Devotional: சப்த கன்னியர்களை வணங்கினால் கிடைக்கும் பலன்களைப்பற்றி தெரியுமா?

இந்து மதத்தில் தெய்வங்களின் எண்ணிக்கையும் அதிகம், பூஜை செய்யும் வழிமுறைளும் பற்பல. தென்னிந்தியாவில் அதிலும் குறிப்பாக தமிழகத்தில் சப்த கன்னியர் வழிபாடு முக்கியத்துவம் பெற்றது.

Written by - Malathi Tamilselvan | Last Updated : Feb 15, 2021, 05:34 AM IST
Devotional: சப்த கன்னியர்களை வணங்கினால் கிடைக்கும் பலன்களைப்பற்றி தெரியுமா? title=

இந்து மதத்தில் தெய்வங்களின் எண்ணிக்கையும் அதிகம், பூஜை செய்யும் வழிமுறைளும் பற்பல. தென்னிந்தியாவில் அதிலும் குறிப்பாக தமிழகத்தில் சப்த கன்னியர் வழிபாடு முக்கியத்துவம் பெற்றது.

சப்தகன்னியரை வழிபாடு செய்து, சுமங்கலிகளுக்கு மங்கலப் பொருட்கள் வழங்கினால், சந்ததி சிறக்கும் என்றும் தாலி பாக்கியம் நிலைக்கும் என்றும் குலம் தழைக்கும் என்பதும் நம்பிக்கை.

பெண் தெய்வ வழிபாட்டிலும் சக்தி வழிபாட்டிலும் கிராம தெய்வ வழிபாடுகளிலும் சப்த கன்னியருக்கு முக்கியமான இடம் உண்டு. பிராம்மி, மகேஸ்வரி, கெளமாரி, வைஷ்ணவி, வராஹி, இந்திராணி, சாமுண்டீஸ்வரி என ஏழு தெய்வங்களும் சப்த கன்னியர் என்று அழைக்கப்படுகின்றனர். இந்த ஏழு தேவியரை வணங்கினால், தீங்குகள் குறைந்து, நன்மைகள் அதிகரிக்கும் என்பது தொன்று தொட்டு இருந்து அரும் நம்பிக்கை.

Also Read | உங்களிடம் இருக்கும் செல்வம் எந்த வகை? எவ்வளவு தலைமுறையினருக்கு செல்லும்?
 
சப்த கன்னியர், கன்னிமார், சப்த மாதர்கள் என எழுவரும் பல்வேறு பெயர்களால் போற்றப்படுகின்றனர். சப்த கன்னிகளுக்கு தனியாக கோவில்கள் இருப்பதில்லை. ஆலயங்களிலேயே அவர்களுக்கென சன்னதிகள் வைக்கப்பட்டிருக்கும்.

பொதுவாக கிராம வழிபாட்டில் தான் சப்த கன்னியருக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும்.
கிராமக் கோயில்களிலும் எல்லை தெய்வம் குடிகொண்டிருக்கும் கோயில்களிலும் சப்தமாதர்களுக்கு சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, காவல்தெய்வங்களாகவும் வழிபாடு செய்வது வழக்கம். 

சப்த கன்னியர்களாக வணங்கப்படும் எழுவரும், தீமைகள் அதிகரிக்கும்போது ஒவ்வொரு கட்டத்தில், அவதரித்து அதை அழித்தவர்கள் என்று கூறப்படுகிறது. 

Also Read | வடக்குத் திசையில் வைத்து குபேரனை வணங்கினால், செல்வ வளம் பெருகுமா?

அந்தகாசுரன் எனும் அரக்கனை அழிக்க அவதாரம் எடுத்தவர் மகேஸ்வரி. அவன், எண்ணற்ற அரக்கர்களை வெளிப்படுத்தி உலகை கொடுமைப்படுத்திக் கொண்டிருந்தான். அப்போது அந்தகாசுரனை அழிக்க உருவாக்கப்பட்டவர்கள் சப்த கன்னியர்கள்.

சக்தியால் தோற்றுவிக்கப்பட்டவர் மகேஸ்வரி. பிரம்மதேவர் உருவாக்கிய சக்தி, பிராம்மி. மகாவிஷ்ணு, நாராயணி எனும் சக்தியைப் படைத்தார். முருகப்பெருமான் கெளமாரியை தோற்றுவித்தார்.

ஸ்ரீவராக மூர்த்தி வராகியையும் இந்திரன் இந்திராணியையும் தோற்றுவித்தார்கள். யமதருமன் சாமுண்டி தேவியைத் தோற்றுவித்தார் என்று புராணங்கள் கூறுகின்றன. 

இந்த சப்தகன்னியர் பரமேஸ்வரனின் பணிப்பெண்கள் என்பதும் நம்பிக்கை.  சப்த கன்னியரின் ரூபத்தில் அன்னை சக்தி குடியிருக்கிறார். ஆதிகாலத்தில், சப்த கன்னியர் வழிபாடு, எல்லையைக் காக்கின்ற தெய்வமாகவே போற்றி வணங்கப்பட்டது.

Also Read | இறைவழிபாட்டில் தவிர்க்க வேண்டிய மலர்கள் எவை? 

குலத்தைத் தழைக்கச் செய்யவும் விவசாயத்தை செழிக்கச் செய்யவும் சப்த கன்னியர் வழிபாடு மேற்கொள்ளப்பட்டது. கிராம தெய்வங்களுக்கு போடுவதைப் போல சப்த கன்னியருக்கும் படையல் போடுவார்கள்.

விதை நெல் வைத்து சப்த கன்னியரை வழிபடும் முறை இன்றைக்கும் கிராமங்களில் மிக முக்கியமான பூஜையாக அமைந்திருக்கிறது. சப்தகன்னியர் அமைந்திருக்கும் ஆலயங்களுக்குச் செல்லும்போது, சப்தமாதர்களையும் மனதார வேண்டிக்கொண்டால், தனம் தானியம் பெருகும் என்பது நம்பிக்கை.

Also Read | அமாவாசையின் முக்கியத்துவம் மற்றும் சிறப்புகள் என்ன தெரியுமா?

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News