எந்நாளும் வளமாய் வாழ திருஷ்டி பரிகாரங்கள் பற்றி தெரியுமா?

திருஷ்டி என்பது ஒருவரின் வாழ்க்கையில் நிம்மதியை குலைத்துவிடும். அதற்கான பாரிகாரங்கள் மிகவும் எளிதுதான். அதை தெரிந்துக் கொண்டு செய்தால் நிம்மதியாக வாழலாம்.

Written by - Malathi Tamilselvan | Last Updated : Feb 5, 2021, 12:34 AM IST
எந்நாளும் வளமாய் வாழ திருஷ்டி பரிகாரங்கள் பற்றி தெரியுமா? title=

திருஷ்டி என்பது ஒருவரின் வாழ்க்கையில் நிம்மதியை குலைத்துவிடும். அதற்கான பாரிகாரங்கள் மிகவும் எளிதுதான். அதை தெரிந்துக் கொண்டு செய்தால் நிம்மதியாக வாழலாம்.

திருஷ்டி என்றால் என்ன? 
திருஷ்டி என்பது சமஸ்க்ரிதத்தில் பார்வை அல்லது தீய கண் கொண்டு பார்ப்பது என்று கூறப்படுகிறது. அதாவது தீய எண்ணங்களான பொறாமை, வெறுப்பு  போன்ற எண்ணங்களுடன் பிறர்  நம்மிடம் பழகும்போது, நமக்கு பாதிப்பு ஏற்படும், அதைத்தான் திருஷ்டி என்று சொல்வோம். 

திருஷ்டிக்கான பரிகாரங்கள் என்பது சந்தர்ப்பம், சமயத்திற்கு ஏற்பட மாறுபடுகிறது. உதாரணமாக திருமண விழாவில் ஏற்படும் திருஷ்டி வேறுவிதமானது, நமது வீட்டிற்கு வந்து செல்பவர்கள் நமது நல்ல நிலையைப் பார்த்து ஏக்கப்படுவதால் வரும் திருஷ்டி வேறு விதம். எனவே, ஒவ்வொரு சந்தர்ப்பத்திற்கும் ஏற்றவாறு திருஷ்டி பரிகாரங்கள் செய்யப்படுகின்றன.

Also Read | வடக்குத் திசையில் வைத்து குபேரனை வணங்கினால், செல்வ வளம் பெருகுமா?

விசேஷ வைபவங்கள், சுபநிகழ்வுகளிலும், மணமக்கள் வீட்டினுள் வரும்போதும், தாயும் குழந்தையும் முதல் முறையாக வீட்டிற்கு வருபது போன்ற சந்தர்ப்பங்களில் ஆரத்தி எடுத்து திலகம் இடுவது வழக்கமாக இருக்கிறது. ஆரத்தி எடுக்கும்போது பயன்படுத்தப்படும் குங்குமம் கலந்த நீர், வெற்றிலை மீது எரியும் கற்பூரம் ஆகியவற்றுக்கு தீய சக்திகளை விரட்டும் ஆற்றல் உண்டு.

வாழை மரம் : சுப நிகழ்வுகளின்போது குலை தள்ளி, பூவுடன் இருக்கும் வாழைமரத்தை வாசலில் கட்டுவார்கள். இதற்கு காரணம் வாழைக்கு திருஷ்டி தோஷங்களை ஈர்த்துக் கொள்ளும் குணம் உண்டு என்பதுதான்.

Also Read | தேவலோக மரங்கள் எவை? அதன் சிறப்புகள் என்ன தெரியுமா?

திருஷ்டி பரிகாரத்திற்காக வீட்டிற்குள் வைக்கும் பொருட்களாலும் திருஷ்டி கழியும். வீட்டுக்கு, அலுவலகத்துக்கு வருபவர்களின் பார்வையை, கெட்ட எண்ணங்களை திசை திருப்புவதற்கு பெரிய முகம் பார்க்கும் கண்ணாடியை வரவேற்பறையில் அல்லது வீட்டின் உள்வாசலில் வைக்கலாம். மீன் தொட்டி வைத்து அதில் கருப்பு, சிகப்பு மீன்களை வளர்க்கலாம்.

கண் திருஷ்டி கணபதி படம் வைக்கலாம். மிக மெல்லிய வாத்ய இசை, மந்திரங்களை ஒலிக்க விடலாம். வாசலில் கற்றாழை, சப்பாத்தி கள்ளி, முள் அதிகம் உள்ள செடிகள், மஞ்சள் ரோஜா செடி ஆகியவற்றை வளர்க்கலாம். ஆகாச கருடன் என்று ஒரு வகை கிழங்கு உள்ளது.  அதை வாங்கி மஞ்சள், சந்தனம், குங்குமம் வைத்து கருப்பு கம்பளி கயிற்றில் கட்டி வீட்டின் வாசலில் தொங்க விடலாம்.

வாரம் ஒருமுறை கல் உப்பை குளிக்கும் தண்ணீரில் கலந்து குளித்து வர திருஷ்டியால் ஏற்படும் உடல் அசதி, சோம்பல் நீங்கும். குறிப்பாக அவரவர் பிறந்த கிழமை அல்லது செவ்வாய்க்கிழமையில் இவ்வாறு குளிக்கலாம்.

Also Read | அபிஷேகத்தின் ஆற்றல் மற்றும் பயன்கள் பற்றித் தெரியுமா?

வியாபாரத் தலங்களில் திருஷ்டி நீங்க எலுமிச்சம்பழத்தை அறுத்து ஒரு பகுதியில் குங்குமத்தை தடவியும், மற்றொரு பகுதியில் மஞ்சள் பொடியைத் தடவியும் வைக்கலாம். இதை ஒவ்வொரு செவ்வாய்க்கிழமை செய்வது நலம் தரும். பழத்தை மாற்றும்போது முதலில் வைத்த பழத்தை மூன்று முறை கடையை சுற்றி தெருவில் வீசிவிடவும்.

வளர்பிறையில் வரும் செவ்வாய், சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கடற்கரைக்குச் சென்று கடல் நீரை எடுத்து வந்து அதில் மஞ்சள் பொடியை கலந்து கடை, அலுவலகம், வீடு ஆகியவற்றில் தெளிப்பது சிறந்த பரிகாரம்.

அமாவாசை, பவுர்ணமி, அஷ்டமி, நவமி போன்ற நாட்களில் காலை, மாலை இருவேளையும் சாம்பிராணி பொடியுடன், கருவேலம்பட்டை பொடி, வெண் கடுகுத்தூள் ஆகியவற்றை கலந்து வீடு, கடை அலுவலகத்தில் தூப, தீப, புகை காட்ட திருஷ்டியும், தீய சக்திகளும் வெளியேறும். இவற்றைத் தவிர புதிதாக கட்டப்படும் வீடு உள்ளிட்ட கட்டடங்களில் திருஷ்டி பொம்மை கட்டி தொங்கவிடுவார்கள். இது கண் திருஷ்டியை போக்கும் என்பது நம்பிக்கை.

Also Read | பூர்வ ஜென்ம பலன் என்பது நம்பக்கூடியதா? - இதோ உங்களுக்கான பதில்..

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News