தனியா இருந்தா ஓகே! ஆனா கூட்டு சேர்ந்தா வயித்துவலி கேரண்டி! இது ஃபுட் காம்போ அலர்ட்

Harmful Food Combinations: சில உணவுகளை சேர்த்து உண்டால் உடல் நலனுக்கு நல்லது எனவும், பல உணவுகள் ஒன்றாக உண்ணக்கூடாது என்று எச்சரிக்கையும் செய்யப்படுவதுண்டு... அதற்கான காரணம் என்ன?  

Written by - Malathi Tamilselvan | Last Updated : Oct 3, 2023, 03:46 PM IST
  • ஃபுட் காம்போ எப்போதும் ஒர்க் அவுட் ஆகாது
  • சில உணவுகளை ஒன்றாக உண்டால் ஆபத்து
  • பாலும் மீனும் ஒன்றாக சேர்த்து உண்டால் ஆபத்து
தனியா இருந்தா ஓகே! ஆனா கூட்டு சேர்ந்தா வயித்துவலி கேரண்டி! இது ஃபுட் காம்போ அலர்ட் title=

ஆரோக்கியமாக வாழ உதவும் உணவே, நமது ஆரோக்கியத்தை சீர்குலைக்கும் வேலையையும் செய்கிறது. உங்கள் ஆரோக்கியத்திற்கு ஆபத்தைஎ எற்படுத்தும் சில உணவு சேர்க்கைகளைப் பற்றி உங்களுக்கு  தெரியாமலும் இருக்கலாம். சில சமயங்களில் அவை உடலுக்கு தீங்கு விளைவிக்காவிட்டாலும் இந்த காம்பினேஷன்கள் பல சமயங்களில் மிகுந்த ஆபத்தை ஏற்படுத்திவிடும்.

சில உணவுகளை சேர்த்து உண்டால் உடல் நலனுக்கு நல்லது எனவும், பல உணவுகள் ஒன்றாக உண்ணக்கூடாது என்று எச்சரிக்கையும் செய்யப்படுவதுண்டு... அதற்கான காரணம் என்ன?  பொதுவாக, உங்கள் உணவுகளின் ஊட்டச்சத்து மதிப்பு மற்றும் சுவையை அதிகரிக்க இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட உணவுகளை நாம் உண்கிறோம். உதாரணமாக, இட்லி-சட்னி-சாம்பார், வடை-பாயசம், ப்ரெட் ஜாம் என சொல்லிக் கொண்டே போகலாம்.

இருப்பினும், சில உணவுகள் தனித்தனியாக உட்கொள்ளப்பட வேண்டும், ஏனெனில் அவற்றை செரிக்க நமது உடல் எடுத்துக் கொள்ளும் கால அளவு மாறுபடும். மிகவும் எளிதாக செரிமானமாகும் உணவுடன், செரிமானமாக பல மணி நேரங்கள் எடுத்துக் கொள்ளும் உணவுகளை ஒன்றாக சேர்த்து சாப்பிடுவதால் வயிற்று வலி, வீக்கம், சோம்பல், வாயு மற்றும் அசௌகரியம் ஏற்படலாம்.

ஆனால், இது தெரியாமல், நீண்ட காலம் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், செரிமான பிரச்சினைகள் மற்றும் உடலில் துர்நாற்றம் என பல பிரச்சனைகள் ஏற்பட வழிவகுக்கும். சரியான உணவு சேர்க்கைகள் மூலம் மட்டுமே நீங்கள் உடல் எடையை குறைக்க முடியும் என்பதும் நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்க முடியும் என்பதை புரிந்துக் கொள்வது நல்லது.

மேலும் படிக்க | Weight Loss Tips: உடல் பருமனை ஓட ஓட விரட்ட.. பப்பாளியை இப்படி சாப்பிட்டு பாருங்க

சில உணவுகள் பொருந்தாதவையாகக் கருதப்படுவதற்கு காரணம், அவை எதிரெதிர் பண்புகளைக் கொண்டுள்ளதாக இருக்கும். ஒன்று சூடாகவும் மற்றொன்று குளிராகவும் இருக்கலாம். எனவே, சில உணவு சேர்க்கைகளை தவிர்ப்பது நல்லது என்றால், அந்தப் பட்டியலில் முதலிடம் பிடிக்கும் சில காம்பினேஷன்கள் இவை.  

பாலும் மீனும்

ஆயுர்வேதக் கோட்பாடுகளின்படி, பால் மற்றும் மீன் ஆகிய இரண்டு உணவுகளும் சுவையானவை என்றாலும், இரண்டின் சத்துக்களும் வேறுபட்டவை. பால் குளிர்ச்சியானது என்றால், மீன் சூடானது. இந்த இரண்டையும் ஒரே நேரத்தில் உண்டால் இரத்த ஓட்டம் பாதிக்கப்படும்.

முட்டை மற்றும் பன்றி இறைச்சி

உயர் புரத உணவுகளான முட்டை மற்றும் பன்றி இறைச்சி கலவையை தவிர்ப்பது நல்லது. இந்த இரண்டு உணவுகளிலும் அதிக புரதம் உள்ளது என்பதால், இரண்டையும் ஒன்றாக உண்டால் செரிமானம் ஆவதற்கு நீண்ட நேரம் ஆகும்.  

பால் மற்றும் துளசி 
சளி மற்றும் இருமல் இருந்தால், நாம் துளசி இலையை பயன்படுத்துகிறோம். ஆனால், பால் குடித்த அல்லது  பால் பொருளை உண்ட 30 நிமிட இடைவெளியில் துளசியை எடுத்துக் கொள்ள வேண்டும். இரண்டையும் சாப்பிடுவதற்கு இடையில் போதிய இடைவெளி இல்லையென்றால், அது எதிர்விளைவைக் கொடுக்கும்.  

மேலும் படிக்க | சுகர் லெவல் குறைய.. இந்த மேஜிக் பானங்கள் உதவும்!! குடிச்சி பாருங்க

சீஸ் உணவு மற்றும் குளிர் பானம்
பீட்சா மற்றும் கோக் சாப்பிடுவதற்கு சுவையாக இருந்தாலும், இந்த கலவை உங்கள் ஆரோக்கியத்திற்கு மோசமானது. சீஸ் உணவுடன் குளிர் பானத்தை உட்கொள்ளக்கூடாது, ஏனெனில் இவை இரண்டும் உடலால் கிரகிக்கப்படுவதற்கு அதிக நேரம் எடுக்கும். இது வயிற்று வலி மற்றும் அசௌகரியத்தை கொடுக்கலாம்.

உணவோடு பழங்கள்

உங்கள் உடல் பழங்களை எளிதில் ஜீரணிக்க முடியும், ஆனால் உணவு செரிக்க அதிக நேரம் எடுக்கும். எனவே உணவு செரிக்கப்பட்டு புளிக்க ஆரம்பிக்கும் வரை பழங்கள் உண்ணாமல் இருக்க வேண்டும்.  உணவு உண்ட உடனே அல்லது உண்பதற்கு முன்னர் பழங்களை உட்கொள்ளக் கூடாது.

வெல்லம் மற்றும் தயிர்

வெல்லம் மற்றும் தயிர் உங்கள் உடல் எடையை அதிகரிக்கும் என்பதோடு, இருமல் மற்றும் சளியை அதிகரிக்கும்.  

மேலும் படிக்க | வாழைப்பழத்துடன் கூட்டணி சேராத சில உணவுகள்.. ‘இவற்றை’ தவிர்க்கவும்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News