அசத்தும் ஆயுர்வேதம்: 5 பிரச்சனைகளுக்கு ஒரே தீர்வு!!

Ghee Benefits in Ayurveda: நெய் நம் சமையலில் மட்டுமல்ல, பல நோய்களுக்கான சிகிச்சையிலும் பயன்படுத்தப்படுகின்றது. சுத்தமான நெய்யை தினமும் மூக்கில் விட்டு வந்தால் உடலின் பல பிரச்சனைகள் குணமாகும்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jun 3, 2023, 05:16 PM IST
  • அடிக்கடி உறக்கம் தடைபட்டாலோ அல்லது உறங்க முடியாமலோ இருந்தாலோ, இந்த ஆயுர்வேத தீர்வை முயற்சிக்கலாம்.
  • தினமும் இரவில் படுக்கும் முன் இரண்டு சொட்டு நெய்யை மூக்கில் விடவும்.
  • இதனால் நல்ல தூக்கம் கிடைக்கும்.
அசத்தும் ஆயுர்வேதம்: 5 பிரச்சனைகளுக்கு ஒரே தீர்வு!!  title=

ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை, வீணான உணவுப் பழக்கம், உடற்பயிற்சியின்மை போன்ற காரணங்களால் இன்றைய காலத்தில் பல வகையான நோய்கள் மக்களை அட்கொண்டு பாடாய் படுத்துகின்றன. இதனால் பலர் மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள். மூப்பை அடைவதற் முன்னரே நோய்கள் நம்மை அடைந்து விடுகின்றன. இன்னும் பல வித உடல் நல குறைபாடுகள் ஏற்படுகின்றன. உடல் மற்றும் மன உபாதைகளில் இருந்து விடுபட சிலர் மருத்துவமனைகளை நாடுகின்றனர். இன்னும் சிலர் ஆயுர்வேதத்தில் தங்கள் அனைத்து நோய்களுக்கும் வழியைத் தேடுகின்றனர். 

ஆயுர்வேதத்தின் சிறப்பு 

ஆயுர்வேதத்தின் சிறப்பு என்னவென்றால், பல நோய்களுக்கான வீட்டு வைத்தியம் அதில் உள்ளது. இதைப் பயன்படுத்துவதற்கு ஒருவர் மருத்துவமனைகளுக்குச் செல்ல வேண்டியதில்லை. இதற்கு அதிக பணம் செலவழிக்க வேண்டியதும் இல்லை. நீங்கள் சில கட்டுப்பாடுகளை பின்பற்றி பொறுமையாக இருந்தால் போதும். ஆயுர்வேதம் உங்களை ஆரோக்கியமான வாழ்வை நோக்கி அழைத்துச்செல்லும். 

இந்த பதிவில் ஆயுர்வேதத்தின் அத்தகைய ஒரு சிகிச்சையைப் பற்றிதான் காணவுள்ளோம். இது ஒரே நேரத்தில் பல நோய்களை குணப்படுத்தும் வல்லமை கொண்டது. நெய் நம் சமையலில் மட்டுமல்ல, பல நோய்களுக்கான சிகிச்சையிலும் பயன்படுத்தப்படுகின்றது. சுத்தமான நெய்யை தினமும் மூக்கில் விட்டு வந்தால் உடலின் பல பிரச்சனைகள் குணமாகும் என்கின்றனர் நிபுணர்கள்.

மேலும் படிக்க | ரிஸ்க் இல்லாத வாழ்க்கைக்கு உத்தரவாதம் தரும் கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்தும் உணவுகள்

இந்த நன்மைகளைப் பெறுவீர்கள்

1. மூளைக்கு நன்மை: மூக்கில் நெய் விடுவதால் மூளையின் செயல்பாடுகள் மேம்படும். இது நரம்புகளை பலப்படுத்துகிறது. நினைவாற்றலை அதிகரிக்க உதவுகிறது. பதட்டம், மன அழுத்தம் போன்ற மனநலப் பிரச்சனைகளில் இருந்தும் இந்த செய்முறை நிவாரணம் அளிக்கிறது.

2. தலைவலியில் இருந்து நிவாரணம்: நீங்கள் அடிக்கடி தலைவலி பிரச்சனையை எதிர்கொண்டாலோ அல்லது உங்களுக்கு ஒற்றைத் தலைவலி பிரச்சனை இருந்தாலோ, தினமும் இரவில் தூங்கும் முன் மூக்கில் நெய் விட வேண்டும். இப்படி செய்வதால் தலைவலியில் இருந்து விடுபடுவது மட்டுமின்றி, ஒற்றைத் தலைவலியில் இருந்தும் நிவாரணம் கிடைக்கும்.

3. நல்ல உறக்கம்: அடிக்கடி உறக்கம் தடைபட்டாலோ அல்லது உறங்க முடியாமலோ இருந்தாலோ, இந்த ஆயுர்வேத தீர்வை முயற்சிக்கலாம். தினமும் இரவில் படுக்கும் முன் இரண்டு சொட்டு நெய்யை மூக்கில் விடவும். இதனால் நல்ல தூக்கம் கிடைக்கும்.

4. பளபளக்கும் சருமம்: பளபளப்பான சருமத்தைப் பெற விரும்புபவர்களும் கண்டிப்பாக மூக்கில் நெய் விட்டு பார்க்கலாம். இதனால் முகப் புள்ளிகள் மற்றும் வறண்ட சருமம் போன்ற பிரச்சனைகள் நீங்கும்.

5. அழகான கூந்தல்: கூந்தல் பிரச்சனையுடன் போராடுபவர்களும் மூக்கில் நெய் விட வேண்டும். இது முடி உதிர்வு பிரச்சனையை தீர்ப்பது மட்டுமின்றி, கூந்தலின் வலிமையையும் பராமரிக்கும்.

காலையில்  நெய்

வெறும் வயிற்றில் நெய் சாப்பிட்டால் அதிக நன்மைகள் கிடைக்கும். ஆம், பல ஆய்வுகள் மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தின் படி, காலையில் வெறும் வயிற்றில் நெய் சாப்பிடுவதால் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கின்றன. அதுவும் அதிகாலையில் ஒரு ஸ்பூன் நெய் உட்கொண்டு, பின் ஒரு டம்ளர் சுடுநீர் குடிப்பதால், நாம் நினைத்திராத அளவில் உடல் ஆரோக்கியம் மேம்படுமாம்.

எனினும், மூக்கில் நெய் விட்டு இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் முன்னர், நீங்கள் பயன்படுத்து நெய் சுத்தமானதா என்பதை உறுதிபடுத்திக்கொள்ள வேண்டும். உங்களுக்கு சந்தேகம் இருந்தால்ம் ஆயுர்வேத நிபுணரிடம் சென்று ஆலோசனை பெறலாம்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | வெள்ளரிக்காய் பக்க விளைவுகள்: இந்த நேரத்தில் வெள்ளரிக்காய் சாப்பிடவே கூடாதா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News