத்தின் அகில இந்திய சராசரி சில்லறை விலை வெள்ளிக்கிழமை ஒரு கிலோவுக்கு ரூ.47 ஆக உயர்ந்துள்ளது. வெள்ளிக்கிழமை தேசிய தலைநகரில் வெங்காயத்தின் சில்லறை விலை ஒரு கிலோவுக்கு ரூ.40 ஆக இருந்தது, அதே நேரத்தில் ஒரு வருடத்திற்கு முன்பு இதே காலத்தில் கிலோவுக்கு ரூ.30 ஆக இருந்தது.

மேலும் படிக்க | தீபாவளிக்கு விவசாயிகளுக்கு 12 ஆயிரம் ரூபாய் ஜாக்பாட் பரிசு கொடுக்கும் அரசு!

நுகர்வோர் விவகார செயலாளர் ரோஹித் குமார் சிங் பிடிஐயிடம் பேசிய போது விலை உயர்வு தொடர்பான விவரங்களை விவரமாக தெரிவித்தார். "ஆகஸ்ட் நடுப்பகுதியில் இருந்து வெங்காயத்தை 'பஃபர் ஸ்டாக்' மூலம் வழங்குகிறோம், மேலும் விலை உயர்வைத் தடுக்கவும், நுகர்வோருக்கு நிவாரணம் வழங்கவும் சில்லறை விற்பனையை அதிகரித்து வருகிறோம்"  தெரிவித்தார்.

என்று ரோஹித் குமார் சிங் அமைச்சகத்தின் கூற்றுப்படி, விலை கடுமையாக உயரும் மாநிலங்களில், மொத்த மற்றும் சில்லறை சந்தைகளில் 'பஃபர் ஸ்டாக்' மூலம் வெங்காயம் வழங்கப்படுகிறது. ஆகஸ்ட் நடுப்பகுதியில் இருந்து, சுமார் 1.7 லட்சம் டன் வெங்காயம் 22 மாநிலங்களில் வெவ்வேறு இடங்களில் பஃபர் ஸ்டாக் மூலம் கொடுக்கப்பட்டது.

வெங்காயம் கிலோ 25 ரூபாய்க்கு அரசு விற்பனை செய்கிறது
சில்லறை சந்தைகளில், இந்திய தேசிய நுகர்வோர் கூட்டுறவு கூட்டமைப்பு (என்.சி.சி.எஃப்) மற்றும் தேசிய வேளாண் கூட்டுறவு விற்பனை ஆகிய இரண்டு கூட்டுறவு அமைப்புகளின் கடைகள் மற்றும் வாகனங்கள் மூலம், 'பஃபர் ஸ்டாக்கில்' உள்ள வெங்காயம் ஒரு கிலோவுக்கு 25 ரூபாய் என்ற மானிய விலையில் விற்கப்படுகிறது. டெல்லியிலும் அதே சலுகை விலையில் பஃபர் ஸ்டாக்கில் இருந்து வெங்காயம் விற்கப்படுகிறது.

மேலும் படிக்க | NPS கணக்கில் யாரை நாமினி ஆக்கலாம்? நாமினிகளை புதுப்பிக்க லேட்டஸ்ட் அப்டேட்

வெங்காயம் விலை உயர்வுக்கு என்ன காரணம்?

வானிலை தொடர்பான காரணங்களால் காரீஃப் பருவத்தில் வெங்காய சாகுபடி தொடங்குவதில்தாமதம் ஏற்பட்டதால் விளைச்சல் குறைந்து பயிர் வருவதில் தாமதம் ஏற்பட்டதாக அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். புதிய காரீஃப் வெங்காயத்தின் வரத்து இப்போது தொடங்கியிருக்க வேண்டும், ஆனால் அது தாமதமாவதால், வெங்காயத்தின் விலை குறைவதாக அரசு அதிகாரிகள் கூறுகின்றன.

சேமித்து வைக்கப்பட்டுள்ள ரபி பருவத்தின் வெங்காயம் தீர்ந்து போனதாலும், காரீஃப் வெங்காயம் வருவதில் தாமதம் ஏற்பட்டதாலும், மொத்த மற்றும் சில்லறை சந்தைகளில் விலை உயர்ந்து வருவதால் வெங்காய வரத்து நிலைமை மோசமாக உள்ளது.

5 லட்சம் டன் வெங்காயம்
நடப்பு 2023-24 ஆம் ஆண்டில் வெங்காயத்திற்கான ‘பஃபர் ஸ்டாக்கை’ அரசாங்கம் இரட்டிப்பாக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இது உள்நாட்டில் வெங்காயத்தின் கிடைக்கும் தன்மையை மேம்படுத்தி, விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தும். 2023-24 நிதியாண்டில், நுகர்வோர் விவகார அமைச்சகம் NCCF மற்றும் NAFED மூலம் 5 லட்சம் டன்கள் 'பஃபர் ஸ்டாக்' பராமரித்து, வரும் நாட்களில் கூடுதலாக 2 லட்சம் டன் வெங்காயத்தை வாங்க திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் வெங்காயத்தின் விலை கடுமையாக உயராமல் கட்டுப்படுத்தப்படும்.

மேலும் படிக்க | தனியா இருந்தா ஓகே! ஆனா கூட்டு சேர்ந்தா வயித்துவலி கேரண்டி! இது ஃபுட் காம்போ அலர்ட்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News