அமாவாசையின் முக்கியத்துவம் மற்றும் சிறப்புகள் என்ன தெரியுமா?

அமாவாசைகள் ஆண்டில் பல வந்தாலும், அவற்றில் முக்கியமானவை மூன்று. தை அமாவாசை, ஆடி அமாவாசை, மகாளய அமாவாசை. இந்த மூன்று அமாவாசை தினங்களில் நம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் மற்றும் படையல் கொடுக்க வேண்டிய முக்கியமான நாள்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Feb 10, 2021, 04:31 AM IST
  • அமாவாசை நாளன்று முன்னோர்களுக்கு படையல் இடுவது சிறப்பானது
  • முன்னோர்கள் மனம் குளிர்ந்தால் வாழ்வு சிறக்கும்
  • அமாவசைகளில் முக்கியமானது தை அமாவாசை
அமாவாசையின் முக்கியத்துவம் மற்றும் சிறப்புகள் என்ன தெரியுமா? title=

அமாவாசைகள் ஆண்டில் பல வந்தாலும், அவற்றில் முக்கியமானவை மூன்று. தை அமாவாசை, ஆடி அமாவாசை, மகாளய அமாவாசை. இந்த மூன்று அமாவாசை தினங்களில் நம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் மற்றும் படையல் கொடுக்க வேண்டிய முக்கியமான நாள்.

தை அமாவாசை என்பது சூரியனின் முக்கிய நாள். சூரியன் தை மாதத்தில் மகர ராசியில் சஞ்சரிக்கின்றார். பொதுவாக, சூரியன் இருக்கும் இடத்தை வைத்து தான் அமாவாசையின் முக்கியத்துவம் கணிக்கப்படுகிறது. அதில்  மகரம், மேஷம், கடகம் மற்றும் துலாம் ராசிகளில் சூரியன் இருக்கும்போது வரும் அமாவாசைகள் முக்கியத்துவம் பெற்றவை ஆகும்.

மகரத்தில் சூரியன் இருக்கும் காலத்தில் வருவது தை அமாவாசை. கடகத்தில் சூரியன் இருக்கக் கூடிய ஆடி அமாவாசை, துலாம் ராசியில் சூரியன் இருக்குக்ம்போது வருவது மகாளய அமாவாசை. இந்த மூன்று அமாவாசைகளும் சிறப்பு வாய்ந்தவை.

Also Read | எந்நாளும் வளமாய் வாழ திருஷ்டி பரிகாரங்கள் பற்றி தெரியுமா? 
 
தை மாதத்தில் மகர ராசியில் சூரியன் பிரவேசிக்கின்றார். மகன் சனியின் வீட்டிற்கு, அதாவது மகரத்திற்கு அவரது தந்தையான சூரியன் பிரவேசிக்கிறார். சூரியனை பிதுர்காரகன் என்றும், சந்திரனை மாதுர்காரகன் என்றும் நம் முன்னோர்கள் கூறுகின்றனர்.

சூரியனும், சந்திரனும் சனியின் வீட்டில் சஞ்சரிப்பதால் தை அமாவாசை கூடுதல் சிறப்பாக பார்க்கப்படுகின்றது.

எனவே தை அமாவாசை முக்கியத்துவம் வாய்ந்தது. அன்று முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய  தர்ப்பணம், சிரார்த்தம் போன்ற கடமைகளை செய்வது அவர்களுக்கு பிடிக்கும் என்று நம்பப்படுகிறது. முன்னோர்களை வழிபட்டு அவர்களின் ஆசி பெறுவது குடும்பத்தை செழிக்க வைக்கும் என்று நம்பப்படுகிறது.

Also Read | இந்துக்களின் பெரும்பாலான கோவில்கள் சேதமடைந்துள்ளன, Pakistan ஆணையம் சாடல்

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News