உங்களிடம் இருக்கும் செல்வம் எந்த வகை? எவ்வளவு தலைமுறையினருக்கு செல்லும்?

செல்வ செழிப்போடு வாழ்க வளமுடன் என்று பெரியோர் ஆசீர்வாதம் வழங்குவார்கள். பொதுவாக செல்வம் என்பது ஒரே ஒரு பொருளாலே புரிந்துக் கொள்ளப்படுகிறது. முன்னோர்கள் செல்வங்களை எட்டு வகையாக வகைப்படுத்துகிறார்கள்.  

Written by - Malathi Tamilselvan | Last Updated : Feb 13, 2021, 05:35 AM IST
  • செல்வங்களில் எத்தனை வகை?
  • லட்சுமி செல்வம் என்றால் என்ன?
  • குபேர செல்வம், இந்திர செல்வம் யாரிடம் இருக்கிறது?
உங்களிடம் இருக்கும் செல்வம் எந்த வகை? எவ்வளவு தலைமுறையினருக்கு செல்லும்? title=

புதுடெல்லி: செல்வ செழிப்போடு வாழ்க வளமுடன் என்று பெரியோர் ஆசீர்வாதம் வழங்குவார்கள். பொதுவாக செல்வம் என்பது ஒரே ஒரு பொருளாலே புரிந்துக் கொள்ளப்படுகிறது. முன்னோர்கள் செல்வங்களை எட்டு வகையாக வகைப்படுத்துகிறார்கள்.  

பொருட்செல்வம், உடல்நலம், வெற்றி, தைரியம், நட்பு, திறமை, கண்ணியம், நினைவு என எட்டு வகையாக செல்வங்களை சொல்லலாம். இவை அனைத்தும் நிறைந்திருந்தால் தான் ஒருவர் செல்வந்தர், லட்சுமி கடாட்சம் பெற்றவர் என்று சொல்லமுடியும். 

எட்டு வகையான செல்வங்களையும் பெற்று அஷ்டலஷ்மியின் அருள் பெற்று வாழ நல்லெண்ணம், கொடை, நேர்மறையான எண்ணம் என்ற குணங்கள் ஒருவருக்கு அடிப்படையாக இருந்தால், அவர் என்றென்றும் லட்சுமி கடாட்சம் பெற்று வளமுடன் வாழ்வார். பொருட் செல்வமே தலையாய செல்வம் என்று பொதுவான கருத்து உள்ளது. பொருட் செல்வத்தை நமது முன்னொர்கள் மூன்று வகைக்குள் அடக்கியிருக்கின்றனர். அவை, லட்சுமி செல்வம், குபேர செல்வம், இந்திர செல்வம் எனப்படும்.

Also Read | வடக்குத் திசையில் வைத்து குபேரனை வணங்கினால், செல்வ வளம் பெருகுமா?

இந்த மூன்று வகையான செல்வத்தைப் பற்றி தெரியுமா? உங்களிடம் இருக்கும் செல்வம் எந்த வகையைச் சேர்ந்தது?

லட்சுமி செல்வம் : தேவர்களும் அசுரர்களும் இணைந்து பாற்கடலை கடைந்தனர். அப்போது,, மந்தார மலையை மத்தாக கொண்டு, வாசுகி பாம்பைக் கயிறாகக் கொண்டு பாற்கடல் கடையப்பட்டது. அதில் இருந்து தோன்றினார்கள் சந்திரன், ஐராவதம், காமதேனு, தன்வந்திரி மற்றும் மகாலட்சுமி. மகாலட்சுமி தான் இந்திரன் இழந்த செல்வத்தை மீண்டும் அவனுக்குக் கொடுத்தாள்.

குபேரனை அளகாபுரிக்கு அதிபதியாக ஆக்கினாள். கிருஷ்ணனின் நண்பனான குசேலனுக்கு அளவற்ற நிதியைக் கொடுத்தாள். இவளின் கடைக்கண் பார்வை தன்மேல் விழுந்தால் போதும் என்று மக்கள் ஆசைப்படுகின்றனர். அன்னை மகாலட்சுமியின் அருளைப் பெற்றவர்களுக்கு பதினாறு வகையான பேறுகளும் வந்து சேரும்.

பொருட் செல்வத்தில் முதன்மையான லட்சுமி செல்வத்தைப் பெற்றவர்களுக்கு கர்வம் தோன்றாது. இந்தச் செல்வத்தைப் பெற்றவர்கள் பிறர் மனம் கோணாமல் நடந்து கொள்வார்கள். தர்ம வாழ்வை மேற்கொள்வார்கள். இந்த செல்வம் ஏழுதலை முறையையும் தாண்டி நிலைத்து நிற்கும். இந்த செல்வம் வளர்பிறையாய் ஓங்கி வளரும். இயல்பிலேயே கொடை உள்ளம் கொண்டவர்களுக்கே அன்னை லட்சுமியின் செல்வம் கிடைக்கும்.

Aslo Read | இறைவழிபாட்டில் தவிர்க்க வேண்டிய மலர்கள் எவை? - இதோ முழு விவரம்!

குபேரனின் செல்வம்: ரிஷிக்கு மகனாக பிறந்த குபேரனின் தாய் அசுர குலத்தைச் சேர்ந்தவர். உறவு முறையில் குபேரன் ராவணனுக்கு சகோதரன்.  ராவணன் தனது அடாவடித்தனத்தினால் குபேரனின் நகரத்தை கைப்பற்றிவிட, அன்னை லட்சுமியே குபேரனுக்காக தனி நகரத்தை ஏற்படுத்த அருள் புரிந்தார்.  கடுந்தவம் செய்த குபேரன், தவப் பலனாக சங்கநிதி, பதுமநிதி போன்ற நவநிதிகளுக்கும் அதிபதியானார்.

குபேரனை மனமுருகிப் பிரார்த்தித்தால், குபேரன் வழங்கும் குபேர செல்வம் அந்த பக்தருக்கு திடீர் செல்வமாக வந்து சேரும். அதாவது லாட்டரி, உட்பட திடீர் என்று வந்து சேரும் செல்வங்களே அந்த செல்வங்கள். திடீரென இந்த செல்வம் எப்படி ஒருவருக்கு வந்ததோ அதைப் போன்றே விரைவில் மறைந்துவிடவும் செய்யும்.

எனவே இத்தகைய செல்வத்தை பெற்றவர்கள் மிகுந்த எச்சரிக்கையோடு செயல்படவேண்டும். பிறருக்கு கொடுத்து உதவுவது, அன்னதானம், கல்வி தானம், இலவசக் கல்வி வழங்குதல், என பிறர் மனம் குளிர்ந்து வாழ்த்துபடி செயல்களை செய்ய வேண்டும். அப்படிச் செய்தால் மூன்று தலை முறைகள் வரையிலாவது அந்த செல்வம் நிலைத்திருக்கும்.

Also Read | அமாவாசையின் முக்கியத்துவம் மற்றும் சிறப்புகள் என்ன தெரியுமா?

இந்திர செல்வம் :  தேவர்களின் தலைவன் இந்திரன் கிழக்கு திக்கின் அதிபதி. பொதுவாக இந்திரனை அனைவரும் பிரார்த்திப்பதில்லை.  பசு, வீடு, அரச போகம், பொன் பொருள் என இவ்வுலகத்தில் வசதியாக வாழ்வதற்கான செல்வங்கள் கிடைப்பது இந்திர சம்பத்தின் அடையாளங்கள்.

இந்திரன் அருளால் அடையும் செல்வம் மூன்று தலைமுறைகள் வரை வருவது அரிதிலும் அரிது. சிலருக்கு ஒரே தலை முறையில் கூட மறைந்துவிடும். இந்தச் செல்வம் நிலைக்க விரும்புபவர்கள் குல தெய்வ வழிபாட்டை மேற்கொள்வதுடன், நற்காரியங்களில் ஈடுபடவேண்டும். 

Also Read | இன்றைய பஞ்சாங்கம்: 2021 பிப்ரவரி 13ஆம் நாள், மாசி 1, சனிக்கிழமை

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News