புதுடெல்லி: பொறியியல், மருத்துவ பட்டப்படிப்பு, மற்றைய பட்ட மேற்படிப்புகளுக்கு கடன் பெறுவது இனி சுலபம். கல்விக் கடனுக்காக இனி வங்கிக்கு செல்ல வேண்டிய அவசியமே இல்லை. மாணவர்களுக்கு கல்விக் கடன் கொடுப்பதற்காக, மத்திய அரசு ‘பிரதமர் வித்யா லட்சுமி திட்டம்’ (Pradhan Mantri Vidyalakshmi Karyakram) என்னும் இணையதளத்தை உருவாக்கியுள்ளது.
இந்த தளத்தின் மூலம் கல்விக்கடனுகான விண்ணப்பங்களை அனுப்பலாம். எந்த வங்கிக்கும் சென்று தனிப்பட்ட முறையில் கல்விக்கடனுக்கான விண்ணப்பங்களை கொடுக்கத் தேவையில்லை.
இது தொடர்பாக மத்திய நிதி அமைச்சகம் அனைத்து அரசு வங்கிகளுக்கும், நிதி நிறுவனங்களுக்கும் உத்தரவிட்டுள்ளது. அனைத்து கல்விக் கடன்களுக்கான விண்ணப்பங்களையும், ‘பிரதமர் வித்யா லட்சுமி கார்யகிரம்’ எனும் இணையதளம் வாயிலாகவே பரிசீலனை செய்ய வேண்டும் என அந்த ஆணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, 12-ஆம் வகுப்பு (+2) முடித்தவர்கள் மேற்படிப்புக்கு கடன் தேவைப்பட்டால் கடன் பெறுவது சுலபம். மாணாக்கர்கள் பொறியியல், மருத்துவ பட்டபடிப்புக்கும், பட்டமேற்படிப்புகள் படிக்கவும் கடன் பெற வங்கிக்கு செல்லமாலேயே கடன் வாங்கலாம். ‘பிரதமர் வித்யா லட்சுமி திட்டத்தின்’மூலம் எப்படி விண்ணைப்பிப்பது என்று தெரிந்துக் கொள்வோம்.
'Prime Minister Vidya Lakshmi Program எனும் இணையதளத்திற்கு செல்லவும்.
அதில் உள்ள கல்விக்கடனுக்கான விண்ணப்பத்தில் தேவையான தகவல்களை பூர்த்தி செய்யவும். எந்த வங்கியில் கல்விக்கடன் தேவை என்ற தகவலையும் தெரிவிக்கவும்.
இந்த விண்ணப்பத்தை அனுப்பிவைக்கவும்.
Also Read | நாடு முழுதும் 24 போலி பல்கலைக்கழகங்கள்: மத்திய கல்வி மந்திரி
முறைப்படி பரிசீலனை செய்யப்படும் விண்ணப்பங்கள் வகைப்படுத்தப்படும். கடன் பெற தகுதி பெறும் மாணவர்கள் தொடர்பான விவரங்கள் சம்பந்தப்பட்ட வங்கிக்கு அனுப்பப்படும். அதன்பிறகு அந்த வங்கி, கல்விக்கடன் தொடர்பான கடிதத்தை சம்பந்தப்பட்ட மாணவருக்கு அனுப்பும்.
“ ‘பிரதமர் வித்யா லட்சுமி கார்யகிரம்’ (https://www.vidyalakshmi.co.in/Students) எனும் இணையதளத்தின் மூலமே அனைத்து கல்விக்கடன்களுக்கான விண்ணப்பங்களும் பெறப்பட்டு பரிசீலிக்கப்பட வேண்டும்" என்பதால் இனி கல்விக் கடன் பெற மாணவ-மாணவியர்களும் குடும்பத்தினரும் அலையத் தேவையில்லை.
Also Read | ஐஐடி மெட்ராஸ் ஐஐடி சென்னை என பெயர் மாற்றமா? மத்திய கல்வி அமைச்சர் விளக்கம்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR