2022 NEET PG நுழைவுத் தேர்வு ஒத்திவைக்கப்பட்டது

முதுநிலை மருத்துவ பட்டப்படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு ஒத்திப் போடப்படுவதாக மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது

Written by - Malathi Tamilselvan | Last Updated : Feb 4, 2022, 11:09 AM IST
  • முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு ஒத்திவைப்பு
  • மத்திய சுகாதார அமைச்சகத்தின் அதிரடி அறிவிப்பு
  • நுழைவுத் தேர்வை ஒத்திப் போடக்கோரிய மனு விசாரணைக்கு முன்பே தேர்வு ஒத்தி போடப்பட்டது
 2022 NEET PG நுழைவுத் தேர்வு ஒத்திவைக்கப்பட்டது title=

புதுடெல்லி: முதுநிலை மருத்துவ பட்டப்படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு ஒத்திப் போடப்படுவதாக மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.

தற்போது முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு (NEET 2022), 6-8 வாரங்களுக்கு தள்ளி வைக்கப்படுவதாக மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.

இந்த நுழைவுத் தேர்வு மார்ச் 12-ம் தேதி நடைபெறுவதாக இருந்தது. தற்போது, தேர்வுகள் ஒத்திப் போடப்பட்டுள்ளதால், புதிய தேதியை மத்திய அரசு விரைவில் அறிவிக்கும் என்று கூறப்படுகிறது.

COVID-19 தொற்றுநோயின் மூன்றாவது அலையின் அச்சங்களுக்கு மத்தியில், மத்திய சுகாதார அமைச்சகம் NEET PG தேர்வை 2022 நுழைவுத் தேர்வை 6 முதல் 8 வாரங்களுக்கு ஒத்திவைத்துள்ளது.

2022 ஆம் ஆண்டிற்கான முதுகலை பட்டப் படிப்புகளுக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வை ஒத்திவைக்கக் கோரி ஆறு MBBS மாணவர்கள் மனு தாக்கல் செய்தனர்.

ஜனவரி 25, 2022 அன்று தாக்கல் செய்யப்பட்ட மனு இது. 2022 ஆம் ஆண்டுக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET PG 2022) தேர்வை ஒத்திவைக்கக் கோரிய இந்த மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் இன்று நடைபெறவுள்ளது.

ALSO READ | முதுகலை நீட் தேர்வுக்கு படித்துக் கொண்டிருந்த மாணவி தற்கொலை

அதற்கு முன்னதாக மத்திய சுகாதார அமைச்சகம் முதுகலை பட்டப்படிப்புகளுக்கான நீட் தேர்வை தள்ளி போட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.  

தேர்வுகளுக்கான பதிவு செயல்முறை இன்றுடன் முடிவடையும் நிலையில், தேர்வுகள் ஒத்திப் போடப்பட்டுள்ளன. இன்னும் இந்த நுழைவுத் தேர்வுக்காக பதிவு செய்யாத விண்ணப்பதாரர்கள், தேசிய தேர்வு வாரியத்தின் (NBE) அதிகாரப்பூர்வ வலைத்தளமான nbe.edu.in. என்ற தளத்தில் இருந்து மேலதிக தகவல்களை தெரிந்துக் கொள்ளலாம்.

Also Read |  தமிழக அரசு: நீட் விவகாரத்தில் நாளை மறுநாள் அனைத்துக்கட்சி கூட்டம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News