ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ ஆரோக்கியமான உணவு முறை தான் சிறந்தது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். இரத்த ஓட்டத்தில் இருந்து அதிகப்படியான நீரை அகற்றுவதில் ஆரோக்கியமான உணவுமுறை முக்கிய பங்கு வகிக்கிறது. சிறுநீரகத்தின் சரியான செயல்பாட்டில் உணவு முக்கிய பங்கு வகிக்கிறது, பொட்டாசியம், சோடியம் மற்றும் பாஸ்பரஸ் நிறைந்த உணவுகளை அதிகமாக உட்கொள்வது சிறுநீரக நோய்களை உருவாக்கி மோசமாக்கும். எனவே, சிறுநீரக கோளாறுகளை இயற்கையாகவே தடுக்க உதவும் சில உணவுகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான பழங்களில் பிரக்டோஸ் மற்றும் பொட்டாசியம் அதிக அளவில் உள்ளது, ஆனால் அன்னாசிப்பழம் சிறுநீரக நோயாளிகளுக்கு நன்மையளிக்கிறது. இந்த பழத்தை உணவில் சேர்ப்பது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், சிறுநீரக வீக்கத்தை குறைக்கவும், வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தவும் உதவும்.
மேலும் படிக்க | Night Tips for Mens: திருமண வாழ்க்கை ஜம்முனு இருக்க ஆண்கள் இரவில் இதை செய்யுங்கள்
மற்ற காய்கறிகளுடன் ஒப்பிடும்போது குடைமிளகாயில் பொட்டாசியம் குறைவாக உள்ளது, இது சிறுநீரக நோயாளிகளுக்கு சிறந்த உணவாக அமைகிறது. இதிலுள்ள வைட்டமின் சி ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் சேதத்தை மாற்ற உதவுகிறது. அடுத்ததாக ஸ்ட்ராபெர்ரிகளில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், வைட்டமின் சி, மாங்கனீசு மற்றும் நார்ச்சத்து ஆகியவை நிரம்பியுள்ளன, இது ஒட்டுமொத்த நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த உதவுகிறது. அதேசமயம் இது சிறுநீரக நோயாளிகளுக்கும் சிறந்தது, இது சிறுநீரக நோய்களை இயற்கையாகவே தடுக்க உதவுகிறது.
காளான்களில் வைட்டமின் பி, தாமிரம், மாங்கனீசு மற்றும் செலினியம் ஆகியவை நிரம்பியிருப்பதால் சிறுநீரகங்களுக்கு சூப்பர்ஃபுட் ஆக வேலை செய்கிறது. அதுமட்டுமின்றி இதிலுள்ள நார்ச்சத்து மற்றும் புரதச்சத்து சிறுநீரக நோயாளிகள் மற்றும் சிறுநீரக ஆரோக்கியத்தை மேம்படுத்த டயட்டைப் பின்பற்றுபவர்களுக்கு நன்மையை அளிப்பதாக அமைகின்றன. பைட்டோ கெமிக்கல்களால் நிரம்பிய முட்டைகோஸ் சிறுநீரகங்களுக்கு ஒரு சூப்பர்ஃபுட். இந்த வகை காய்கறியில் நார்ச்சத்து, வைட்டமின் கே, வைட்டமின் சி மற்றும் வைட்டமின் பி இருப்பது மட்டுமின்றி, முட்டைக்கோஸில் பொட்டாசியம், பாஸ்பரஸ் மற்றும் சோடியம் குறைவாக இருப்பதால், சிறுநீரக நோயாளிகளுக்கு இது சிறந்த உணவாக அமைகிறது.
மேலும் படிக்க | கருத்தரிப்பு பிரச்சனைக்கு கணவர் காரணமா? மீள்வதற்கான டிப்ஸ்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR